காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் எல்லாம் சாலையோர வியாபாரிகள் பட்டியலில் உள்ளது எனவே முறையான கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என அனைத்து சாலையோர வியாபாரிகளின் கூட்டமைப்பு கலெக்டரிடம் மனு.
முறையாக கணக்கெடுப்பு நடத்தி
சாலையோர வியாபாரிகள்
தேர்தலை நடத்த வேண்டும்.
திருச்சி மாநகர அனைத்து சாலையோர வியாபாரிகளின் கூட்டமைப்பு கலெக்டரிடம் கோரிக்கை.
திருச்சி மாநகர அனைத்து சாலையோர வியாபாரிகளின் கூட்டமைப்பு தலைவர் செல்வி,

செயலாளர் அன்சர்தீன்,
பொருளாளர் ஏ.அஷ்ரப் அலி ஆகியோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு தனியார் நிறுவனம் மூலமாக கணக்கெடுப்பை மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இதில் சாலையோர வியாபாரிகள் அல்லாதோர் அதிகப்படியாக பட்டியலில் உள்ளனர் மற்றும் காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபராம் செய்யும் வியாபாரிகளின் பெயரும், அவர்களிடம் வேலை செய்யும் வேலையாட்கள் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளனர் என்பதை பலமுறை மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்தும், பலன் இல்லாத காரணத்தால் நாங்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் இறந்தவர்கள் பெயர் மற்றும் வியாபாரிகளே அல்லாதோர் (வியாபாரம் செய்யாத) நபர்களின் பெயர்கள் அதிகப்படியாக உள்ளது என்பதால் முறையாக கணக்கெடுப்பு நடத்தி சாலையோர வியாபாரிகளின் தேர்தலை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆகையால், மீண்டும் சாலையோர வியாபாரிகளை முறையாக கணக்கெடுப்பு நடத்தி உண்மையாக உள்ள வியாபாரிகளின் பெயர்களை சேர்த்து சாலையோர வியாபாரிகளின் தேர்தலை முறையாக நடத்திட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று
திருச்சி மாநகராட்சி ஆணையரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது .