Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்டில் வந்த நான்கு பேர் கைது.

0

'- Advertisement -

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்டில் வந்த நான்கு பேர் கைது.

Ad banner

புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பட்டு அவர் ராஜா (வயது 48 ) இவர் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார் அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரிந்தது அவரை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர். அதே விமானத்தில் வந்த சிவகங்கை மாவட்டம் எல்லையம் குடியைச் சேர்ந்த நாகூர் கனி (வயது 37 ) என்ற வாலிபரும் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது ஏர்போர்ட் போலீசார் அவரை கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த முகமது அலி (வயது 57 ) என்பவரும் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது . ஏர்போர்ட் போலீசார் அவரையும் கைது செய்தனர்.

இதேபோல் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த வேறொரு விமானத்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (வயது 55) என்பவரிடம் இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையை அவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரிந்தது போலீசார் அவரை வும் கைது செய்து உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.