# TrichyXpress.com - Trichy News, Tamilnadu News, Politics News > Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com ## Posts - [தேர்தல் கமிஷனுக்கே ‘கண்ணா மூச்சிக்காட்டும்’ ஊடகங்களின் பேக்கேஜ் சிஸ்டம்.ஊடக வெளிச்சத்தில் இருந்து மறையும் விஜய்,சீமான் உள்ளிட்ட கட்சியினர்.](https://trichyxpress.com/2026/04/18/the-package-system-of-media-outlets-playing-a-game-of-hide-and-seek-even-with-the-election-commission-itself-party-members-including-vijay-and-seeman-are-vanishing-from-the-media-spotli/): தேர்தல் கமிஷனுக்கு ‘கண்ணா மூச்சிக்காட்டும்’ ஊடகங்களின் பேக்கேஜ் சிஸ்டம்.   பேக்ஜ் தொகை மிக மிக அதிகமாக உள்ளதால் நடிகர் விஜய்யின் த.வெ.க., சீமானின் நாம் தமிழர், வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஊடகத்திற்கு கணக்கில் வராமல் பிளாக்கில் பேக்கேஜ் செலவு செய்ய முடியாத காரணத்தால் மீடியா வெளிச்சத்தில் இருந்து சற்று தள்ளியே நிற்கும் அவலம்   வேட்பாளர் செலவு தொகை உச்சவரம்பு அதிகப்படுத்தப்படுமா ?   சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு தொகுதிக்கு ரூ. 40 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனின் சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனின் அப்சர்வர்கள் ஒவ்வொரு வேட்பாளரையும் வாகனத்தில் பின் தொடர்ந்து, எவ்வளவு நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது, எவ்வளவு பட்டாசு வெடிக்கப்படுகிறது, எவ்வளவு பிட் நோட்டீஸ் விநியோகிக்கப்படுகிறது, எவ்வளவு சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது, எவ்வளவு வாகனங்கள் பயன்படுத்த படுகிறது, டிவி மற்றும் […] - [ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரமமக்களை திரட்டி பிரம்மாண்ட வரவேற்பு அளித்த புங்கனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கார்த்தியை வெகுவாகப் பாராட்டிய அதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் மனோகரன்.](https://trichyxpress.com/2026/04/18/aiadmk-srirangam-constituency-candidate-manoharan-profusely-praised-punganur-panchayat-union-councilor-karthi-for-mobilizing-over-a-thousand-villagers-to-accord-a-grand-reception/): திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திருச்சி மாநகராட்சியின் 1 முதல் 7 வாா்டுகள், ஊரகப் பகுதிகளில் அந்தநல்லூா் ஒன்றியம், மணிகண்டம் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டத்தின் கோமங்கலம் பகுதியை உள்ளடக்கிய அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி.முன்னாள் முதல்வா் மறைந்த ஜெ. ஜெயலலிதாவை 2011-இல் வெற்றி பெற வைத்த தொகுதி இது.   108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் இத்தொகுதியின் அடையாளச் சின்னமாக இருக்கிறது. முக்கொம்பு சுற்றுலாத் தலத்தின் ஒரு பகுதி, ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா, வயலூா் முருகன் கோயில், தாயனூா் வாழை ஆராய்ச்சி மையம், நவலூா்குட்டப்பட்டு அன்பில் தா்மலிங்கம் வேளாண் அறிவியல் கல்லூரி, தனியாா் கல்லூரிகளை தன்னகத்தே கொண்டது.   இத்தொகுதியில் 9 முறை அதிமுகவும், 4 முறை காங்கிரஸும், 2 முறை திமுகவும், ஜனதா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு முறையும் வென்றுள்ளன. தற்போதைய தோ்தலில்,   […] - [திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு](https://trichyxpress.com/2026/04/18/intensive-vote-canvassing-is-underway-in-the-trichy-east-constituency-led-by-r-k-raja-the-former-trichy-district-president-of-the-vijay-makkal-iyakkam/): திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளர் தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கு காந்தி மார்க்கெட், பெரிய கடைவீதி, பெரியகம்மாளத்தெரு, சின்ன கம்மாளத்தெரு. பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிவித்துள்ள வாக்குறுதிகளை பொதுமக்கள் இடம் எடுத்துக்கூறி விஜய் வெற்றி பெற வேண்டிய அவசியத்தையும் கிழக்குத் தொகுதியில் விஜய் ஏற்படுத்த கூடிய மாற்றத்தையும் எடுத்துக் கூறி விசில் சின்னத்தில் வாக்குகள் கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் உப்புப்பாறை ஞானவேல், நடராஜன், பாரதிராஜா, ரேணுகா தேவி, சுரேஷ்குமார், சின்னகடைவீதி தனசேகரன், சதீஷ்குமார், ஹரிஹரன், செம்பட்டு அண்ணாத்துரை , உள்பட பலர் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிப்பு நிகழ்வில் ஈடுபட்டனர் - [கு.ப.கிருஷ்ணன் தனது தற்குறி கூட்டத்தை ஒழுங்காக வழிநடத்த வேண்டும். திருச்சியில் லீமா ரோஸ் மகன் சார்லஸ் மார்ட்டின் பேட்டி](https://trichyxpress.com/2026/04/18/ku-pa-krishnan-must-properly-guide-his-bunch-of-ignoramuses-charles-martin-son-of-lima-rose-in-an-interview-in-trichy/): சொந்த மாமியாரை தோற்கடிப்பதற்காக சதி வேலை செய்து வருகிறார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா என அவரது மைத்துனரும், லஜக தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றம்சாட்டியுள்ளார்.   மேலும், லால்குடி தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தங்கள் கட்சியினரை சரியாக வழிநடத்த வேண்டும் என்றும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.   திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் திமுக சார்பில் பாரிவள்ளல் வேட்பாளராக களம் காண்கிறார். அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறவர் லீமா ரோஸ். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி. தவெக சார்பில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் போடியிடுகிறார். நாதக சார்பில் மதன் போட்டியிடுகிறார்.   லீமா ரோஸ் மார்ட்டின் தமிழ்நாட்டிலேயே அதிக சொத்துகளை வைத்திருக்கக் கூடிய பணக்கார வேட்பாளர். இவரது மகன், புதுச்சேரியில் லட்சிய ஜனநாயகக் கட்சி தலைவர். இவரது மருமகன் தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா. இதனால் லால்குடி தொகுதி கவனம் பெற்றிருக்க கூடிய தொகுதியாக உள்ளது. […] - [திருச்சி பொன்மலையில் ஒரே நாளில்இரண்டு வீடுகளில் திருட்டு](https://trichyxpress.com/2026/04/18/two-house-burglaries-in-a-single-day-in-ponmalai-trichy/): திருச்சி பொன்மலை நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் நகை பணம் திருட்டு.   பொன்மலையில் அடுத்தடுத்து சம்பவம் . 2 வீடுகளில் ரூ ஒரு லட்சம் நகை,பணம் திருட்டு  மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 57) இவர் இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் ஆலோசகராக உள்ளார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற பாஸ்கர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சிடைந்தார். பிறகு வீட்டின் உள்ள சென்ற போது பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க மோதிரம்,தங்க கொக்கி மற்றும் வெள்ளி விளக்கு, பணம் 2 ஆயிரம் என ரூபாய் 21 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் பணம் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து பொன்மலை காவல் நிலைய […] - [மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணும் போது, மகேஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற செய்தியை நீங்கள் எனக்குப் பரிசாக வழங்க வேண்டும்.பொதுமக்கள் இடையே பேசிய திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி](https://trichyxpress.com/2026/04/18/you-should-give-me-the-news-that-mahesh-won-by-a-large-margin-when-the-votes-are-counted-on-may-4th-speaking-among-the-public-dmk-candidate-from-thiruverumpur-constituency-mahesh-poiyamozhi/): தமிழக அணி தான் எப்போதும் முதலிடம் திருவெறும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு. “தற்போது நடைபெறுவது தமிழ்நாடு அணியா அல்லது டெல்லி அணியா என்பதற்கான போர்; இதில் தமிழ்நாடு அணி தான் என்றுமே முதலிடம் பிடிக்கும்” என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் தொகுதி வேட்பாளருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சரும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) திருச்சி மாநகரம், காட்டூர் பகுதிக்குட்பட்ட 38-வது வார்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காமராஜர் நகர், வேணுகோபால் நகர், புகழ் நகர் மற்றும் திருநகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து அவர் ஆதரவு திரட்டினார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றியதாவது: “கொளுத்தும் வெயிலிலும் எனக்காகக் காத்திருந்து வரவேற்ற எனது தாய் வீடான திருவெறும்பூர் தொகுதி மக்களுக்குத் தலை வணங்குகிறேன். இந்தப் போட்டியில் தமிழ்நாடு […] - [திருச்சி நீதிமன்றத்தில் இன்று மிகுந்த பரபரப்புடன் நடந்த வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.](https://trichyxpress.com/2026/04/17/the-bar-association-election-was-held-today-at-the-trichy-court-amidst-great-excitement/): திருச்சி நீதிமன்றத்தில் இன்று மிகுந்த பரபரப்புடன் நடந்த வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.   வழக்கறிஞர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.   திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக எஸ்.பி.கணேசன்,செயலாளராக சி. முத்துமாரி மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.இப்போது 136 -வது தலைவர் ,செயலாளர்,பொருளாளர்,துணைத் தலைவர்கள் இரண்டு பேர்,இணைச் செயலாளர்கள் இரண்டு பேர்,செயற்குழு உறுப்பினர்கள் என 10 நபர்களுக்கான பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.இதில் தலைவர் பதவிக்கு பாலசுப்பிரமணியன்,தனபால் ஆகிய இரண்டு பேரும்,செயலாளர் பதவிக்கு தீனதயாளன், ஆரோக்கியசாமி,ராஜா,,கண்ணன் ஆகிய நான்கு பேரும், பொருளாளர் பதவிக்கு சுதர்சன், பிரதீப் ஆகிய இரண்டு பேரும்,துணைத் தலைவர்கள் பதவிக்கு மதியழகன், புவனேஸ்வரி உட்பட பலரும், இதேபோல் இணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 30-க்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர்.இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர்களது ஆதரவு வழக்கறிஞர்கள் தீவிரமாக நோட்டீசுகளை வழங்கி வாக்குகள் சேகரித்தனர். இதையடுத்து வாக்குப்பதிவு மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் நீண்ட […] - [வெயிலின் தாக்கத்தை விட ஸ்டாலின் அலை தான் அதிகம். திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஸ் பொய்யாமொழி பரப்புரை](https://trichyxpress.com/2026/04/17/the-stalin-wave-is-more-intense-than-the-scorching-heat-mahesh-poyyamozhi-dmk-candidate-for-the-thiruverumbur-constituency-campaign-speech/): வெயிலின் தாக்கத்தை விட ஸ்டாலின் அலை தான் அதிகம். திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரப்புரை   திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று திருச்சி மாநகரம் காட்டூர் பகுதிக்கு உட்பட்ட 38-வது வார்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காட்டூர் பிள்ளையார் கோவில் தெரு, பாப்பாக்குறிச்சி, நெய்குளம், பாரி நகர் மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து அவர் வாக்கு கேட்டார். அப்போது அவர் பேசியது :- கடந்த 2024 முதல் 2026 வரையிலான திராவிட மாடல் ஆட்சியில், இந்த 38-வது வார்டில் மட்டும் சுமார் 25 கோடியே 55 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள், பள்ளிக் கட்டிடங்கள், சுற்றுச்சுவர் மற்றும் சிறு பாலங்கள் போன்ற எண்ணற்ற பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் […] - [திருவெறும்பூர் தொகுதியில் எதுவும் செய்யாத மகேஷ் பொய்யாமொழி மீண்டும் தேவையா?திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார்](https://trichyxpress.com/2026/04/17/is-mahesh-poyyamozhi-who-has-done-nothing-for-the-thiruverumbur-constituency-needed-again-kumar-aiadmk-candidate-for-thiruverumbur-constituency/): அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், அவர்களின் நல்லாசி பெற்ற திருவெறும்பூர் வெற்றி வேட்பாளர் ப.குமார் அவர்கள் இன்று இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட, திருவெறும்பூர் பகுதியான மலைக்கோயில் பஸ் ஸ்டாப் , வ. உ .சி .தெரு, ராஜா வீதி, கள்ளர் தெரு, சொன்னது தெரு,விஜயநகரம், IAS நகர், உபகர மாதா கோவில், இந்திரா நகர், வடக்கு கல்லணை ரோடு பஸ் ஸ்டாப், பகவதிபுரம், 123 திருக்கல் கூத்தப்பர் ரோடு, வ உ சி நகர் 123 தெரு, வின்சென்ட் காலனி, குட்செட் ரோடு ஒன்றியம் காலனி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பொது மக்களிடம் பேசிய போது:- வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின் உதயாநிதி மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தண்டிக்கப்படுவார்கள்.மக்களால் […] - [திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த 2 நபர்கள் கைது](https://trichyxpress.com/2026/04/17/two-individuals-arrested-for-selling-narcotic-pills-in-the-palakkarai-area-of-trichy/): திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த 2 நபர்கள் கைது   திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாலக்கரை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர் அப்போது காஜாபேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரகாஷ்ராஜ் (வயது 20) சபரி ராகவன் ஆகிய இருவரும் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாடகரை காவல் நிலைய போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த போதை மாத்திரைகள் மற்றும் ஊசி பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். - [திருச்சி ஏர்போர்ட் அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த இளம் மனைவி மாயம்.](https://trichyxpress.com/2026/04/17/young-wife-living-separated-from-husband-goes-missing-near-trichy-airport/): திருச்சி ஏர்போர்ட் அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த இளம் மனைவி மாயம்.    ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் மரியா வேளாங்கண்ணி (வயது 25) இவரது கணவன் பெயர் ரிச்சர்டு. திருமணமாகி ஆறு வருடம் ஆகிறது.குழந்தை இல்லை. ரிச்சர்டு மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த காரணத்தால் தனது கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் மரிய வேளாங்கண்ணி வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15 ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மரிய வேளாங்கண்ணி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது தாய் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் டெய்சி ஏர்போர்ட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மரிய வேளாங்கண்ணியை தேடி வருகின்றனர். - [திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் .](https://trichyxpress.com/2026/04/17/unidentified-male-body-found-in-a-decomposed-state-in-edamalaippatti-pudur-trichy/): திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் .     யார் அவர் போலீசார் விசாரணை .   திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பஞ்சப்பூர் சோலார் பேனல் பின்புறம் உள்ள வயல்வெளியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அழகிய நிலையில் இறந்த கிடந்தார்.இறந்து கிடந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ?என்ற முழு விவரம் தெரியவில்லை.   தகவல் அறிந்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகிய நிலையில் கிடந்த முதியவர் உடலை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை […] - [ஏராளமான இளைஞர்கள் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து ஆதரவு](https://trichyxpress.com/2026/04/17/a-large-number-of-youths-personally-met-the-dmk-candidate-for-the-thiruverumbur-constituency-mahesh-poyyamozhi-and-extended-their-support/): 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சில நாட்களே உள்ள நிலையில் திருச்சி திருவரம்பூர் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வேட்பாளர் முனைவர் மகேஷ் பொய்யா மொழி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அமைச்சரின் வேகத்தையும் விவேகத்தையும் கண்டு பல்வேறு கட்சியினர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுகவில் இணைந்து வருகின்றனர்.