
திருச்சி, மாநகராட்சி பீமநகர் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய, திருச்சி, தென்னூர் செயற்பொறியாளர் பா . சண்முகசுந்தரம் தெரிவித்திருப்பது :
திருச்சி, மாநகராட்சி கண்டோன்மென்ட் துணை மின் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக மின்கம்பி மாற்றுதல் தொடர்புடைய
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பீமநகர், கண்டித்தெரு, பென்ஷனர்தெரு, ஆணைக்கட்டி மைதானம், மேட்டுத்தெரு, யாதவர் தெரு, அல்திவான் பள்ளிவாசல், ஹாஜியா தெரு, கண்ணன் அரிசி ஆலை, உள்ளிட்ட பகுதிகளில்,
நாளை செப்டம்பர் 13 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 3.30 வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

