Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சென்ற முறை பெற்ற தொகுதிகளை விட அதிகமாக தொகுதிகளில் வெற்றி பெற்று திராவிட மாடல் அரசு அமையும்.திருச்சியில் இந்தியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதின் பேட்டி

0

'- Advertisement -

திமுக கூட்டணி

Ad banner

200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று

 

தமிழகத்தில் மீண்டும்

திராவிட மாடல் அரசு அமையும்

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நம்பிக்கை.

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் இன்று காலை திருச்சி திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள

காஜாமியான் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.

அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

 

எல்லா தரப்பு மக்களும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வாக்களித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் 200 க்கும் பேர் மேற்பட்ட தொகுதிகளில் திராவிட மாடல் அரசு அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிட மாடல் அரசு முக ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சியை வழங்கி இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்ந்தது.எல்லா மாநிலத்திற்கும் முன் மாநிலமாக தமிழகம் விளங்கியது என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்தத் தேர்தலில் சென்ற முறை பெற்ற தொகுதிகளை விட அதிகமாக தொகுதிகளில் வெற்றி பெற்று திராவிட மாடல் அரசு அமையும்.

பூம்புகார் பாபநாசத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கு பொதுமக்கள் நல்ல முறையில் வாக்களித்து வருகிறார்கள்

இவ்வாறு காதர் மொய்தீன் கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.