மேலும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் இன்று திருவெறும்பூர் தொகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள்  திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் பகுதி 42 அ வட்ட கழக துணைச் செயலாளர் மத்தியாஸ் அவர்களின் தலைமையில் ஜல்லிக்கட்டு பேரவை உறுப்பினர்கள் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து அவரது வெற்றிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். - [திருச்சி காந்தி மார்க்கெட் இங்கிருந்து மாற்றப்படாது, கிழக்கு தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக நடைபெற்ற பிரச்சாரத்தின் போது அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.](https://trichyxpress.com/2026/04/17/trichy-gandhi-market-will-not-be-shifted-from-here-ministers-assured-during-a-campaign-in-support-of-the-east-constituency-candidate/): திருச்சி காந்தி மார்க்கெட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்தல் பிரச்சாரம்.   திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்களை ஆதரித்து, தமிழக அமைச்சர்கள் இன்று காந்தி மார்க்கெட் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.   நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான திருவரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமைகாலை முதலே நடைபயணமாகச் சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.   பிரச்சாரத்தின் போது வியாபாரிகளிடையே பேசிய அமைச்சர்கள், திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினர். குறிப்பாக: திமுக ஆட்சியில் காந்தி மார்க்கெட் இங்கிருந்து மாற்றப்படாது, இதே இடத்திலேயே தொடர்ந்து செயல்படும்” என உறுதி அளித்தனர். […] - [வாக்களிக்காத மக்களுக்கும் அரணாக விளங்குவது இந்த திமுக அரசு தான். திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ்](https://trichyxpress.com/2026/04/16/it-is-this-dmk-government-that-stands-as-a-bulwark-even-for-those-who-did-not-cast-their-votes-mahesh-dmk-candidate-for-the-thiruverumbur-constituency/): வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என அனைவருக்கும் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை “வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் என பாகுபாடின்றி அனைவருக்கும் அரணாக இருப்பதே திராவிட மாடல் அரசு” என திருவெறும்பூர் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்தல் பிரசாரத்தின் போது பேசினார். திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாநகரம், பொன்மலை பகுதி 44-வது வார்டில் (மேல கல்கண்டார் கோட்டை, உடையார் தெரு, விவேகானந்தர் நகர், மிலிட்டரி காலனி உள்ளிட்ட பகுதிகளில்) அமைச்சர் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்: தொகுதி வளர்ச்சிப் பணிகள் நிதியொதுக்கீடு: கடந்த 2021 முதல் 2026 வரையிலான திராவிட மாடல் ஆட்சியில், இந்த 44-வது வார்டில் மட்டும் ₹19.47 கோடி மதிப்பீட்டில் சாலைகள், குடிநீர் வசதி, சிறுபாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு மக்கள் […] - [நடிகர் விஜய்க்காக திருச்சி 32 வது வார்டில் ஜெரால்டு மில்டன் தலைமையில் வாக்குகள் சேகரித்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்](https://trichyxpress.com/2026/04/16/office-bearers-of-the-tamilaga-vettri-kazhagam-canvassed-for-votes-on-behalf-of-actor-vijay-in-ward-32-of-trichy-under-the-leadership-of-gerald-milton/): திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கரை பகுதி 32 வது வார்டில் மரியம் நகர், படையாட்சி தெரு, அன்னை நகர் பகுதிகளில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் , தமிழக வெற்றிக்கழக நிர்வாகியுமான ஜெரால்டு மில்டன் தலைமையில் தவெக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான விஜய்க்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திருச்சி கிழக்கு தொகுதி தற்போது நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது காரணம் நடிகர் விஜய் இத்தொகுதியில் போட்டியிடுவது தான் . இந்த தொகுதியில் விஜய் நேரடியாக வீதி வீடாக சென்று வாக்கு சேகரிக்க இல்லாவிட்டாலும் அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விசில் உடன் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று ஜெரால்ட் மில்டன் தலைமையில் தமிழக வெற்றிக்கு கழக தலைவர் விஜய் அறிவித்துள்ள 10 உத்தரவாதங்களை பொது மக்களிடம் எடுத்துக் […] - [அதிமுக அரசின் சாதனைகளையும், வாக்குறுதிகளையும் எடுத்து கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார்.](https://trichyxpress.com/2026/04/16/kumar-the-aiadmk-candidate-for-the-trichy-thiruverumbur-constituency-is-actively-canvassing-for-votes-by-highlighting-the-achievements-and-promises-of-the-aiadmk-government/): திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காருண்யா நகர், பொன்னேரிபுரம், கொட்டப்பட்டு, மலையடிவாரம், கல்கண்டா கோட்டை பகுதிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் குமார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், அவர்களின் நல்லாசி பெற்ற திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ப.குமார் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கோரி இளந்தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து அதிமுக ஆட்சிக்காலத்தின் சாதனைகளையும் தற்போது பொது செயலாளர் அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தின் போது  அதிமுக பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பகுதி செயலாளர் சங்கர்,அமமுக தொகுதி பொறுப்பாளர் சசி, எம் ஆர் வி நாகராஜ் வட்ட செயலாளர் ஜெயசூர்யா,நசீர், ராஜப்பா,அதிமுக நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சேர்ந்த நிர்வாகிகள்,மாவட்ட கழக நிர்வாகிகள், […] - [யாதவர்களுக்கு 6 தொகுதிகள் வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமிக்குதமிழ் மாநில யாதவ மகாசபையின் நிறுவனர் திருவேங்கடம் யாதவ் திருச்சி மாநகர செயலாளர் சீனிவாசனுடன் சென்று நேரில் நன்றி](https://trichyxpress.com/2026/04/16/thiruvenkadam-yadav-founder-of-the-tamil-nadu-state-yadav-mahasabha-accompanied-by-trichy-city-secretary-srinivasan-personally-met-and-expressed-his-gratitude-to-edappadi-k-palaniswami-for-allocat/): யாதவர்களுக்கு 6 தொகுதிகள் வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமிக்குஎம்.திருவேங்கடம் யாதவ் நேரில் நன்றி   தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்குபவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ் மாநில யாதவ மகாசபையின் நிறுவனர் ஸ்ரீரங்கம் எம்.திருவேங்கடம் யாதவ் இயக்க நிர்வாகிகளுடன் சந்தித்தார்   அப்போது,நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வில் 6 யாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கியமைக்காக எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருவேங்கடம் யாதவ் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்ததோடு அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவோம் என உறுதியளித்தார்   இந்நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் துணைமேயருமான ஜெ.சீனிவாசன், ,தமிழ் மாநில யாதவ மகாசபை மாநில இளைஞரணி தலைவர் விஜய் கிருஷ்ணா யாதவ், ஒருங்கிணைப்பாளர் எடத்தெரு பார்த்தசாரதி, மாணவரணி லஷ்மிகாந்தன் உள்பட பலர் உடனிருந்தனர் - [திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் கிழக்கு தொகுதிகள் போட்டியிடும்தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை சசிகலா பிரச்சாரம் செய்கிறார்.அனைவரும் திரளாக பங்கேற்க மாவட்ட பொறுப்பாளர்கள் அழைப்பு](https://trichyxpress.com/2026/04/16/sasikala-is-campaigning-this-evening-in-support-of-her-partys-candidates-contesting-in-the-srirangam-and-east-constituencies-of-trichy-district-functionaries-have-issued-a-call-for-everyone-to-part/): சசிகலா தற்போது அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (AIPTMMK) என்ற புதிய கட்சியைத் தொடங்கி வழிநடத்தி வருகிறார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த கட்சியை அறிவித்த அவர், ‘தென்னந்தோப்பு’ சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார்.ராமதாஸ் அணியுடன் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்.   இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் A.விஜய் அவர்களை ஆதரித்து இன்று வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் ஸ்ரீரங்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நந்தக்குமார் அவர்களை ஆதரித்து கே.கே. நகரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிகழ்வுகளில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக பங்கேற்குமாறு திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னாள் காவல்துறை அதிகாரி கோவிந்தராஜ், ,மெஜஸ்டிக் ஆலாம் பகுருதீன் , ஒத்தக்கடை செந்தில் ஆகியோர் வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர். - [திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடம் தவெக தலைவர் விஜய்க்கு தலைமை கழக பேச்சாளர் உடன் வாக்குகள் சேகரித்த மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள்](https://trichyxpress.com/2026/04/16/administrators-from-the-malaikottai-area-accompanied-by-a-head-office-orator-canvassed-for-votes-for-tvk-leader-vijay-who-is-contesting-in-the-trichy-east-constituency/): வருகின்ற 2026 சட்டமன்றம் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் போட்டியிடுவதால் இந்த தொகுதியில் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.   நடிகர் விஜய்க்கு விசில் சின்னத்தில் வாக்குகள் கேட்டு திருச்சியில் அவரது தொண்டர்கள் தீவிர வாக்கு செய்வதற்கு ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மலைக்கோட்டை பகுதி 17வது மக்களிடம் மாவட்ட பொறுப்பாளர் கரிகாலன் தலைமையில் தலைமைக் கழக பேச்சாளர் முனைவர் சம்பத்குமார் தமிழக வெற்றிக் கழக தலைவர் அறிவித்துள்ள வாக்குறுதிகளை எடுத்து கூறி வாக்குகள் சேகரித்தார். அவர்களுடன் இணைந்து மலைக்கோட்டை பகுதி செயலாளர் சதீஷ் , ,இணைச் செயலாளர் ராக்போர்ட் ராஜேஷ் ,பொருளாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள், மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர். - [திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என் நேரு தீவிர வாக்கு சேகரிப்பு. பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் சிறப்பான ஏற்பாடு.](https://trichyxpress.com/2026/04/16/minister-k-n-nehru-engages-in-intensive-campaigning-in-the-trichy-west-constituency-excellent-arrangements-made-by-pon-nagar-area-secretary-mohandas/): வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில்அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கழக அமைப்புச் செயலாளரான அமைச்சர் கே என் நேரு மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்,ஒன்பது தொகுதிக்கும் சென்று பம்பரமாக சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வந்தாலும் ஓய்வின்றி தனக்கு மேற்கு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலை பொன்னகர் பகுதிக்கு உட்பட்ட பஞ்சப்பூர். ,கருமண்டபம்,,பொன்னகர், மிளகுபாறை பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அமைச்சருக்கு பொன்னாகப் பகுதி செயலாளர் மோகன்தாஸ் சிறப்பாக வரவேற்பு அளித்தார்.மேலும் பகுதி முழுவதும் கட்சி கொடிகள் மற்றும் தோரணங்கள் கட்டி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். விதி வீதியாக நடந்து சென்ற அமைச்சர் உடன் சென்று பகுதி செயலாளர் மோகன்தாசும் அமைச்சருக்காக வாக்குகள் சேகரித்தார்.இந்த நிகழ்வில் 55வது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் மற்றும் வட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் என ஏராளமானோர் அமைச்சருடன் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். - [மகேஸ் பொய்யாமொழி வெற்றிக்காக பாடுபடப் போவதாக அறிவித்த பாஜக நிர்வாகிகள். திருவெறும்பூர் தொகுதியில் பரபரப்பு](https://trichyxpress.com/2026/04/16/bjp-executives-announced-that-they-will-work-hard-for-mahesh-poiyamozhis-victory-tension-in-thiruverumpur-constituency/): திமுகவில் இணைந்த பாஜக நிர்வாகிகள்:   திருவெறும்பூர் தொகுதி தேர்தல் களம் அதிரடி: ​ ​திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.   ​திருவெறும்பூர் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பாஜகவின் கீழ் கண்ட நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்: ​கோகுல் – திருவெறும்பூர் நகர் மண்டல் பொதுச் செயலாளர். ​இலக்கியா மதி – திருவெறும்பூர் நகர் மண்டல் கிளைத் தலைவர். ​தீபக் ராஜ் – திருவெறும்பூர் நகர் மண்டல் கிளைத் தலைவர். ​ ​”கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்கள் நலப் பணிகளால் ஈர்க்கப்பட்டு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வெற்றிக்காக பாடுபடப் போவதாக” இணைந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். ​மாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, திருவெறும்பூர் […] - [திருச்சி திருவெறும்பூர் திடீர் திருப்பம். திமுக வேட்பாளர் மகேஸ் பொய்யாமொழிக்கு சுயேச்சை வேட்பாளர் சுப்புலட்சுமி ஆதரவு.](https://trichyxpress.com/2026/04/15/sudden-twist-in-trichys-thiruverumbur-constituency-independent-candidate-subbulakshmi-extends-support-to-dmk-candidate-mahesh-poyyamozhi/): அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு சுப்புலட்சுமி ஆதரவு.   திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கிய அரசியல் மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முத்திரையர் அரசியல் களம் அமைப்பின் சார்பில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த சுப்புலட்சுமி அவர்கள், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், தான் இனி வரும் நாட்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.     மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் முனைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்குத் தனது முழுமையான ஆதரவை சுப்புலட்சுமி வழங்கியுள்ளார்.   தொகுதியின் வளர்ச்சி மற்றும் முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல இக்கூட்டணியே சிறந்தது எனக் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தனது ஆதரவாளர்களும், முத்திரையர் அரசியல் களம் அமைப்பினரும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். - [காலையில் கதிரவன் வழங்கிய கூப்பனால் ஒரு உயிர் போனது.மாலையில் நேருவின் அட்டகாசம் . திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் நேருவின் சார்பில் ரூ.8000 கூப்பன் வழங்கிய நிர்வாகிகள் .](https://trichyxpress.com/2026/04/15/in-the-morning-a-life-was-lost-due-to-a-coupon-distributed-by-kathiravan-in-the-evening-it-was-nehrus-high-handedness-functionaries-distributed-coupons-worth-%e2%82%b98000-in-the-trichy-wes/): திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிரவன் சார்பில் டம்மி ரூ.8000 கூப்பன் வழங்கியதில் முறைகேடு என்பதை தட்டிக் கேட்ட தலித் பெண்ணை ஆபாசமாக திட்டி தாக்கியதில் அப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   அந்த பிரச்சனை ஆறாத நேரத்தில் மாலை திருச்சி உறையூரில் மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சர் கே.என். நேரு அறிவுறுத்தலின் பேரில் உறையூர் பகுதி செயலாளர் இளங்கோ, வட்ட செயலாளர் திப்பு சுல்தான் ஆகியோர் நிர்வாகிகளுடன் சென்று உறையூர் பகுதி முழுவதும் திமுக அரசு வெளியிட்டுள்ள ரூ.8000 கூப்பனை டம்மியாக அப்பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தேர்தல் பறக்கும் படையினர் அப்பொழுது சென்று டம்மி கூப்பனை வழங்கிய 6 நபர்களை அழைத்துச் சென்று உறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அங்கு அமைச்சர் கூறியதாக இளங்கோ, வட்ட செயலாளர் திப்பு சுல்தான் உள்ளிட்ட 5 பேரை விடுவித்தனர் என கூறப்படுகிறது.   இதில் […] - [தொகுதி மறுவரையறை ஜனநாயகத்திற்கு, அரசியல் அமைப்புக்கு ,கூட்டாட்சிக்கு எதிரானது. திருச்சியில் துரை வைகோ பேட்டி](https://trichyxpress.com/2026/04/15/constituency-delimitation-is-contrary-to-democracy-the-constitution-and-federalism-durai-vaiko-in-an-interview-in-trichy/): தொகுதி மறுவரையறை ஜனநாயகத்திற்கு, அரசியல் அமைப்புக்கு ,கூட்டாட்சிக்கு எதிரானது   திருச்சியில் துரை வைகோ எம்.பி. பேட்டி   திருச்சி எம்.பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது :-   தொகுதி மறுவரையறை மூலம் தொகுதிகளின் எண்ணைக்கைகளை அதிகரிக்கவும், நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வர மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில் அவசர அவசரமாக இதை கொண்டு வருகிறார்கள். பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வரவேற்கிறோம் ஆனால் தொகுதி மறுவரையை என்கிற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் தான் பாதிக்கப்படும். 2011 மக்கள் தொகை கணக்கின் படி அது நடைமுறைப்படுத்தப்படும் என்கிறார்கள். அப்படி செய்யும் பொழுது அதில் மிகப்பெரிய பாதிப்பை தான் ஏற்ப டுத்தும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாதததால் இந்த மசோதா நிறைவேற்றப்படாது […] - [மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள் ஆபாசமாக பேசி தாக்கியதால் மனம் உடைந்த தலித் இளம் பெண் தற்கொலை.நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம் ?](https://trichyxpress.com/2026/04/15/a-young-dalit-woman-commits-suicide-heartbroken-after-being-verbally-abused-and-physically-assaulted-by-supporters-of-kathiravan-the-dmk-candidate-for-the-mannachanallur-constituency-will-the-elect/): திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம், 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த சிந்துஜா (வயது 25) என்ற இளம்பெண், திமுகவினரின் அத்துமீறல் மற்றும் அவமதிப்பு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.   சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-   திமுக சார்பில் வழங்கப்படுவதாகக் கூறப்படும் ரூ.8,000 மதிப்பிலான தேர்தல் டம்மி கூப்பன்கள் விநியோகத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகச் சிந்துஜா அங்குள்ள மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவு திமுக நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.   அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, அங்கிருந்த திமுகவினர் சிந்துஜாவை மிகக் கேவலமான ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஒரு பெண்ணை, அதுவும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரைப் […] - [திருச்சி காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை](https://trichyxpress.com/2026/04/15/loader-at-trichy-gandhi-market-commits-suicide/): திருச்சி காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை   போலீசார் விசாரணை   திருச்சி தென்னூர் குப்பரங்குளத்தைசேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 45) இவர் கடந்த 20 வருட காலமாக தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். திருமணமும் செய்து கொள்ளவில்லை, இவர் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் குடும்பத்தை பிரிந்த மனஉளைச்சலால் மது பழக்கத்தில் இருந்து வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ( 13 ந் தேதி) செந்தில்குமார் வீட்டின் அறையில் நைலான் கயிரால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதனைப் பார்த்தஅ திர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக தில்லைநகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு […] - [15 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சொந்த செலவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவேன் என கூறிய திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமாரை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்](https://trichyxpress.com/2026/04/15/jallikattu-enthusiasts-from-more-than-15-villages-met-thiruverumpur-aiadmk-candidate-kumar-who-said-he-would-conduct-jallikattu-for-free-at-his-own-expense-and-expressed-support/): தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் தனது தொகுதியில் பம்பரமாக சுழன்று வாக்குகள் சேகரித்து வருகிறார்.அவர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து நாங்கள் இரட்டை இலைக்கு தான் வாக்களிப்போம் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் வேட்பாளர் குமார் பாரம்பரிய முறைப்படி அனைத்து ஊர்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு எனது சொந்த செலவில் நடத்திக் கொடுப்பேன் என தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார். (அந்த வாக்குறுதி பாரம்பரிய முறைப்படி அனைத்து ஊர்களிலும் நடக்கும் ஜல்லிக்கட்டை எனது செலவில் நடத்திக்கொடுப்பேன் என பொய் வாக்குறுதி கொடுத்துவிட்டு சூரியூர் மற்றும் காட்டூரில் மட்டுமே ஜல்லிக்கட்டை நடத்திய ஆஸ்கர் நாயகன் போல் இல்லாமல் அனைத்து கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுப்பேன். சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் கொண்ட ஜல்லிக்கட்டு குழு அமைக்கப்படும். மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான உள்கட்டமைப்புக்கு தேவையான தடுப்பு […] - [அம்பானி வீட்டில் சப்பாத்தி சுடுபவர்களுக்கு பல கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது](https://trichyxpress.com/2026/04/15/those-who-make-chapatis-at-the-ambani-residence-are-paid-salaries-running-into-crores/): உலக அளவில் அறியப்பட்ட தொழிலதிபராக முகேஷ் அம்பானி விளங்கி வருகிறார். இவர் வீட்டில் சப்பாத்தி தயாரிக்கும் மற்றும் உணவு சமைக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். இந்த ரொட்டிகளை தயாரிக்கும் நபர் ஒரு அரசு அதிகாரியின் சம்பளத்தை விட அதிகமாக சம்பாதிக்கிறார். இந்தியாவில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியருக்கு இணையான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அம்பானி தனது வீட்டில் பணிபுரியும் சமையல் கலைஞர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்குகிறார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.   முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் குடும்பத்தினர் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அசைவ உணவுகளை சாப்பிடுவதில்லை. முழுமையான சைவ உணவு உண்பவர்கள். அவர்கள் பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளையே உண்கின்றனர். உணவு விஷயத்தில் அவர்கள் மிகவும் கண்டிப்பாக இருக்கின்றனர்.   ஒரு நேர்காணலில் முகேஷ் அம்பானி, தனக்கு வீட்டில் சமைத்த உணவுகளை மிகவும் பிடிக்கும் என்றும், வீட்டில் சமைத்த ரொட்டி, சாதம், […] - [இல்லம்தோறும் சென்று அதிமுக அரசின் சாதனைகளையும் வாக்குறுதிகளையும் எடுத்து கூறி வாக்குகள் சேகரித்த திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார்](https://trichyxpress.com/2026/04/15/thiruverumpur-aiadmk-candidate-kumar-went-door-to-door-to-collect-votes-by-highlighting-the-achievements-and-promises-of-the-aiadmk-government/): திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட, திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குமரேசபுரம் கொடிமரம், கீழ குமரசரப்பவும் காலனி,மேலகுமரேசபுரம், எழில் நகர் விநாயகர் கோவில், எழில் நகர் சமத்துவக்கூடம் வ.உ.சி நகர் , கணேசபுரம் கடைவீதி திருவேங்கட நகர் ஜெய்நகர் பெல்பூர் பர்மா காலனி கணேசா பாரதபுரம் ஒன்றியங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில். அதிமுகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், நல்லாசி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் திருவெறும்பூர் வெற்றி வேட்பாளர் ப.குமார், அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு இல்லம்தோறும் சென்று வாக்குகள் சேகரித்தார்.தற்போது அதிமுக அரசின் சாதனைகளையும், தற்போது அதிமுக பொது செயலாளர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் பெண்களுக்கான நலத்திட்ட அறிவிப்புகளையும் எடுத்துக் கூறினார். இந்த நிகழ்வில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராஜ மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் சாந்தி, மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சேர்ந்த நிர்வாகிகள்,மாவட்ட கழக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் […] - [திருச்சியில் கஞ்சா விற்ற பெண் மற்றும் 2 பெண்கள் மீது கோட்பா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ,](https://trichyxpress.com/2026/04/14/a-case-has-been-registered-under-the-ndps-act-against-a-woman-and-two-others-for-selling-ganja-in-trichy/): திருச்சி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற 3 பெண்கள் கைது .   திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.இதில் ,துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் மணப்பாறை மாட்டு சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஸ்ரீரங்கம் தாலுகா, ராம்ஜி நகர், காட்டூர் பகுதியைச் சேர்ந்த பானுமதி (வயது 66) என்பவரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.   புகையிலை […] - [அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் : திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் மாலை அணிவித்து மரியாதை,](https://trichyxpress.com/2026/04/14/ambedkars-135th-birth-anniversary-thiruverumbur-constituency-aiadmk-candidate-kumar-pays-tribute-by-garlanding-the-statue/): சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி பெல் ட்ரைனிங் சென்டரில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜ மணிகண்டன்,பகுதி செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர், அண்ணா தொழில் சங்கம் கார்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, நிர்வாகி தெய்வ மணிகண்டன் மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் அதிமுக அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளும் திரளாக பங்கேற்றனர். - [அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர், சீனிவாசன், தலைமையில் கிழக்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் திருச்சி அம்பேத்காரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.](https://trichyxpress.com/2026/04/14/the-dravida-vetri-kazhagam-is-campaigning-for-the-dmk-across-tamil-nadu-mallai-sathya-gives-an-interview-in-trichy/): இன்று சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன், தலைமையில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே அமைந்துள்ள டாக்டர் அம்பேத்காரின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பத்மநாதன்,அம்மா பேரவை மாநில துணை செயலாளர் வெல்லமண்டி ஜவகர்,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன்,கவுன்சிலர் அம்பிகாபதி, பகுதி செயலாளர்கள் கலைவாணன், சுரேந்தர், வெங்கட் பிரபு ,ரோஜர், அன்பழகன், எம் ஆர் ஆர் முஸ்தபா, சிந்தை முத்துக்குமார். ஏர்போர்ட் விஜி, அணி நிர்வாகிகள் ஞானசேகர்,லோகநாதன், ரஜினிகாந்த் , டிபன் கடை கார்த்திகேயன், டாஸ்மாக் பிளாட்டோ டி எஸ் எம் செல்வமணி உள்ளிட்ட […] - [தமிழகம் முழுவதும் திராவிட வெற்றி கழகம் திமுகவிற்கு பிரச்சாரம் செய்து வருகிறது . திருச்சியில் மல்லை சத்தியா பேட்டி](https://trichyxpress.com/2026/04/14/dravida-vetri-kazhagam-is-campaigning-for-dmk-across-tamil-nadu-mallai-sathyas-interview-in-trichy/): ​ தமிழகத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டப்பேரவை அமையும். மல்லை சத்யா பேட்டி. திராவிட வெற்றிக் கழகத்தின் நிறுவனர் மல்லை சத்யா, திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறியதாவது:-   திராவிட வெற்றி கழகம் திமுகவிற்கு நிபந்தனைற்ற ஆதரவை அளித்து வருகிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறோம்.   தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்பதே நாட்டு மக்களின் விருப்பம். வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில், தமிழகத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு சட்டப்பேரவையை முதல்வர் அமைப்பார்.   மதிமுகவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், திமுகவிற்காக அவர்களுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம். அவர்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.   ​​திமுக கூட்டணியில் வலுவான கட்டமைப்போடு தோழமைக் […] - [திருச்சியில் துப்புரவு பணியாளர் தற்கொலை. காரணம்](https://trichyxpress.com/2026/04/14/sanitation-worker-commits-suicide-in-trichy-the-reason/): திருச்சியில் துப்புரவு பணியாளர் தற்கொலை. திருச்சியில் துப்புரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 56 ) இவர் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார் மேலும் அவர் காச நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்தால் ம நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த முருகன் நேற்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகாத்மா காந்தி நினைவுஅரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். - [ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக ஒன்றிய செயலாளர் எஸ்.பி.முத்துகருப்பன்.நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி ?](https://trichyxpress.com/2026/04/14/s-p-muthukaruppan-an-aiadmk-union-secretary-in-the-srirangam-constituency-where-jayalalithaa-secured-victory-is-acting-in-support-of-the-dmk-will-edappadi-take-action/): வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் தற்போது சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலே புகழ் பெற்ற தொகுதி ஸ்ரீரங்கம் தொகுதி தான்.. தொகுதியில் போட்டியிட்டு தமிழக முதல்வராக பணியாற்றியவர் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா .ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதி என்பதால் இத்தகுதிக்கு ஸ்டார் அந்தஸ்து உள்ளது . தற்போது ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் மனோகரன் போட்டியிடுகிறார்.மேலும் உச்சி வெயிலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருச்சி வடக்கு மாவட்டம் மணிகண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி . முத்துகருப்பன் ( சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்மந்தி திருச்சியை சேர்ந்த இன்ஜினியர் கலியபெருமாள் இருந்தபோது அதிமுகவில் இணைந்தவர்) சின்னம்மா சசிகலாவின் உறவினர் மற்றும் வைத்தியலிங்கத்தின் தீவிர ஆதரவாளர். கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிகம் உள்ள உடையார் சமுதாய அதிமுக நிர்வாகிகளை ஜாதி பெயரை கூறி வசைப்பாடி வருகிறார் என கூறப்படுகிறது. தற்போது அதிமுக வேட்பாளர் மனோகரன் கொடுத்த […] - [நீங்கள் அளித்த வாக்கால் தான் 20 லட்சம் மாணவர்கள் பயன்படுகிறார்கள். திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஸ் பொய்யாமொழி பேச்சு.](https://trichyxpress.com/2026/04/14/it-is-solely-because-of-the-votes-you-cast-that-20-lakh-students-are-benefiting-speech-by-mahesh-poyyamozhi-dmk-candidate-for-the-thiruverumbur-constituency/):   நீங்கள் அளித்த வாக்கால் தான் 20 லட்சம் மாணவர்கள் பயன்படுகிறார்கள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு. திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 43-வது வார்டு பகுதிகளில், திமுக வேட்பாளரும் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடையே அவர் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்: திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமைய மக்கள் வாக்களித்ததன் காரணமாகவே பல்வேறு திட்டங்கள் சாத்தியமானதாக அவர் குறிப்பிட்டார். தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான காலை உணவுத் திட்டத்தின் மூலம் இன்று 20 லட்சம் மாணவர்கள் பசியின்றி பள்ளிக்குச் செல்கின்றனர். “நீங்கள் அளித்த ஒரு வாக்கினால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அன்பில் மகேஸ் மூலமாக இத்தனை மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பெண்களுக்கான இலவச விடியல் பயணத் திட்டம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை ஆகியவை […] - [திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் விஜய்க்காக ஆர்.கே.ராஜா தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தொண்டர்கள்.](https://trichyxpress.com/2026/04/14/volunteers-led-by-rk-raja-were-involved-in-collecting-votes-for-actor-vijay-in-the-trichy-east-constituency/): திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி ஜோசப் விஜய் அவர்கள் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சின்ன கடைவீதி, ஆண்டாள் வீதி, ஜான் தோப்பு, இபி ரோடு. பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில். ஞானவேல், சிவா, நடராஜன், பாரதிராஜா, ரேணுகா தேவி, தனசேகரன், சரண்ராஜ் உள்பட பலர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பெருவாரியான பொதுமக்கள் நாங்கள் நீங்கள் சொன்னாலும் சொல்லட்டும் விசில் சின்னத்தில் தான் வாக்களிப்போம் என உறுதி அளித்து உள்ளனர். - [லோக்கல் கேபிள் டிவியில் ஒளிபரப்பாகிய ஜனநாயகன் திரைப்படம்](https://trichyxpress.com/2026/04/13/the-movie-jananayagan-was-broadcast-on-local-cable-tv/): உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் ஜனநாயகன் திரைப்படம் ஒளிபரப்பு திரையரங்குகளில் வெளியாகாத ஜனநாயகன் திரைப்படம் ஆன்லைனில் லீக்கானது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கருமத்தம்பட்டியில் உள்ள ராசி என்ற உள்ளூர் தொலைக்காட்சியில் ஜனநாயகன் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஜனநாயகன் படத்தை டவுன்லோடு செய்து பரப்பியவர்கள் கைது செய்யப்படும் நிலையில், தற்போது கோவை மாவட்டத்தில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் ஜனநாயகன் திரைப்படம் ஹெச்.டி. பிரிண்டில் ஒளிபரப்பு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கருமத்தம்பட்டியில் உள்ளூர் கேபிள் டிவியில் ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விவகாரத்தில் உள்ளூர் கேபிள் டிவி உரிமையாளர் பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். கம்யூட்டர், நான்கு ஹார்ட் டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. - [திருச்சி மாநகர பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது.](https://trichyxpress.com/2026/04/13/three-youths-arrested-for-selling-ganja-and-narcotic-pills-in-the-trichy-city-area/): கஞ்சா, போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது. திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.   திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் அங்கு சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த திருச்சி மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ்(வயது 21,) ஸ்ரீரங்கம் பஞ்சகரை பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 22 ) ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் . அவரிடம் இருந்து 280 கிராம் கஞ்சா 20 போதை மாத்திரைகள் மருத்துவ ஊசி மற்றும் ஒரு தண்ணீர் பாட்டில் ஐந்தாயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல பாலக்கரை பெல்ஸ் மைதானம் அருகே போதை […] - [தொகுதியின் வளர்ச்சிப் பணிகளைத் தொய்வின்றித் தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அமைச்சர் கே.என்.நேரு பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் உடன் தீவிர பிரச்சாரம் .](https://trichyxpress.com/2026/04/13/to-ensure-the-uninterrupted-continuation-of-development-works-in-the-constituency-you-must-cast-your-vote-for-the-rising-sun-symbol-minister-k-n-nehru-engages-in-an-intensive-campaign-alongside/): உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு   திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், கழக முதன்மைச் செயலாளருமான அமைச்சர் கே.என்.நேரு தனது தொகுதியில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   மேற்கு சட்டமன்ற தொகுதி பொன்னகர் பகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை, முத்தரையர் சிலை, குதுப்பாபள்ளம், வில்லியம்ஸ் ரோடு, கலைக்காவிரி சாலை, வார்னர்ஸ் ரோடு, ஜங்ஷன் வெஸ்டரி பள்ளி பகுதி, நியூ ராஜா காலனி, கான்வென்ட் ரோடு, ஜங்ஷன் ரயில்வே காலனி, ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். .இந்த பிரச்சாரத்தின் போது திமுக அரசு மக்களுக்காகச் செய்துள்ள நலத்திட்டங்களையும், சாதனைகளையும் பட்டியலிட்டுப் பேசிய கே.என்.நேரு, தொகுதியின் வளர்ச்சிப் பணிகளைத் தொய்வின்றித் தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இந்தப் பிரசாரத்தின் போது பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். - [அம்மா பேரவை மாநில துணைச் செயலாளராக வெல்லமண்டி ஜவஹர்லால் நேருவை நியமனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி.குவிந்து வரும் பாராட்டு.](https://trichyxpress.com/2026/04/13/edappadi-palaniswami-appoints-vellamandi-jawaharlal-nehru-as-state-deputy-secretary-of-the-amma-peravai-congratulations-pour-in/): அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளராக வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு நியமனம். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு. திருச்சியை சேர்ந்தவர் வெல்லமண்டி நடராஜன். இவர் முன்னாள் முதல மைச்சர் மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக  அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தார். இவரது மகன் ஜவஹர்லால் நேரு. இவரும் அதிமுகவில் பயணித்து வருகிறார். கட்சிப் பணிகள் மற்றும் தலைமை அறிவிக்கும் போராட்டங்கள் தற்போது திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் ஆதரித்து தீவிர பிரச்சாரம் என அனைத்திலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அ.இ.அ.தி.மு.கழக மாநில புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளராக ஜவஹர்லால் நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேருவுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்தும், பூச்செண்டு கொடுத்தும் அவரது […] - [திருச்சி கிழக்கு தொகுதியில் விஜயை எதிர்த்து நிற்பவர்கள் யாரும் டெப்பாசிட் கூட வாங்க கூடாது.திருச்சியில் இன்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேச்சு](https://trichyxpress.com/2026/04/13/no-one-contesting-against-vijay-in-the-trichy-east-constituency-should-even-be-able-to-retain-their-security-deposit-adhav-arjuna-speaking-at-a-cadres-meeting-held-in-trichy-today/):   திருச்சியை முதன்மை மாவட்டமாக மாற்றுவேன் என கூறி போட்டியிடுகிறார்: விஜயின் வெற்றி திருச்சியில் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் கிழக்கு தொகுதி த.வெ.க செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேச்சு தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி கட்ட மாக நடக்கிறது.இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்பு மனுவை சமர்ப்பித்து உள்ள நிலையில் முதல் கட்டமாக மரக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்தார்.வாக்குப்பதிவு எந்திரத்தில் விஜயின் பெயர் 13-வது இடத்தில் உள்ளது.மீண்டும் அவர் திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.இந்நிலையில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி -தஞ்சை சாலையில் உள்ள தேர்தல் பணிமனையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை குழு செயலாளர் ஆதவ் அர்ஜுனா,டெல்டா மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் […] - [திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்டில் வந்த நான்கு பேர் கைது.](https://trichyxpress.com/2026/04/13/four-people-arriving-with-fake-passports-arrested-at-trichy-international-airport/): திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்டில் வந்த நான்கு பேர் கைது. புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பட்டு அவர் ராஜா (வயது 48 ) இவர் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார் அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரிந்தது அவரை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர். அதே விமானத்தில் வந்த சிவகங்கை மாவட்டம் எல்லையம் குடியைச் சேர்ந்த நாகூர் கனி (வயது 37 ) என்ற வாலிபரும் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது ஏர்போர்ட் போலீசார் அவரை கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த முகமது அலி (வயது 57 ) என்பவரும் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது . ஏர்போர்ட் போலீசார் அவரையும் கைது செய்தனர். இதேபோல் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த வேறொரு விமானத்தில் வந்த புதுக்கோட்டை […] - [வாக்கு இயந்திரத்தில் முதல் இடத்திலேயே உள்ள உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,உருக்கமாக வேண்டுகோள் விடுத்த திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி .ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆதரவு .](https://trichyxpress.com/2026/04/13/mahesh-poyyamozhi-the-dmk-candidate-for-the-thiruverumbur-constituency-made-a-fervent-appeal-to-voters-you-must-cast-your-vote-for-the-rising-sun-symbol-which-appears-at-the-very-firs/): திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பத்தாளப்பேட்டை, கிருஷ்ணசமுத்திரம் மற்றும் கிளியூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   வாக்கு சேகரிப்பின் போது மக்களிடையே அவர் பேசியதாவது: மக்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற முன்னோடித் திட்டங்களை திமுக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.   தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம், விரைவில் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்தபோது விடுக்கப்பட்ட 10 கோரிக்கைகளில் 7 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள கோரிக்கைகளும், மக்கள் புதிதாக வைக்கும் கோரிக்கைகளும் வரும் ஐந்தாண்டுகளில் முழுமையாக நிறைவேற்றப்படும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அண்மைக்கால விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த வேட்பாளர், “திமுக 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் […] - [திமுக வேட்பாளர் இனிகோ தான் கூறியதை நிரூபித்தால் எங்கள் கவுன்சிலர் அம்பிகாபதி பதவியை ராஜினாமா செய்வார்.திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் காட்டம்](https://trichyxpress.com/2026/04/13/if-dmk-candidate-inigo-proves-his-claims-our-councilor-ambikapathi-will-resign-from-his-post-rajasekharan-aiadmk-candidate-for-trichy-south-district-asserts-sharply/): வருகின்ற 23ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது . இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடிகர் விஜய் இந்த தொகுதியில் போட்டியிட உள்ளதால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது திருச்சி கிழக்கு தொகுதி. இந்த தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக சார்பில் ராஜசேகரன் , திமுக சார்பில் கிறிஸ்தவ நண்பனுக்கு தலைவர் இனிகோ இருதயராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். ஐந்து வருடங்கள் இந்த தொகுதியில் என்னென்ன செய்தேன் என ஏதாவது கூறி வாக்கு சேகரித்து வருகிறார் இனிகோ .(கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிர்வாகிகள் மூலம் கிழக்குத் தொகுதிகளில் உள்ள சர்ச்சிகளுக்கு மட்டும் சென்று பங்குக்கு ஐந்து முதல் பத்து லட்சம் ரூபாய் என பல கோடி ரூபாய் செலவழித்து நம்பிக்கையுடன் உள்ளார்) சனிக்கிழமை அன்று திருச்சி வயர்லெஸ் ரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட இனிக்கோ இருதயராஜ் இந்தப் பகுதியில் உள்ள ரோடுகள்,தெரு விளக்குகள் எனது […] - [எல்கேஜி சேர்க்கை விண்ணப்பம் பெற இரவிலேயே பாய் விரித்து விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்](https://trichyxpress.com/2026/04/13/parents-spread-out-mats-and-waited-all-through-the-night-until-dawn-to-obtain-lkg-admission-application-forms/): நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு உதவிபெறும் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.   இதை அறிந்ததும் விண்ணப்பங்களை பெற முதல் நாள் முதலே பெற்றோர்கள் வரிசையில் இடம் பிடிக்க ஆரம்பித்தனர். இரவு நேரத்தில் சாப்பிட சென்றால் வரிசை போய்விடும் என அங்கேயே அமர்ந்து சாப்பிட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது .   பெற்றோர்கள் தன் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் இருந்தே சிறந்த பள்ளிக்கூடங்களை தேர்வு செய்து அங்கு படிக்க வைக்க முயற்சிக்கின்றனர். இதற்காக எந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்பதை குழந்தை பிறக்கும் போதே தீர்மானித்து விடுகின்றனர். அப்படித்தான் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் மகள்களை எல்கேஜி வகுப்பில் சேர்பதற்காக விடிய விடிய பெற்றோர்கள் காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது.   நெல்லை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய பகுதிகள் இரட்டை நகரங்களாக விளங்கி வருகிறது. இதில் பாளையங்கோட்டை என்பது […] - [இந்தியாவிலேயே எந்த மாநிலமும் செய்யாத அளப்பரிய சாதனைகளை தமிழகத்தில் திமுக அரசு செய்துள்ளது. திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து வைகோ பிரச்சாரம் .](https://trichyxpress.com/2026/04/13/the-dmk-government-in-tamil-nadu-has-achieved-monumental-feats-accomplishments-unmatched-by-any-other-state-in-india-vaiko-campaigns-in-support-of-mahesh-poyyamozhi-the-dmk-candidate-for-the/): திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு .   திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளரும் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேற்று ( 12.4.26) ஞாயிற்றுக்கிழமை காலையில் மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலைப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொன்மலைப் பகுதிக்குட்பட்ட வார்டு எண்கள் 45 மற்றும் 45A-வில் அமைந்திருக்கும் கல்கண்டார்கோட்டை பொன்னேரிபுரம் மூகாம்பிகை நகர் திருநகர் பெரியார் நகர் பொன்மலைப்பட்டி மொராய் சிட்டி எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் திறந்த நிலையில் உள்ள ஜீப்பில் சென்றபடி அமைச்சர் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார்.   பரப்புரையின் போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ், கடந்த ஐந்து ஆண்டுகளில் கழக அரசு செயல்படுத்திய சாதனைத் திட்டங்களையும், குறிப்பாக அந்தந்த வார்டுகளில் நிறைவேற்றப்பட்ட உட்கட்டமைப்புப் பணிகளையும் விரிவாக எடுத்துக் கூறினார். தமிழக அரசின் […] - [எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் பிரச்சாரம். மாவட்ட செயலாளர்கள் மைதானத்தில் நேரில் பார்வையிட்டு ஆலோசனை.](https://trichyxpress.com/2026/04/13/edappadi-palaniswami-is-campaigning-today-at-g-corner-in-ponmalai-trichy-district-secretaries-kumar-and-srinivasan-personally-inspected-the-venue-and-held-consultations/): எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் பிரச்சாரம் .உற்சாக வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடு . தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வருகிற 23–ந் தேதி அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு,  அ தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் நேற்று இரவு நாகை பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கார் மூலம் திருச்சி வந்துள்ளார்.திருச்சி வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள […] - [எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் பிரச்சாரம் மாவட்ட செயலாளர்கள் மைதானத்தில் நேரில் பார்வையிட்டு ஆலோசனை](https://trichyxpress.com/2026/04/12/edappadi-palaniswami-will-campaign-tomorrow-at-the-ponmalai-g-corner-grounds-in-trichy-district-secretaries-personally-inspected-the-venue-and-held-consultations/): எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் பிரச்சாரம் .   உற்சாக வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடு .   தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வருகிற 23–ந் தேதி அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக தலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் இன்று இரவு நாகை பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கார் மூலம் திருச்சி வருகை புரிகிறார்.திருச்சிக்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது பிறகு திருச்சி […] - [திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே டூவீலரில் பயங்கர ஆயுதங்களுடன் வளம் வந்த 2 வாலிபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.](https://trichyxpress.com/2026/04/12/police-launch-a-manhunt-for-two-youths-who-were-roaming-on-a-two-wheeler-carrying-dangerous-weapons-near-the-tvs-tollgate-in-trichy/): டூவீலரில் பயங்கர ஆயுதங்களுடன் வளம் வந்த 2 வாலிபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.   திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் டூவீலரில் வலம் வந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி தலைமை தபால் நிலையம் டிவிஎஸ் டோல்கேட் இணைப்பு சாலை பகுதியில் கடந்த பத்தாம் தேதி (வெள்ளிக்கிழமை அன்று) ஒரு இருசக்கர வாகனம் அதிவேகமாக சென்றது. அதில் பின்னே அமர்ந்திருந்த நபர் பயங்கர கூர்மையான ஆயுதங்களை தரையில் உரசி சாலையில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து கன்டோன்மென்ட் காவல் நிலையம் போலீசார் கண்காணிப்பு கேமரா தரவுகளின் அடிப்படையில் பொது போக்குவரத்தை பாதிக்கும் விதமாக வாகனம் ஓட்டிய நபர் யார் அவரது பின்னே அமர்ந்திருந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். - [வாக்கு எந்திரத்தில் முதலிடம் முக்கியமல்ல, தேர்தல் முடிவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் .](https://trichyxpress.com/2026/04/12/securing-the-top-spot-on-the-voting-machine-is-not-what-matters-ensure-that-i-win-the-election-with-a-wide-margin-in-the-final-results-a-plea-from-anbil-mahesh-the-dmk-candidate-for-t/): வாக்கு எந்திரத்தில் முதலிடம் முக்கியமல்ல, தேர்தல் முடிவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் . திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று திருவெறும்பூர் பகுதிக்குட்பட்ட 41-வது வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   நேதாஜி நகர், செல்வபுரம், காந்தி நகர், புத்துக்கோவில், காமராஜர் நகர், சுப்பிரமணியபுரம், கக்கன் காலனி, அம்பேத்கர் நகர், டி.நகர், முல்லைவாசல் தெரு, இந்திரா நகர் மற்றும் நொச்சியவயல் புதூர் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார். பொது மக்களிடையே உரையாற்றிய அமைச்சர் பேசிய போது கூறியதாவது :- “கடந்த 2021 முதல் 2026 வரை இந்த 41-வது வார்டில் மட்டும் சாலை வசதி, குடிநீர் திட்டங்கள், குளம் சீரமைத்தல் மற்றும் மழைநீர் வடிகாலுடன் கூடிய சிறுபாலம் அமைத்தல் […] - [எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த பல திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார்](https://trichyxpress.com/2026/04/12/thiruverumpur-aiadmk-candidate-kumar-engaged-in-vote-gathering-by-citing-several-schemes-announced-by-edappadi-palaniswami/): தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தன்னை வேட்பாளராக தலைமை அறிவித்த நாள் முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.   அந்த வகையில் இன்று பொன்மலை பகுதிக்கு உட்பட 35,வது வட்டத்துக்கு உட்பட்ட காந்தி தெரு, பாரி தெரு’ சத்தியமூர்த்தி தெரு, கண்ணகி தெரு, நாவலர் தெரு,திரு வி கா தெரு, கலைவாணர் தெரு, வள்ளுவர் தெரு, வ உ சி தெரு, அண்ணா தெரு, காமராஜர் தெரு, கம்பர் தெரு, பாரதி தெரு, ஆனந்த பகவான் தெரு, ஐயர் முதல் காலனி, கோவலன் தெரு, காந்தி தெரு, சங்கிலாண்டபுரம் நால்ரோடு, சங்கிலினண்டபுரம் ரோடு’ மணல் வாரித துறை ரோடு , திருவிக தெரு ,மறைமலை அடிகள் தெரு, இளங்கோவன், தெரு, கோவிந்த கோனார் தெரு,’ பாரதியார் பத்தாவது மெயின் ரோடு, […] - [திருச்சியில் மாடிப்படியில் இருந்து மதுபோதையில் விழுந்த கூலித்தொழிலாளி பரிதாப சாவு.](https://trichyxpress.com/2026/04/11/in-trichy-daily-wage-laborer-dies-tragically-after-falling-down-stairs-while-intoxicated/): திருச்சியில் மாடிப்படியில் இருந்து மதுபோதையில் விழுந்த கூலித்தொழிலாளி பரிதாப சாவு.   போலீசார் விசாரணை.     திருச்சி இ பி ரோடு ஜான்தோப்பு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 25 ) இவர் அதே பகுதியைச் சேர்ந்த அனிதா (வயது 25 ) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். ஆனந்தராஜ் கல்கண்டார் கோட்டையில் உள்ள அரிசி ஆலையில் லோடுமேன் ஆக வேலை செய்து வந்தார். அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி அவர் மதுபோதையில் வீட்டிற்கு வந்து உள்ளார். இந்த நிலையில் இரண்டாவது மாடியில் உள்ள அவரது வீட்டிற்கு படியேறி சென்ற போது அவர் மதுபோதையில் நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளார். இதில் அவருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவரை திருச்சி மகாத்மா […] - [காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எம் கே எம் காதர் மைதீனை சந்தித்து ஆதரவு திரட்டினார் திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ](https://trichyxpress.com/2026/04/11/inigo-the-dmk-candidate-for-the-trichy-east-constituency-met-with-m-k-m-kader-mydeen-president-of-the-gandhi-market-all-traders-federation-to-garner-support/): திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ் கூட்டணி கட்சியினருடன் சென்று ஆதரவு திரட்டினாா்.   தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், ஆளும் திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, புதுவரவான தவெக உள்ளிட்ட கட்சிகள் மிகத் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அந்தந்த அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   திருச்சி கிழக்குத் தொகுதியில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அதன் ஒரு பகுதியாக இன்று சனிக்கிழமை காந்தி மார்க்கெட் தொழிலாளிகளிடம் வாக்குகள் சேகரித்தார்.அப்போது காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எம் கே எம் காதர் மைதீன் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.அப்போது வியாபாரிகள் சங்கத்தைச் சார்ந்த எம் கே கமலக்கண்ணன்,எஸ் பி பாபு ,வட்ட செயலாளர் செந்தில்,உள்ளிட்ட […] - [திருச்சி நீதிமன்றத்தில் மெகா துப்புரவு பணி நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்றார்கள்.](https://trichyxpress.com/2026/04/11/mega-clean-up-drive-at-trichy-court-judges-and-lawyers-participated/): திருச்சி நீதிமன்றத்தில் மெகா துப்புரவு பணி  நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்றார்கள். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டார். திருச்சி நீதிமன்றம் வளாகத்தின் மெகா துப்புரவு பணி இன்று நடைபெற்றது.இந்நிகழ்விற்கு திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பி கணேசன் தலைமை தாங்கினார். மெகா துப்புரவு பணியினை ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி அக்பர் அலி தொடங்கி வைத்தார்.திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார்.மாவட்ட நீதிபதிகள் சுவாமிநாதன், மகேஸ்வரி, கார்த்திகா, கண்ணன், சண்முகப்பிரியா, மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி நசீர் அலி,மாஜிஸ்திரேட்கள் முகமது சுகால்,பரம்வீர்,சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைமை வழக்கறிஞர் சரபோஜி மற்றும் 450 நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு மெகா துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.பின்னர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. - [தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க மாநில தலைவர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் அதிமுக திருச்சி மாநகர செயலாளர் சீனிவாசன் மற்றும் அதிமுக வேட்பாளரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.](https://trichyxpress.com/2026/04/11/led-by-palmurugan-state-president-of-the-tamil-nadu-marriage-decorators-association-office-bearers-met-with-aiadmk-trichy-city-secretary-srinivasan-and-the-aiadmk-candidate-to-express-their-support/): தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க மாநில தலைவர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் வேட்பாளர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதிமுக திருச்சி மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ. சீனிவாசன் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர், ராஜசேகரன் ஆகியோரை தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் சந்திரசேகர் சிவக்குமார் மாநில துணை பொது செயலாளர் அப்துல் நாசர் மாநில நிர்வாகிகள் ராமச்சந்திரன் பாலகிருஷ்ணன் செந்தில்குமார் அருண் பிரியதர்ஷன் மகாமுனி சிவனேசன் சிவதர்ஷன் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் அசோக் விஜய் உள்பட மாநில திருச்சி மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். - [எங்கள் வாக்குகள் அனைத்தும் இரட்டை இலைக்கு தான். திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமாரிடம் பெல் தொழிலாளர்கள் வாக்குறுதி](https://trichyxpress.com/2026/04/11/all-our-votes-are-for-the-two-leaves-pel-workers-promise-to-thiruverumpur-aiadmk-candidate-kumar/): தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அதிமுக வேட்பாளர் ப.குமார் திருவெறும்பு சட்டமன்றத் தொகுதியில் தீவிரவாத்து சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் இன்று 43,43 ஏ வட்டத்துக்கு உட்பட்ட மலையப்ப நகர் முதல் பொன்மலை ஆர்மரி கேட் வரை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பொது மக்களிடம் பேசிய போது திமுக ஆட்சியில் அறிவித்த 505 வாக்குறுதிகளில் 360 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை . மகளிர்களுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற திட்டத்தை 28 மாதங்களுக்குப் பின்பு தான் நிறைவேற்றினார் தமிழக முதல்வர் . இந்த திருவெறும்பூர் தொகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் என கூறினார்கள் இல்லை,அரியமங்கலம் குப்பைக்கடங்கை அகற்றும் என்றனர் இல்லை,ரிங் ரோடு அமைக்கப்படப்படும் என்றனர் இல்லை இந்த தொகுதியில் பத்தாண்டு காலம் அதில் ஐந்தாண்டு காலம் அமைச்சராக இருந்த மகேஷ் பொய்யாமொழி எந்த வாக்குறுதியும் […] - [திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூரில் உள்ள ஓ எப் டி தொழிலாளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்](https://trichyxpress.com/2026/04/11/dmk-candidate-for-thiruverumpur-constituency-minister-anbil-mahesh-met-oft-workers-in-thiruverumpur-and-collected-votes/): திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று திருவெறும்பூரில் உள்ள OFT (படைக்கலன் தொழிற்சாலை) தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   தொழிற்சாலை வாயிலில் திரண்டிருந்த தொழிலாளர்களிடையே உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை எடுத்துரைத்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு ‘உதயசூரியன்’ சின்னத்தில் வாக்களித்து, பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வின் போது, ஒன்றிய கழகச் செயலாளர்கள் கங்காதரன், தொமுச (தொழிலாளர் முன்னேற்றச் சங்கம்) பொதுச்செயலாளர் கண்ணன், தலைவர் ரமேஷ், மற்றும் முக்கிய நிர்வாகிகளான எம். சிவக்குமார், பிரேமானந்த், கேசவன், வசந்தகுமார், விஜயகுமார், மீனா மற்றும் கழக நிர்வாகிகள் சண்முகம், ஜெகதீசன், கயல்விழி, சுதாகர், உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர். உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். - [நாளை திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் டிடிவி தினகரன்-அனைவரும் திரளாக பங்கேற்க அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அழைப்பு.](https://trichyxpress.com/2026/04/10/ttv-dhinakaran-will-campaign-in-trichy-tomorrow-ammk-district-secretary-senthilnathan-calls-upon-everyone-to-participate-in-large-numbers/): அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர்,டிடிவி தினகரன் அவர்கள்,   வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்,   தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக போட்டியிடும்,   திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜசேகரன் மற்றும்   திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் ஆகியோரை ஆதரித்து,   நாளை சனிக்கிழமை (11-04-2026) கீழ்க்கண்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.   1.திருவெறும்பூர் பேருந்து நிலையம். மாலை 6.30 மணி.   2.கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில். மாலை 7 மணி.   3. உறையூர் நாச்சியார் கோயில். மாலை 7:30 மணி   எனவே, வெற்றி கூட்டணியாம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தோழமைக் கட்சிகளின் அனைத்துக்கட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என […] - [நாளை திருச்சி வரும் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க அனைவரும் திரண்டு வாரீர்.மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன் அழைப்பு .](https://trichyxpress.com/2026/04/10/come-one-and-all-to-welcome-edappadi-palaniswami-who-arrives-in-trichy-tomorrow-an-invitation-from-district-secretaries-kumar-and-srinivasan/): திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன்,பரஞ்சோதி  ஆகியோரின் அறிக்கை:- அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் (11.4.2026, சனிக்கிழமை) மதியம் 1.15மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதுசமயம் கழக நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு திருச்சி மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன் மற்றும் பரஞ்ஜோதி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.   - [ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகரனை தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பாலமுருகன் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு](https://trichyxpress.com/2026/04/10/office-bearers-led-by-balamurugan-state-president-of-the-tamil-nadu-marriage-decorators-association-personally-met-srirangam-constituency-aiadmk-candidate-manoharan-and-extended-their-support/): அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் அவர்களை தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை நேரில் சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் சந்திரசேகர், சிவக்குமார், மாநில துணை பொது செயலாளர் அப்துல் நாசர், மாநில நிர்வாகிகள் ராமச்சந்திரன், பாலகிருஷ்ணன். செந்தில்குமார், அருண், பிரியதர்ஷன், மகாமுனி, சிவனேசன் சிவதர்ஷன், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் அசோக் விஜய் உள்ளிட்ட மாநில மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். - [திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் நேரு தீவிர வாக்கு சேகரிப்பு பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்பு](https://trichyxpress.com/2026/04/10/minister-nehru-engages-in-intensive-campaigning-in-the-trichy-west-constituency-many-including-junction-area-secretary-mohandas-participated/): திருச்சி மேற்கு தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு.   திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரும், கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு நேற்று திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கருமண்டபம் புதுத்தெரு, மாந்தோப்பு, தெற்கு தெரு, ராம் நகர், சோழகர் நகர், விஸ்வாஷ் நகர், ஆர் எம் எஸ் காலனி சமத்துவநகர், ஆல்பா நகர், சத்யா நகர், அருணா அவென்யூ, ஜே.கே. நகர், காவேரி நகர், ராம்ஜி நகர், மில் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொது மக்கள் அமைச்சர் நேருவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.   இந்த பிரச்சாரத்தின் போது, ஒரு சிறுமி பிரச்சார வாகனத்தில் ஏறி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்ற சட்டம், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொண்டு […] - [மீண்டும் உங்களுக்கு பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் . மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன்.](https://trichyxpress.com/2026/04/10/please-grant-me-the-opportunity-to-serve-you-once-again-kathiravan-dmk-candidate-for-the-manachanallur-constituency/): மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் திமுக சார்பில் கதிரவன் மீண்டும் இரண்டாவது முறையாக களம் இறங்கியுள்ளார்.   அ.தி.மு.க.வின் வசம் இருந்த இந்த தொகுதியில், கடந்த முறை அறிமுக அரசியல்வாதியாக களமிறங்கி திமுக வசமாக்கியவர் கதிரவன்.தற்போது மீண்டும் திமுக வசமே தொகுதியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில், தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் தமிழக முதல்வர் முதல்வர் பாணியில், வளர்ச்சித்திட்டங்களை, மக்கள் மேம்பாட்டு திட்டங்களை முன்னிலைப்படுத்தி தனது பிரச்சார வியூகத்தை செயல்படுத்தி வருகிறார் கதிரவன் எம்.