Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்,28 ந் தேதி வரை நடைபெற உள்ளது.எங்கே எடுக்கலாம், எவ்வளவு,என்ன ஆதரங்கள் தேவை முழு விவரம்….

0

'- Advertisement -

திருச்சி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்,28 ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்திய அஞ்சல் துறை திருச்சி கோட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

பொது மக்கள் நலன் கருதி திருச்சி அஞ்சல் கோட்டத்தில் பிப்ரவரி 10 ந் தேதி முதல் மார்ச் 28ந்த வரை “ஆதார் சிறப்பு முகாம்”, நடைபெற்று வருகிறது. இந்த ஆதார் சிறப்பு முகாம் பல்வேறு அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.

தங்கள் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று விரும்புவோர் திருச்சி அஞ்சல் கோட்ட அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (dotiruchirappall.tn@indiapost.gov.in) அல்லது 9600469920 எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாகவும் தங்களின் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

பொது மக்களின் நலன்கருதி, அனைத்து நாட்களிலும் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரையிலும் மற்றும் தெப்பக்குளம் துணை தபால் நிலையத்தில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் ஆதார் கவுண்டர் செயல்பட்டுவருகிறது.

ஆதார் புதிதாக எடுக்க கட்டணம் இல்லை. தேவையான ஆவணம் குழந்தையின் அசல் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர் ஆதார் அட்டை.

பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம் செய்ய ரூபாய் 75/-புகைப்படம் மற்றும் கைரேகை மாற்ற ரூபாய் 125/-

பெயர் மாற்றம் செய்ய- பாஸ்போர்ட், புகைப்படத்துடன் மதிப்பெண் சான்றிதழ், புகைப்படத்துடன் பென்ஷன் கார்டு, புகைப்படத்துடன் சாதி சான்றிதழ்.

பிறந்த தேதி மாற்றம் செய்ய- பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், மதிப்பெண் சான்றிதழ்.

முகவரி மாற்றம் செய்ய- பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, மூன்று மாதத்திற்கு உட்பட்ட கேஸ் இணைப்பின் ரசீது, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம்.

மேற்கூறிய ஆவணத்தில் ஏதேனும் ஒன்று அசல் ஆவணம் மாற்றம் ஏற்றாற் போல் கொண்டு வர வேண்டும்.

இந்த அரிய வாய்ப்பை, பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி அஞ்சல் கோட்டமுதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் பிரகரீஷ் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.