Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமராவதி கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஊழியர் சங்கத்தினர் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்

0

'- Advertisement -

அமராவதி கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

 

 

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் அமராவதி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் வாயிலாக அமராவதி கூட்டுறவு துறை சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தில் ரேஷன் கடை வாடகை உயர்வை பணியாளர்களை கட்ட சொல்லி வலியுறுத்தலை எதிர்த்து குரல் கொடுத்த ஊழியர் பாத்திமாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை கண்டித்தும், ரேஷன் கடைக்கு கொள்முதல் செய்யப்பட வேண்டிய பொருட்களை வாங்கி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்ததை கண்டித்து குரல் கொடுத்த பணியாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் மீது பொய் கஞ்சா வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், இந்த பிரச்சனையில் குரல் கொடுத்த ஊழியர்கள் தற்காலிக பணி இடை நீக்கம் ஊதிய குறைப்பு மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை கண்டித்தும், இதனால் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் சரியான நிலையில் மக்களுக்கு பொருட்களை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது, எனவே அமராவதி சூப்பர் மார்க்கெட் முறையீடு சம்பவங்கள் குறித்து தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு நிலையான தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.