ஜி.ஆர். பாணியில் நான் உங்கள் வீட்டுப்பிள்ளை என்றே உரிமையோடு மக்களுடன் இரண்டறக்கலந்தும் பழகி வரும் மனச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல ஆட்சி தொடர மண்ணச்சநல்லுார் தொகுதி மக்களை நாடி வந்துள்ளேன். கடந்த சட்டப்பேரவை தேர்தலில், முதன் முதலாக உங்களைத் தேடி வந்த என்னை, உங்கள் வீட்டுப் பிள்ளையாக எண்ணி, வாக்குகளை […] - [திருச்சியில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் இளைஞர் தற்கொலை.காரணம் மது.](https://trichyxpress.com/2026/04/10/young-man-commits-suicide-in-trichy-after-his-wife-left-in-anger-the-cause-was-alcohol/): திருச்சியில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் இளைஞர் தற்கொலை.காரணம் மது. ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை . கடலூர் மாவட்டம் புவனகிரி தச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் ( வயது 20 ) இவருக்கும் அதே பகுதியில் சேர்ந்த பிரியா (வயது 19 ) என்ற பெண்ணிற்கும் திருமணமானது. இருவரும் திருச்சி ஸ்ரீரங்கம் ஐயர் தோப்பு பகுதியில் வீடு எடுத்து தங்கி வசித்து வந்து உள்ளனர். சிவசங்கர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.. இதனால் மனைவி பிரியா கோவித்துக் கொண்டு தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.சிவசங்கர் தனது மனைவியை மீண்டும் சேர்ந்து வாழ அழைத்துள்ளார் ஆனால் அவர் வரவில்லை என கூறப்படுகிறது . இதனால் மன உளைச்சலில் இருந்த சிவசங்கர் நேற்று தன் வீட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் […] - [திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியப் பெருமக்களிடம் வாக்குகள் சேகரித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி](https://trichyxpress.com/2026/04/10/minister-mahesh-poyyamozhi-who-collected-votes-from-muslim-devotees-who-had-just-finished-their-prayers-in-the-thiruverumpur-constituency-of-trichy-made-a-false-statement/): திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிவாசல்களில், மதச்சார்பற்ற கூட்டணிக் வேட்பாளரும் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பெல் (BHEL) பாய்லர் ஆலை வளாகத்தில் உள்ள டவுன்ஷிப் பள்ளிவாசல். ஐ.டி.ஐ (ITI) அருகே உள்ள மதரஸ்த்துல்லா பஷீரய்யா பள்ளிவாசல். காந்திநகர் சாலையில் உள்ள நூர் பள்ளிவாசல்களில் அமைச்சர் அவர்கள் இன்று சென்று, தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியப் பெருமக்களிடம் ஆதரவு திரட்டினார்.. முக்கிய வாக்குறுதிகள் மற்றும் சாதனைகள் வாக்கு சேகரிப்பின் போது, திராவிட மாடல் அரசின் கடந்த ஐந்தாண்டு கால சாதனைகளை எடுத்துரைத்த அமைச்சர், குறிப்பாகப் பின்வரும் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கினார்:   மகளிருக்கான இலவசப் பேருந்து வசதி. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து விளக்கி பேசினார்.   இந்த நிகழ்வின் போது மாநகரச் செயலாளர் மதிவாணன், துவாக்குடி […] - [திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்காக தீவிர வாக்கு சேகரிப்பு](https://trichyxpress.com/2026/04/09/intensive-vote-canvassing-underway-for-tamilaga-vettri-kazhagam-president-vijay-in-the-trichy-east-constituency/): வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் போட்டியிடுகிறார் . நடிகர் விஜய்க்கு ஆதரவாக திருச்சி கிழக்கு தொகுதியில் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை திருச்சி கிழக்கு தொகுதியில் உட்பட்ட பலரை பகுதி 33 வது வார்டு 154 வது பூத் பகுதிகளில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் வீடு வீடாக சென்று ஸ்டிக்கர் ஒட்டினர். மேலும் விஜய் அறித்து உள்ள வாக்குறுதிகளை பெண்களிடம் எடுத்துக் கூறி விசில் சின்னத்தில் வாக்களிக்க கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். - [திருச்சியில் டெய்லர் கடை உரிமையாளரிடம் 20 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் .](https://trichyxpress.com/2026/04/09/in-trichy-couple-cheats-tailor-shop-owner-of-%e2%82%b920-lakhs/): திருச்சியில் டெய்லர் கடை உரிமையாளரிடம் 20 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் .   திருச்சி கிழேதார் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது (வயது 43 ) இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார் இவரும் பிரபல பட்டு வணிக நிறுவனத்தின் உரிமையாளருமான ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் சந்து முகமது உடன் தொழில் முறையில் நண்பர்களாக இருந்து உள்ளனர்.   இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் சந்து முகமதுவை அணுகி அவர்களுக்கு நந்தி கோவில் தெருவில் சொந்தமாக கடையுள்ளதாகவும் அதை வாடகைக்கு விட முடிவு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்கள்.   அதற்கு சந்து முகமது ரூ.26 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை அவர்களிடம் கொடுத்து கடையை வாடகைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் ரூ. 26 லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்தார். அதன் பிறகு தான் அவருக்கு அந்த கடை அவர்களுடையது இல்லை என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து […] - [கஞ்சா விற்ற 77 வயது பாட்டி உள்பட 2 பேர் கைது.](https://trichyxpress.com/2026/04/09/two-arrested-including-a-77-year-old-grandmother-for-selling-cannabis/): கஞ்சா விற்ற 77 வயது பாட்டி உள்பட 2 பேர் கைது.   திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், திருவெறும்பூர் மற்றும் ராமஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மலைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற ராம்ஜிநகர் கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த முகேஷ் (வயது 52) என்பவரை கைது செய்த எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார், அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், ராமஜிநகர் நியூ காட்டூர் அருகே கஞ்சா விற்ற ராம்ஜிநகர் மில் காலனியை சேர்ந்த சின்னப்பொண்ணு (வயது 77) என்ற பாட்டியை போலீசார் கைது செய்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். - [செல்லும் இடமெல்லாம் உங்களுக்குத்தான் வாக்களிப்போம் என பொதுமக்கள் உறுதி.திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமாருக்கு உற்சாக வரவேற்பு](https://trichyxpress.com/2026/04/09/we-will-vote-for-you-wherever-you-go-the-public-pledges-enthusiastic-reception-for-kumar-the-aiadmk-candidate-for-the-thiruverumbur-constituency/): திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி அதிமுக வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் திருவெறும்பூர் தொகுதி முழுவதும் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று பாப்பாக்குறிச்சி பழைய தெரு , மாரியம்மன் கோவில் தெரு , நெய்குளம் , தாமரை வழி தெரு, கீதாபுரம், பெரியார் நகர், பிரியா நகர், பாரதிதாசன் நகர், பாத்திமா புரம், சோழ நகர், சரஸ்வதி நகர், எல்லைக்குடி,கணேஷ் நகர், ராஜப்பா நகர், கைலாஷ் நகர், அண்ணா சாலை. வின் நகர், காந்தி சாலை, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று அதிமுக சார்பில் போட்டியிடும் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்குகள் சேகரித்தார். ப குமார் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் மழை தூவி ஆரத்தி எடுத்து தங்கள் வீட்டுக்கு […] - [தான் வளர்த்த செல்லப்பிராணி உயிரிழந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை.](https://trichyxpress.com/2026/04/09/young-man-commits-suicide-in-grief-over-the-death-of-his-pet/): தான் வளர்த்த செல்லப்பிராணி உயிரிழந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை.   திருச்சி லால்குடி அருகே உள்ள கீழ அன்பில் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 29). இவர் ஆடு ஒன்றைச் செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். தான் வளர்த்த ஆடு மீது பால்ராஜ் மிகுந்த பாசம் வைத்திருந்தார்.அந்த ஆடு திடீரென உயிரிழந்தது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த பால்ராஜ், மங்கம்மாள்புரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை வீராசாமி லால்குடி காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் லால்குடி காவல் நிலைய வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். - [முதல்வரை கீழ்த்தரமாக பேசும் எடப்பாடிக்கு மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, அவதூறு அரசியலுக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள்.திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு](https://trichyxpress.com/2026/04/09/people-will-vote-for-the-udayasuriyan-symbol-for-edappadi-who-speaks-badly-of-the-chief-minister-and-give-a-fitting-reply-to-the-politics-of-defamation-thiruverumpur-constituency-dmk-candidate-mahe/): மத்திய அரசிடம் காட்ட வேண்டிய வீரத்தை, தமிழக முதலமைச்சர் மீது மலிவான விமர்சனங்களாக எடப்பாடி பழனிசாமி கொட்டி வருகிறார் என்று திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடுமையாகச் சாடியுள்ளார். திருச்சி மாநகராட்சி, திருவெறும்பூர் பகுதிக்குட்பட்ட 39-வது வார்டு பகுதிகளான காட்டூர் பேருந்து நிலையம், எல்லக்குடி மாரியம்மன் கோவில், பிள்ளையார் கோவில், காந்தி நகர் 6-வது தெரு, வசந்தம் நகர், கணேஷ் நகர், கைலாஷ் நகர் ரேஷன் கடை, வின் நகர் மற்றும் பாலாஜி நகர் ஆகிய இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் முனைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: “இன்றைய அரசியல் களம் அதன் நாகரிகத் தன்மையை இழந்து வருகிறது. தோல்வி பயம் வந்துவிட்டால் எதை வேண்டுமானாலும் பேசலாமா? கொரோனா காலத்தைப் பற்றிப் பேசும் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் அவர்களைப் […] - [சமரச தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.](https://trichyxpress.com/2026/04/09/the-principal-district-judge-of-trichy-inaugurated-the-awareness-rally-held-on-the-occasion-of-reconciliation-day/): திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச தினம் கொண்டாடப்பட்டது. சமரச தினத்தினை முன்னிட்டு இன்று திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் சமரச தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி விழிப்புணர்வு பேரணியை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும்/மாவட்ட முதன்மை நீதிபதியுமாகிய எம்.கிறிஸ்டோபர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கணேசன்,துணைத் தலைவர் வடிவேல்சாமி,குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ்,மற்றும் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், மத்தியஸ்தர்களும், நீதிமன்ற பணியாளர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். அதன் பிறகு திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகம் சென்று, மீண்டும் திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் வரை சமரச தின விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. - [தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் அனைத்து வகையான சிகிச்சைகளையும் இலவசமாக வழங்க நடவடிக்கை.மணச்சநல்லூர் தொகுதி பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் கதிரவன் பேச்சு.](https://trichyxpress.com/2026/04/09/measures-are-being-taken-to-provide-all-types-of-medical-treatments-free-of-cost-at-the-dhanalakshmi-srinivasan-hospital-dmk-candidate-kathiravan-spoke-during-his-election-campaign-in-the-manachanall/): மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் கதிரவன். நேற்று புதன்கிழமை மாலையில் திருத்தலையூர், டி புதுப்பட்டி, வெளியனூர், கரட்டாம்பட்டி, மண்பாறை உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை வரவேற்று பொதுமக்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைத்து தரப்பினரும் திரண்டு நின்று, உற்சாக வரவேற்பு அளித்தனர். மணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் வாக்குகள் சேகரித்து பொதுமக்களிடம் பேசுகையில்:- எந்த ஊராட்சி என்றும் பாகுபாடு இல்லாமல் அனைத்து ஊராட்சிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் எனது சொந்த நீதிலும் நிறைவேற்றி தந்துள்ளேன். தளம் உறுதியாக இருந்தால்தான் கட்டிடம் நீடித்து நிற்கும். அதற்கேற்ற வகையில் தமிழகத்தின் வருங்கால தூண்களான மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்விக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன். பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்து கொடுத்துள்ளேன். எனது தொகுதியில் மேம்பாட்டு நிதியில் 60 சதவீதத்திற்கும் மேல் கல்விக்கும் குடிநீர் வசதிக்கும் தான் […] - [நடிகர் விஜய்க்காக 14 வது வார்டில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் கரிகாலன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு](https://trichyxpress.com/2026/04/09/intensive-vote-canvassing-on-behalf-of-actor-vijay-is-underway-in-ward-14-led-by-trichy-district-in-charge-karikalan/): திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் போட்டியிடுகிறார் .   இந்நிலையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக திருச்சி கிழக்கு தொகுதியில் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்த நிலையில் நேற்று மாலை 14வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா சிலை மேல சிந்தாமணி பகுதிகளில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் வீடு வீடாக சென்று விஜய் அறித்து உள்ள வாக்குறுதிகளை குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ. 2500 ,அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் போன்ற திட்டங்களை பெண்களிடம் எடுத்துக் கூறி டிசைன்ஸ் இல்லத்தில் வாக்களிக்குமாறு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் மலைக்கோட்டை பகுதி இணை செயலாளர் ராக்போர்ட் ராஜேஷ் ,நிர்வாகிகள் போட்டோ விமல் ,கோயில் சீனி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். - [தனக்கு ஆதரவளித்த சோழிய வெள்ளாளர் மாநில சங்கத் நிர்வாகிகளிடம் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி, உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என உறுதி .](https://trichyxpress.com/2026/04/09/thiruverumpur-constituency-dmk-candidate-mahesh-poyyamoshi-assured-the-chola-vellalar-state-sangam-executives-who-supported-him-that-he-would-fulfill-their-demands/): திருவெறும்பூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினுடைய வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு சோழிய வெள்ளாளர் சங்கம் ஆதரவு. தமிழ்நாடு மாநில சோழிய வெள்ளாளர் சங்கத்தின் சார்பில், திருவெறும்பூர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்துத் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்தனர். முக்கிய நிகழ்வுகள்: மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில் பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், எல்லக்குடி வட்டாரக் கிளைச்சங்க நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.   அப்போது அமைச்சரிடம் சங்கத்தின் சார்பில் சில முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.   கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தமிழகத்தில் மீண்டும் 2.0 ஆட்சி (தொடர் ஆட்சி) அமைந்தவுடன், உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமையான முயற்சிகளை மேற்கொள்வேன்” என உறுதி அளித்தார். இந்நிகழ்வில் சோழிய வெள்ளாளர் சங்கத்தின் […] - [தமிழகத்திலேயே பணக்கார வேட்பாளர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள வேட்பாளர் லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா.பணத்திமிரில் எளிதாக வெற்றி பெறுவேன் என்று அலட்சியமாகபிரச்சாரம். 3ம் வகுப்பு படித்த லீமா ரோஸ் .](https://trichyxpress.com/2026/04/08/leema-the-aiadmk-candidate-for-lalgudi-holds-the-top-spot-on-the-list-of-the-wealthiest-candidates-in-tamil-nadu-with-the-arrogance-born-of-immense-wealth-and-the-complacent-belief-that-vic/): தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் பணக்கார வேட்பாளர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் லீமா ரோஸ் மார்ட்டின் ஆவார்.   