ஆட்டோ டிரைவருடன் சுற்றிய ஸ்ரீரங்கம் பெண் தலைமை காவலர்.ஆட்டோ டிரைவரை அடியாட்களுடன் சென்று தாக்கிய முன்னாள் கள்ள காதலன் சிறப்பு உதவி ஆய்வாளர்.
தன்னுடன் தொடர்பில் இருந்த பெண் போலீஸ் யாருக்கு சொந்தம்? என்பதில் ஏற்பட்ட தகராறில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் 4அடியாட்களுடன் சென்று
ஆட்டோ டிரைவரை அடித்து உதைத்த சம்பவத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் சிக்கிய பெண் தலைமை காவலரையும் சஸ்பெண்டு செய்து திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

திருவரங்கம் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் சிறப்பு
உதவி ஆய்வாளர் ஆறுமுகம் (வயது 48)
இவருக்கும் திருவரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்த பெண் தலைமை காவலர் மாது (வயது 43) என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்தது.
இந்த சூழலில் மாதுவுக்கும் சமயபுரம் டோல்கேட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயச்சந்திரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகம் கோபமடைந்து மாதுவிடம் விசாரித்துள்ளார்.
ஆனால் இது குறித்து எதுவும் கூறாத மாது ஆறுமுகத்துடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
சம்பவத்தன்று மாது ஆட்டோவில் ஜெயச்சந்திரனுடன் சிறுகாம்பூர்
நோக்கி சென்று கொண்டிருப்பதாக
தகவல் கிடைத்தது.
தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து ஆட்டோவை விரட்டிச் சென்ற ஆறுமுகம் சிறுகாம்பூரில் ஜெயச்சந்திரனை
வழி மறித்து அடித்து உதைத்தார்.
இதில் காயமடைந்த ஜெயச்சந்திரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து ஜெயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
ஆறுமுகம் மற்றும் அவருடன் வந்த 4பேர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி விசாரணை மேற்கொண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் மாது இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் .