Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சிக்கு பல லட்சம் நஷ்டமாக இவர் மாதம் மாதம் யார் யாரிடம் எவ்வளவு மாமுல் வாங்குகிறார் என்ற முழு விபரம்

0

'- Advertisement -

  • திருச்சி மண்டலம் 2 வார்டு 32 இல் பணியாற்றி வரும் துப்புரவு மேற்பார்வையாளர் பழனியின் மகன் வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு கூறப்பட்டுள்ள தகவல்கள் கீழ் வருமாறு :-

 

நான் திருச்சிராப்பள்ளி மாநாகராட்சி வார்டு குழு அலுவலகம் 2 இல் வார்டு எண் 32 இல் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த நிலையில் திருச்சி ஆளுநர் வரும் நேரத்தில் அவர் வரும் வழியில் குப்பையாக இருந்ததாக கூறி என்னை கடந்த 03/03/2025 அன்று திருச்சி மாநகராட்சி ஆணையர் என்னை தற்காலிக பணிநீக்கம் செய்தார் .

 

நான் 04/03/2025 அன்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் முறையீட்டு அவர்கள் மூலமாக ஆணையர் இடத்தில் நான் ஆற்றிய என்னுடைய பணிகளை மேற்கோள் காட்டி மீண்டும் பணி வழங்குமாறு கடிதம் கொடுத்து ஆணையர் அவர்கள் நகர சுகாதார அலுவலர் அதிகாரியை பார்க்க சொல்லி நான் அவரை பார்த்தேன்.அவர் என்ன அவசரம் ஒருமாதம் ஆகட்டும் என சொல்லி என்னை வெளியே போக சொல்லி மிரட்டினார் .

 

நான் தொடர்ந்து , நகர சுகாதார அலுவலர் அதிகாரியிடம் மற்றும் துணை ஆணையர் அதிகாரியிடம் அழுது எனது கஷ்டங்களை சொல்லியும் , அவர் செவி சாய்க்காமல் நான்கு மாதங்களாக என்னை அலைகழித்தது எனக்கு மிகவும் மன வேதனையும்,கடன் சுமையும் கூடுதலாக மன உளைச்சலையும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் கொடுத்தது.

 

இதன் இடையில் 09/06/2025 அன்று திருச்சி மாநகராட்சி ஆணையர் உத்தரவில் நகர சுகாதார அலுவலர் முறைகேடாக ஒரு சில நபர்களிடம் லஞ்சமாக ஒருலட்சம் வாங்கி கொன்டு தகுதியில்லாத நபர்களுக்கு பணி உத்தரவு வழங்கியுள்ளார் .

 

எனக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் சர்வீஸ் உள்ளது. இந்த மாநகராட்சிக்கு 100 சதவிகிதம் உண்மையாக இருந்த எனக்கு நியாம் கிடைக்கவில்லை , எனக்கு நியாயம் வேண்டி 16/06/2025 அன்று மாவட்டஆட்சியாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் செய்து மனு கொடுத்த உடன் திருச்சி மாவட்ட ஆட்சியாளர் உடனே எனக்கு ஆர்டர் போட்டு கொடுக்க சொல்லி வார்டுகுழு அலுவலக 4 உதவி ஆணையர் அவர்களிடம் உத்தரவு விட்டார் .

 

சுகாதார ஆய்வாளர் டேவிட் என்பவருக்கு கீழே வேலை பார்க்கும் சுகாதார மேற்பார்வையாளர் வினோத், வேதா ( PVT )-ல் வேலை பார்க்கும் மேனேஜர் மாரியப்பன் இவர்கள் மூலம் சுகாதார மேற்பார்வையாளரிடம் மாதம் மாதம் கறி , மீன் மற்றும் காய்கறிகள் மாமுல் வாங்குவதும் ,

கடை வீதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களின் குடோன்கள் எங்கெங்கு உள்ளது என்பது சுகாதார ஆய்வாளர் டேவிட்-க்கு தெரியும்.

 

இதுமட்டுமல்லாமல் இவர் சுமார் 100 குடோன்களுக்கு மற்றும் கடைகளுக்கு D&O லைசென்ஸ் உரிமை கட்டணம் செலுத்தாமல் அதை அவர் கையூடாக பெற்றுக்கொண்டு

மாநகராட்சிக்கு பல லட்சங்கள் இவரால் நஷ்டம் ஏற்படுத்தி உள்ளார். மொத்த வியாபாரிகள், மார்வாடி, சேட்டுகளிடம் மாரியப்பன் மூலம் மாத வசூல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் டேவிட்.

 

ஸ்ரீரங்கம் வார்டு குழு அலுவலக பெண் துப்புரவு பணியாளர்களிடம், அத்துமீறி நடந்து பணியாளர்கள் அடித்து தும்சம் செய்து விரட்டி மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்கி வழக்கு இவர் மீது நிலுவையிலுள்ளது.

 

இந்த நிலையிலும் வார்டு குழு அலுவலகம் 2 இல் DPC பணியாளரிடம் பாலியில் தொந்தரவு செய்து அவர்களின் குடும்ப உறவுகாரர்கள் சேர்ந்து காஜாப்பேட்டை அலுவலகத்தில் புகுந்து இவரை அடித்த உதைத்த வழக்கு திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் நிலுவையிலுள்ளது.

இவர்போடும் மிட்டிங்கில் சாதிபெயரை சொல்லி பிரித்தாளும் சூழ்சியை செய்வதும் எங்களுடைய சாதியை சொல்லி எங்க முன்னோர்களை இழிவாக பேசி நக்கல் செய்வதும்,

எடத்தெருவில் தேங்காய் வியாபாரம் செய்யும் நபரின் சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள சாமான்களை அள்ளி கொண்டு சென்று அவரிடம் திருப்பி கொடுக்காமல் அவரைக் அலைகழித்து அவர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது நண்பர் என்பதால் அவருடைய பொருட்களை கொடுக்க கூறியதற்கு சக்கிலியனுக்கும் , வெள்ளாளனுக்கும் என்ன தொடர்பு என சாதியை கூறி இழிவாக பொது வெளியில் பேசி எனக்கு நிறைய மனஉளைச்சலை கொடுத்துள்ளார். இந்த டேவிட் ஏற்கனவே சுகாதார பெண்  பணியாளர்களிடம் கொடுத்த வழக்குகள் நிலுவையில் உள்ளது .

ஆகவே இவரை போன்ற அதிகாரிகளால் திருச்சி மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு அவப்பெயர் ஏற்பட இவர் காரணமாக இருக்கிறார். இவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து எனக்கு நியாம் கிடைக்க வழிவகை செய்யுமாறும் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என மனவேதனைவுடன் வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .

வேலுசாமிக்கு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டும் பணி வழங்காத காரணம் என்ன? நடவடிக்கை எடுப்பாரா திருச்சி மாநகராட்சி மேயர் ?

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.