அதிமுக சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடும் இவர், லாட்டரி தொழில் அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மனைவி. அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அறிவிக்கப்பட்ட சொத்து விவரங்கள் அவரை தமிழ்நாட்டின் மிகப் பெரிய செல்வந்த வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.   லீமா ரோஸ் மார்ட்டின், ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த இவரது கல்வித் தகுதி மூன்றாம் வகுப்பு வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ட்டின் குடும்பத்தின் அறக்கட்டளையான மார்ட்டின் ஃபவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலராக வருபவர். இந்திய ஜனநாயக கட்சியில் (ஐஜேகே) 14 ஆண்டுகள் இருந்து, இரண்டு மாதம் முன்பு அதிமுகவில் இணைந்து மகளிர் பிரிவின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.   லால்குடி தொகுதியில் கிறிஸ்தவர் மற்றும் உடையார் சமூக வாக்காளர்கள் அதிகம் உள்ளதால், இந்தத் தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டதாகக் […] - [கடவுள் இல்லை என்ற பெரியாரின் படத்திற்கு முன் குத்துவிளக்கு ஏற்றி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் கே என் நேரு.](https://trichyxpress.com/2026/04/08/minister-k-n-nehru-inaugurated-the-election-office-by-lighting-a-traditional-lamp-in-front-of-a-portrait-of-periyar-the-proponent-of-the-god-does-not-exist-philosophy/): திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) முக்கிய கொள்கைகள் சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு மற்றும் மாநில சுயாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. அண்ணா மற்றும் பெரியாரின் வழியில் சமூகநீதி, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி, மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றை முக்கிய கொள்கைகளாகக் கொண்டு இயங்குகிறது திமுக .   திமுக தலைவர் மு க ஸ்டாலின் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் ,இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான், பக்ரீத் வாழ்த்துக்கள் தெரிவிப்பார்.ஆனால் இந்துக்கள் கொண்டாடுகின்ற ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி போன்ற திருவிழாவுக்கு முதல்வர் வாழ்த்துக்கள் தெரிவிக்க மாட்டார். அதே போன்று அவர்கள் நடத்தும் டிவியில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி என்று தான் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார்கள் .   இந்த நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் கே என் நேரு தான் மனு […] - [சஞ்சீவி நகர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பாலத்துடன் சர்வீஸ் சாலை சப்வே பிரச்சனைக்கு தீர்வு. திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி வாக்குறுதி](https://trichyxpress.com/2026/04/08/a-solution-to-the-issues-regarding-the-service-road-and-subway-at-the-sanjeevi-nagar-bridge-on-the-trichy-chennai-national-highway-a-pledge-made-by-mahesh-poyyamozhi-the-dmk-candidate/): சஞ்சீவி நகர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பாலத்துடன் சர்வீஸ் சாலை சப்வே பிரச்சனைக்கு ரூ.40 கோடியில் தீர்வு: திருவெறும்பூரில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு : திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பாலத்துடன் சர்வீஸ் சாலை சப்வே ரூ.40 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாகத் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பனையக்குறிச்சி பகுதியில் இன்று வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது மக்களிடையே அவர் பேசியதாவது:வாக்குறுதிகளும் வளர்ச்சித் திட்டங்களும்”கடந்த 2016 முதல் […] - [திருச்சியில் திடீரென மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் பலி](https://trichyxpress.com/2026/04/08/college-student-dies-after-suddenly-collapsing-in-trichy/): திருச்சி கருமண்டபத்தில் பல்கலைக்கழக மாணவர் மயங்கி விழுந்து சாவு கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை திருச்சி கண்டோன்மெண்ட் பாரதியார் சாலை பால் செமினரி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் தீபன் (வயது 24). திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.காம் பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று திருச்சி – திண்டுக்கல் ரோடு கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி எதிரே திடீரென மயங்கி விழுந்தார். இவரை மீட்டு நண்பர்கள் கருமண்டபத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் தீபனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார். - [திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கை மாற்றி அமைத்து பொழுதுபோக்கு பூங்கா அமைப்பேன், திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் உறுதி](https://trichyxpress.com/2026/04/08/i-will-transform-the-ariyamangalam-garbage-dump-in-trichy-into-a-recreational-park-kumar-aiadmk-candidate-for-the-thiruverumbur-constituency-pledges/): தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் அரியமங்கலம் தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.   வட்டம் – 36 ஜெகநாதபுரம் அண்ணாநகர் முந்துசெட்டிதெரு ரத்தினசாமி தெரு முதல் பிள்ளையார் கோவில் தெரு அண்ணா தெரு முனீஸ்வரன் கோவில் வரை IOB பேங்க் எம்ஜிஆர் நகர் ஆண்டாள் நகர் வட்டம் 36 A ரயில் நகர் ராஜப்பாநகர் கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெரு இந்திரா தெரு மாஜி ராணுவ காலனி 4 ரோடு மாஜி ராணுவ காலனி 17 முதல் 1 தெரு வட்டம் 44 A கணேசபுரம் ஆர்ச் 1 முதல் 9 தெரு தங்கேஸ்வரி நகர் ராஜீவ்காந்திநகர், இந்திராநகர் காந்திதெரு பாரதியார்தெரு வெங்கடேசாநகர் அல்லி தெரு […] - [திருச்சி தீயணைப்பு நிலையம் எதிரில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்](https://trichyxpress.com/2026/04/08/body-of-unidentified-elderly-man-found-opposite-trichy-fire-station/): திருச்சி நீதிமன்றம் தீயணைப்பு நிலையம் எதிரில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் .   திருச்சி ஹீபர் ரோட்டில் நீதிமன்றம் அருகே மாவட்ட தீயணைப்பு நிலையம் உள்ளது.இதன் எதிரில் உள்ள டிபன் கடை முன்பு அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்தது. இதுகுறித்து கோ- அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி கௌதம் பாபு அளித்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் காவல் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து இவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். - [திருச்சி மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன் திமுக வேட்பாளர் கே என் நேரு பஞ்சபூரில் பஸ் ஸ்டாண்ட் கட்டியது தனது 40 ஏக்கர் இடத்தை விற்பனை செய்ய தான்,லால்குடியில் 500 ஏக்கர் இடம் வாங்கியுள்ளார் என பகிரங்கமாக விமர்சிப்பது பெட்டிக்காக தான்.](https://trichyxpress.com/2026/04/08/trichy-west-ammk-candidate-rajasekharan-is-publicly-criticizing-dmk-candidate-k-n-nehru-for-building-a-bus-stand-in-panchapur-to-sell-his-40-acre-land-and-buying-500-acres-of-land-in-lalgudi-for-the-s/): வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கே என் நேருவும்,தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் எம். ராஜசேகரன் தமிழக வெற்றி கழகம் சார்பில் க. ராமமூர்த்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் க.புவனேஸ்வரி ஆகியோர் இடையே தான் போட்டி நிலவுகிறது .   2006 ல் லால்குடி தொகுதியில் இருந்து அப்போதைய திருச்சி 2 (தற்போதைய மேற்கு) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நேரு.அன்று முதல்கடந்த 20 வருடங்களாக இதே தொகுதியில் போட்டியிட்டு வருகிறார் .2011 பொது தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மரியம் பிச்சை மற்றும் பரஞ்சோதி ஆகியோர் வெற்றி பெற்றனர்.   அதன் பின்னர் 2016 ல் அதிமுக வேட்பாளர் ஆர். மனோகரணையும் , 2021 ல் கருமண்டபம் பத்மநாபனையும் தொடர்ச்சியாக நேரு வென்றார்.   கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக […] - [வருகின்ற 23ஆம் தேதி பத்தாண்டு கால அடிமை விலங்கு உடைத்து மாற்றத்துக்கு தயாராகும் நாள்.திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் குமாரை ஆதரித்து பேசிய காளியம்மாள்](https://trichyxpress.com/2026/04/08/the-upcoming-23rd-marks-the-day-when-the-shackles-of-a-decade-long-servitude-are-shattered-and-we-prepare-for-change-kaliyammal-speaking-in-support-of-kumar-the-aiadmk-candidate-for-thir/): அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் காளியம்மாள் அவர்கள் நேற்று (07.04.2026) மாலையில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகிலும் தெற்கு காட்டூர் அருகிலும். கீழ கல்கண்டார்கோட்டை பகுதியிலும்.. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளர் ப.குமார் அவர்களை. ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி திருச்சி திருவெறும்பூர் தொகுதி மக்களின் பத்தாண்டு கால அடிமை விலங்கு உடைத்து மாற்றத்துக்கு தயாராகும் நாள் என பேசினார் இந்த நிகழ்வின் போது அதிமுக திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்தி,பகுதி செயலாளர் பாஸ்கர்,அண்ணா தொழிற்சங்கம் கார்த்திக் , அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தெய்வ மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் சாந்தி கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜக சரவணன், தமிழ் மாநில காங்கிரஸ் குணா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர். - [பெல் தொழிற்சாலை தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி .](https://trichyxpress.com/2026/04/08/dmk-candidate-for-thiruverumpur-assembly-constituency-mahesh-poyyamozhi-has-been-actively-canvassing-votes-from-bhel-factory-workers/): பெல் தொழிற்சாலை வாயிலில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாக்கு சேகரிப்பு   திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (திமுக) வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெல் (BHEL) பாய்லர் தொழிற்சாலை தொழிலாளர்களிடம் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   தொழிலாளர்கள் மத்தியில் உரை:   சுமார் 6,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் பெல் தொழிற்சாலையின் கிழக்கு வாயில் பகுதியில், நேற்று மாலை 4:30 மணி அளவில் பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது, காலை நேரப் பணி முடிந்து வெளியே வந்த தொழிலாளர்கள் மற்றும் இரவு நேரப் பணிக்குச் சென்ற தொழிலாளர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி அவர் பேசியதாவது:-   தொப்புள்கொடி உறவு: “தேர்தல் பிரச்சாரம் என்று வந்துவிட்டாலே, நான் முதலில் தொடங்கும் இடம் இந்த பெல் தொழிற்சாலைதான். ஒவ்வொரு தேர்தலிலும் என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதில் அண்ணன்-தம்பிகளாகிய பெல் தொழிலாளர்களுக்கு முக்கியப் […] - [திருச்சி பாலக்கரையில் மது போதைக்கு அடிமையானவர் மயங்கி விழுந்து சாவு](https://trichyxpress.com/2026/04/07/man-addicted-to-alcohol-collapses-and-dies-in-palakkarai-trichy/): பாலக்கரையில்   மதுவுக்கு அடிமையான வாலிபர் திடீர் சாவு .   திருச்சி சங்கிலியாண்ட புரம் தெரசம்மாள் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 25 ) பெயிண்டர் திருமணமாகாத இந்த வாலிபருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது , ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்து உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மது போதையில் முதலியார் சத்திரம் அங்கன்வாடி பகுதியில் மயங்கி கிடந்து உள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இது குறித்து அவரது தாயார் மல்லிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். - [திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மகளிர்](https://trichyxpress.com/2026/04/07/women-engaged-in-canvassing-in-support-of-tvk-leader-vijay-in-the-trichy-east-constituency/): கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் போட்டியிடுகிறார். வேட்பு மனு பரிசீலனையில் விஜய்யின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள தமிழக வெற்றிக்காக உற்சாகமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை பகுதியில் திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் ஆலோசனையின்படி மலைக்கோட்டை பகுதி இணை செயலாளர் ராக்போர்ட் ராஜேஷின் அறிவுறுத்தலின்படி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த தீபா ,லோகேஸ்வரி .ஜபின்,சத்யா ,வைஷ்ணவி,  மோனிகா,  வேலுமணி, ஹரிதா .வள்ளி,மற்றும் மாவட்ட உறுப்பினர் சேர்க்கை அணி மாவட்ட அமைப்பாளர் முகுந்தன் உள்ளிட்ட பலர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். இல்லம் தோறும் சென்று விஜய் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆறு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்பதையும், அண்ணன் சீர் திட்டத்தில் ஒரு பவுன் தங்கம் ஒரு பட்டு சேலை வழங்கும் […] - [திருச்சி உறையூரில் செல்போனில் கடலை போடுவதை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி மாயம்](https://trichyxpress.com/2026/04/07/dmk-functionaries-who-failed-to-campaign-in-support-of-the-partys-candidate-in-the-srirangam-constituency-will-the-chief-minister-take-action-2/): திருச்சி உறையூரில் செல்போனில் கடலை போடுவதை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி மாயம்   திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சுபா ( வயது 14). பெயர் மாற்றப்பட்டுள்ளது இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சுபாவின் தந்தை கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து சென்று விட்டார். இவரின் தாயார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கலா அங்குள்ள பாட்டியின் வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்து உள்ளார்.   சமீபகாலமாக அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது சித்தியும் பாட்டியும் அவரை கண்டித்து உள்ளனர். இதனால் வெறுப்பு அடைந்த சுபா வீட்டிலிருந்து வெளியே சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் அவரை இங்கு காணவில்லை . இது குறித்து அவரது சித்தி உறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் […] - [ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடாத திமுக நிர்வாகிகள். நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?](https://trichyxpress.com/2026/04/07/dmk-functionaries-who-failed-to-campaign-in-support-of-the-partys-candidate-in-the-srirangam-constituency-will-the-chief-minister-take-action/): திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக களம் இறங்கி உள்ளவர் அமைச்சர் நேருவின் விசுவாசி துரைராஜ்.   நேற்று மனு தாக்கல் செய்த பின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.   இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் அமைச்சரின் நேருவின் தீவிர விசுவாசியான துரைராஜ்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகள் யாரும் ஈடுபடவில்லை என்பதுதான்.   அமைச்சர் நேரு கூறியும் துரைராஜ்க்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் யாரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாது ஏன் என்பது தெரியவில்லை.   உளவுத்துறை காவல்துறையினர் இது குறித்து தீர விசாரித்து தமிழக முதல்வருக்கு தகவல் அனுப்புவார்களா?   இந்த தகவல்களை அறிந்த உடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைராஜ்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாத திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .   […] - [அமைச்சர் நேருவின் செயல்பாட்டால் மணப்பாறை தொகுதி மமக வேட்பாளர் அப்துல் சமது வெற்றி கேள்விக்குறி](https://trichyxpress.com/2026/04/07/due-to-minister-nehrus-actions-the-victory-of-abdul-samad-the-mmk-candidate-for-the-manapparai-constituency-hangs-in-the-balance/): மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமதுக்கு தி.மு.க. ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள உள் பூசல், வெற்றிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.   திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராக அப்துல் சமது போட்டியிடுகிறார். ஆனால், இங்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட செயலாளராக இருக்கும் நிலையில், மற்றொரு அமைச்சரான நேருவுக்கு தனியான ஆதரவாளர்கள் குழு உள்ளது. இவர்கள் உள்ளூர் தி.மு.க. நிர்வாகிகளுடன் ஒட்டாமல் தனியாக செயல்படுவது வழக்கம்.   இந்நிலையில், மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமதுவை அறிமுகம் செய்யும் கூட்டணிக் கட்சியினர் கூட்டத்துக்கு அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு அளிக்கப்படவில்லை. கூட்டத்துக்கு வந்த நேருவை, ஆண்டவர் கோவில் அருகே அவரது ஆதரவாளர்கள் வழிமறித்து, ‘எங்களை அழைக்கவில்லை’ என்று புகார் தெரிவித்து உள்ளனர். உடனே அமைச்சர் நேரு, ‘உங்களை கூப்பிடாவிட்டால் […] - [அரியமங்கலம் குப்பை கிடங்கு விரைவில் முழுமையாக அகற்றப்படும் . திருவெறும்பூர் திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி உறுதி .மருத்துவ சமுதாய நல சங்கத்தினர் முழு ஆதரவு](https://trichyxpress.com/2026/04/07/ariyamangalam-garbage-dump-will-be-completely-removed-soon-thiruverumpur-dmk-candidate-mahesh-poiyamozhi-assures-full-support-from-medical-community-welfare-association/): மருத்துவ சமுதாய நலச்சங்கத்தினர் திருவெறும்பூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் அன்பின் மகேஸ் பொய்யாமொழிக்கு தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர்.   திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று செவ்வாய்க்கிழமை காலை மருத்துவர் நல சங்கத்தினரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.   திருவெறும்பூர் மருத்துவ நலச் சங்கத் தலைவர் ரோமியோ பழனி தலைமையில், பி.ஹெச்.இ.எல் (BHEL) தொமுச அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: “பொதுவாக அரசியல் அதிகமாகப் பேசப்படும் இடங்கள் இரண்டு; ஒன்று தேநீர் கடை, மற்றொன்று நீங்கள் பணிபுரியும் இடங்கள்தான்.” திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல்: “நாம் இல்லாததையும் பொல்லாததையும் கூறத் தேவையில்லை. கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்தாலே, திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைவது உறுதி.” […] - [திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மாவட்ட உறுப்பினர் சேர்க்கை அணியினர்](https://trichyxpress.com/2026/04/06/members-of-the-district-membership-enrollment-team-engaged-in-canvassing-votes-in-support-of-actor-vijay-in-the-trichy-east-constituency/): திருச்சி கிழக்கு தொகுதிகள் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் நடிகர் விஜய்க்கு ஆதரவாக தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு   திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் நடிகர் விஜய்க்கு ஆதரவாக திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் கரிகாலன் ஆலோசனையின் படி மலைக்கோட்டை பகுதி இணை செயலாளர் ராக்போர்ட் ராஜேஷ் அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றி கழக உறுப்பினர் சேர்க்கை அணி மாவட்ட அமைப்பாளர் முகுந்தன், மாவட்ட இணை அமைப்பாளர் யோகேஸ்வரன் , ஹரிகரன், மாவட்டத் துணை அமைப்பாளர் கமலேஷ், மாவட்ட இணை அமைப்பாளர் ஜமுனா ராணி, மாவட்ட பொருளாளர் சபரி உள்ளிட்ட பலர் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 18-வது வார்டு கிருஷ்ணாபுரம் ரோடு முஸ்லீம் தெருவில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்க்கு ஆதரவாக விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி அப்பகுதியில் தீவிர வாக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். - [திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் மகேஷ்க்கு ஆதரவாக அமைச்சர் நேரு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.](https://trichyxpress.com/2026/04/06/minister-nehru-launched-the-campaign-in-support-of-minister-mahesh-the-dmk-candidate-for-the-thiruverumbur-constituency/): திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை ஆதரித்து, இன்று திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, திருச்சி மாநகராட்சி, பொன்மலைப் பகுதிக்குட்பட்ட வார்டு எண் 46-ல் தீவிர வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் பொன்மலைப்பட்டி ரைஸ் மில், கொட்டப்பட்டு, முறைசிட்டி விஸ்தரிப்பு பகுதி (Morais City), வெங்கடேஸ்வரா நகர், எம்.ஜி.ஆர் நகர், பொன்மலைப்பட்டி, உடையார் தெரு மற்றும் மலையடிவாரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்குக் கேட்டார். இந்நிகழ்வின் மாநகர செயலாளர் மு மதிவாணன், பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ், மாமன்ற உறுப்பினர் ரமேஷ், வட்ட செயலாளர்கள் முருகன், பரமசிவம், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கியப் பொறுப்பாளர்கள் உடனிருந்து ஆதரவு திரட்டினர். வாக்கு சேகரித்த […] - [திருச்சி கஞ்சா விற்ற 65 வயது பெண் மற்றும் புகையிலை பொருட்கள் பெற்ற நபர்கள் கைது](https://trichyxpress.com/2026/04/05/65-year-old-woman-who-sold-ganja-in-trichy-and-individuals-who-purchased-tobacco-products-arrested/): திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது .   திருச்சி எடமலைப்பட்டிபுதுரை அடுத்த ராம்ஜிநகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போது அதே பகுதியை சேர்ந்த பிச்சை என்பவரின் மனைவி கோவிந்தம்மாள் (வயது 65 )என்பவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து எடப்மலை பட்டி புதூர் காவல் நிலையம் போலீசார் அவரை கைது செய்து கோவிந்தம்மாள்யிடம் இருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.பிறகுகோவிந்தம்மாள்யை ஜாமினில் விடுதலை செய்தனர்.   திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மூன்று பேர் கைது .   திருச்சி பொன்நகர் ஜங்ஷன் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது […] - [திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழிக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்](https://trichyxpress.com/2026/04/05/the-public-accorded-a-grand-flower-strewn-welcome-to-mahesh-poyyamozhi-the-dmk-candidate-for-the-thiruverumbur-assembly-constituency/): திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியப் பகுதிகளில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருநெடுங்குளம் ஊராட்சியில் உள்ள தேவராயனேரி மற்றும் நரிக்குறவர் காலனி, அதேபோல் வாழவந்தான்கோட்டை ஊராட்சியில் உள்ள வாழவந்தான்கோட்டை கிராமம் மற்றும் குங்குமபுரம் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று அவர் பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்களிடையே அவர் பேசியதாவது: “தமிழக முதல்வர் கடந்த ஐந்து ஆண்டுகளில் எண்ணற்ற உன்னதமான திட்டங்களை மக்களுக்காகச் செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக, இல்லத்தரசிகளுக்குக் கட்டணமில்லாப் பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களின் எதிர்காலத்தை வளர்க்கும் நான் முதல்வன் திட்டம் மற்றும் இல்லம் தேடி கல்வி எனப் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களைத் தந்துள்ளார். மக்களின் நலன் காக்கும் இந்த நல்லாட்சி தொடரவும், உங்கள் தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் தடையின்றித் தொடரவும், பொதுமக்கள் […] - [சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் தேரோட்டம் 14 ம் தேதி நடைபெறுகிறது.](https://trichyxpress.com/2026/04/05/in-observance-of-the-chithirai-festival-the-chariot-procession-at-the-vekkali-amman-temple-in-uraiyur-trichy-will-take-place-on-the-14th/): திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா.ஏப்ரல் 14 ம் தேதி தேரோட்டம் .   தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகின்ற16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மண் மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரைப் பெருந்திருவிழாவுக்கு ஞாயிற்றுக்கிழமை விநாயகர் வழிபாடு மற்றும் வாஸ்து சாந்தி நடைபெறுகிறது. முதல்நாள் விழாவான ஏப்.6ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் காப்பு கட்டுதல் வைபவம் நடைபெறும். நண்பகல் 12 மணக்கு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். காப்புகட்டுதல் வைபவத்தின்து, வெக்காளியம்மனுக்கு விரதம் […] - [அதிகாலையில் ஈஸ்டர் மாஸ் முடிந்தவுடன் மாஸாக கிறிஸ்தவர்களிடம் வாக்கு சேகரித்த திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார்.](https://trichyxpress.com/2026/04/05/immediately-after-the-conclusion-of-the-easter-mass-in-the-early-morning-kumar-the-aiadmk-candidate-for-the-thiruverumbur-constituency-canvassed-for-votes-en-masse-among-the-christian/): இன்று ஈஸ்டர் தினம்.திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் திருச்சி திருவெறும்பூர் தொகுதி முழுவதும் பம்பரமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் .   இந்த நிலையில் இன்று அதிகாலை ஈஸ்டர் தினத்தை முடிந்து கிறிஸ்தவர்கள் அதிக அளவில் மாஸ் (பூஜை) முடிந்து சர்ச்சுகளில் இருந்து வெளிவந்தனர். ஒட்டக்குடி பகுதியில் அமைந்துள்ள சர்ச்யில் மாஸ் முடிந்து வந்த கிறிஸ்தவர்களிடம் அதிமுக அரசின் சாதனைகளையும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் எடுத்து கூறினார்.மேலும் தான் வெற்றி பெற்றவுடன் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தி அந்தந்த பகுதிகளில் உள்ள  பொதுமக்கள் கூறும் குறைகளை கேட்டறிந்து முதல் 100 நாட்களுக்குள் அக்குறைகளை சரி செய்ய முயற்சி செய்வேன் என அப்பகுதி பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார். பிரச்சாரத்தின் போது வேட்பாளர் குமாருடன் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் எஸ் கே […] - [திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் திடீர் மாயம்.](https://trichyxpress.com/2026/04/05/pregnant-woman-undergoing-treatment-at-trichy-government-hospital-suddenly-goes-missing/): திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம் பெண் மாயம் .   திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்தவர் மதியழகன் அவரது மனைவி திவ்யா (வயது 27) சற்று மனநிலை சரியில்லாதவர். கர்ப்பிணியான இவர் திருச்சி மகாத்மா காந்தி மீது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.   இந்நிலையில் அவருக்குஅடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு உள்ளது. இதனால் கருவை கலைக்குமாறு மருத்துவர் அறிவுரை கூறிய உள்ளனர். இதையடுத்து திவ்யா கருக்கலைப்பு செய்து கொண்டார். பிறகு சிகிச்சை பெற்று வந்த திவ்யா மருத்துவமனை வார்ட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்ப வரவில்லை. அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது கணவர் மதியழகன் திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அரசு மருத்துவமனை […] - [கோடை வெப்பத்தை தணிக்கும் குளிர்ச்சியான ஆஃபர். திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸில் நீங்கள் கேட்கும் விலைக்கு ஏ. சி. வாய்ப்பை தவற விடாதீர்.](https://trichyxpress.com/2026/04/05/a-cooling-offer-to-beat-the-summer-heat-dont-miss-this-opportunity-to-get-an-ac-at-the-price-of-your-choice-at-trichy-bismi-electronics/): திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடில் உள்ள சிட்டி பிளாசாவில் செயல்பட்டு வருகிறது பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸ் நிறுவனம்.இதன் உரிமையாளர் நிஜாமுதீன் கோடை காலத்தை முன்னிட்டு புதிய ஆப்பரே தெரிவித்து அறிவித்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிப்பதாவது:- திருச்சியில் விலை குறைவான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எது வாங்க வேண்டுமானாலும் திருச்சி மட்டுமல்ல அனைத்து மாவட்ட பொதுமக்கள் மனதிலும் முதலில் தோன்றுவது பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் தான். நமது பிஸ்மி எலக்ட்ரானிக்ஸில் எப்பொழுதுமே மொத்த விற்பனை விலைக்கே சில்லறை விற்பனை செய்யப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது ஏழைகள் வீட்டிலும் எல்.இ.டி. டி.வி. இருக்க வேண்டும் என்பதால் நமது ஷோரூமில் ரூ.2,499 க்கே எல்.இ.டி. டி. வி.க்கள் விற்பனை செய்து வருகிறோம். ரூ.2,499 முதல் ரூ.94,999 வரை விலையில் எல்.இ.டி. டி. வி.க்கள், ரூ.4999-க்கு வாசிங் மெஷின்கள், ரூ.9999-க்கு பிரிட்ஜ், ரூ.24,999-க்கு 1, 1.5 டன் ஏ.சிக்கள் விற்பனை செய்யப்படுகின்றது. […] - [திமுக பிரமுகர் வீட்டில் ரூ.11 லட்சம் சிக்கியது.ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பணமா?](https://trichyxpress.com/2026/04/05/rs-11-lakhs-seized-at-dmk-functionarys-residence-does-the-money-belong-to-the-dmk-candidate-for-the-srirangam-assembly-constituency/): திருச்சி அருகே ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக பிரமுகர் வீட்டில் ரூ. 11 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை மாலை பறிமுதல் செய்து உள்ளனர்.   திருச்சி அருகேயுள்ள அம்மாபேட்டை பகுதியில் முன்னாள் ஊராட்சி தலைவரும், திமுக பிரமுகருமான காந்தி (வயது 65) என்பவரது வீட்டில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பறக்கும் படை அதிகாரி சந்திரமௌலி, வருமான வரித்துறை அதிகாரி கதிரவன் உள்ளிட்டோர் அம்மாபேட்டை காளியம்மன் கோயில் தெருவில் உள்ள காந்தியின் வீட்டிலும், அவரது மகன்கள் வீட்டிலும் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள் அப்போது காந்தி வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம், 2 மகன்கள் வீட்டிலிருந்தும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ. 11 லட்சத்தை பறிமுதல் செய்து, ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் […] ## Pages - [Trichy Xpress](https://trichyxpress.com/trichy-xpress/): [vc_row][vc_column][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row] - [About Us](https://trichyxpress.com/bs-about-us/): Three days before Cboe Global Markets Inc., one of the world’s biggest regulated exchanges, debuts futures on the cryptocurrency, it had one of its wildest sessions ever. On Coinbase Inc.’s GDAX exchange, prices zoomed up to almost $20,000 from ... - [Front Page](https://trichyxpress.com/): Three days before Cboe Global Markets Inc., one of the world’s biggest regulated exchanges, debuts futures on the cryptocurrency, it had one of its wildest sessions ever. On Coinbase Inc.’s GDAX exchange, prices zoomed up to almost $20,000 from ... - [test](https://trichyxpress.com/test/) - [Homepage](https://trichyxpress.com/homepage/): [vc_row][vc_column][/vc_column][/vc_row] - [Sample Page](https://trichyxpress.com/sample-page-2/): This is an example page. It’s different from a blog post because it will stay in one place and will show up in your site navigation (in most themes). Most people start with an About page that introduces them to potential site visitors. It might say something like this: Hi there! I’m a bike messenger by day, aspiring actor by night, and this is my website. I live in Los Angeles, have a great dog named Jack, and I like piña coladas. (And gettin’ caught in the rain.) …or something like this: The XYZ Doohickey Company was founded in 1971, […] - [Front Page](https://trichyxpress.com/bs-front-page/): We knew from the outset that Fallout 76 was going to be the centerpiece of Bethesda’s big show. The company’s been releasing info in dribs and drops this week, including - [Contact Us](https://trichyxpress.com/bs-contact-us/): We knew from the outset that Fallout 76 was going to be the centerpiece of Bethesda’s big show. The company’s been releasing info in dribs and drops this week, including - [Header Content Injection](https://trichyxpress.com/bs-header-content-injection/): We knew from the outset that Fallout 76 was going to be the centerpiece of Bethesda’s big show. The company’s been releasing info in dribs and drops this week, including [comment]: # (Generated by Hostinger Tools Plugin)