Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகம் முழுவதும் சுமைதூக்குவோர் தொழிலாளிகள் நாளை முதல் பல்வேறு கட்ட போராட்டம்.மாவட்ட செயலாளர் சரவணன் அறிவிப்பு.

0

'- Advertisement -

நுகர் பொருள் வாணிப கழகத்தின் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி

Ad banner

தமிழகம் முழுவதும் சுமைதூக்குவோர் தொழிலாளிகள் பல்வேறு கட்ட போராட்டம்.மாவட்ட செயலாளர் சரவணன் அறிவிப்பு.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சுமைதூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழகம் தழுவிய பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது

சங்க அங்கீகார தேர்தலை உடனே நடத்தவேண்டும். வருகைப்பதிவேட்டில் பெயர் சேர்க்க வேண்டும்.

2022 முன் தேதியிட்டு பச்சை அட்டை வழங்க வேண்டும். 12.07.2025 முன் தேதியிட்டு நிலுவையில் உள்ள 60 சதவிதம் கூலி உயர்வையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. அதன்படி நாளை 25 ந் தேதி முதல் ஜூன் 5 ந்தேதி வரை நிதான வேலை செய்யும் போராட்டமும், ஜுன் 6ந்தேதி முதல் 10 ந்தேதி வரை உள்ளிருப்பு போராட்டமும்,

வருகிற ஜுன்11 ந் தேதி முதல் சத்துணவு இறக்கும் பணிக்கு செல்ல மறுக்கும் போராட்டமும்,

19 ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று திருச்சி மாவட்ட செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.