திருவெறும்பூர் அருகே
ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு
வாலிபர் கைது. 2 பேருக்கு வலை.
திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 27) ஆட்டோ டிரைவர்.
இவர் ஆட்டோவில் கைலாஷ் நகர் பகுதிக்கு சவாரி சென்றார். அங்குள்ள ஒரு ஹோட்டல் அருகாமையில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியது.
இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஏற்பட்ட தகராறில் மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி குவலக்குடி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (வயது 22) அவரது நண்பர் சந்துரு (வயது 21) மற்றும் மூன்று பேர் சேர்ந்து ஆட்டோ டிரைவரை அறிவாளால் வெட்டினர். மேலும் அவரது ஆட்டோவை அடித்து நொறுக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த பார்த்தசாரதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் பார்த்தசாரதி அளித்த புகாரின் அடிப்படையில் சஞ்சையை திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும் சந்துரு உள்ளிட்ட இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.