Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே சாட்டை துரைமுருகன் கார் விபத்து .

0

'- Advertisement -

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே அரசு பேருந்து மோதி நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கார் விபத்து.

 

நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மணப்பாறை செல்வதற்காக திருச்சியில் இருந்து மணப்பாறை செல்வதற்காக புறப்பட்டு திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னலில் அருகே சென்றுக் கொண்டிருந்த போது அவரது வாகனத்திற்கு பின்னால் ஈரோட்டில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அரசு பேருந்து காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது

 

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சாட்டை துரைமுருகனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதே போல பேருந்தில் பயணித்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. காரின் பின்புறம் இண்டிகேட்டர் லைட் உள்ளிட்டவை சேதமடைந்தது இதேபோல பேருந்து இருக்கும் முன் பகுதி சேதம் அடைந்தது இந்த விபத்து காரணமாக தலைமை தபால் நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.