தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகம் முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்கள் இன்று முற்றுகை போராட்டம் 100 பேர் கைதால் பரபரப்பு.
சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நடத்த வேண்டிய அங்கீகார சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்,பத்து ஆண்டுகள் பணி முடித்தவருக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும்,நிலுவையில் உள்ள 60 சதவீதம் கோழி, உயர்வை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திருச்சி மண்டல அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாநில இணைச்செயலாளர்கள் ரவி,சதீஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம். சரவணன் முன்னிலை வகித்தார். இந்தப் போராட்டத்தில் மாவட்ட தலைவர் யேசுதாஸ்,மாவட்ட பொருளாளர் தர்மராஜ்,மாவட்டத் துணைத் தலைவர் செல்வராஜ்,மாவட்டத் துணைச் செயலாளர் ராஜ்குமார்,மாவட்ட இணை தலைவர் முத்துச்செல்வன்,மாவட்ட இணை செயலாளர் மாதவன்,மாவட்ட அவைத்தலைவர் ரங்கசாமி,மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல் |மாவட்ட ஆலோசகர் செல்வராசு உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட சுமைதொக்கும் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.பின்னர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.அவர்களை போலீசார் இரண்டு பஸ்களில் அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

