Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.

0

 

திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று, இளங்கலை மருத்துவ படிப்பில் தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா!

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையம் உயர் கல்விக்கான நுழைவு தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் கல்வி நிறுவனங்களில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளங்கலை மருத்துவம் (MBBS,பல் மருத்துவம் BDS) மற்றும் ஆயுஷ் (BAMS, BUMS, BHMS) உள்ளிட்ட படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு நுழைவு தகுதி தேர்வாக தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் தேசிய தகுதிக்கான நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.


அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நடைபெற்ற தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம்
வெளியிடப்பட்டது.

இதில் திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் 6 பேர் 685 மற்றும் 700 க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் டி.சஸ்மிதா 705 மதிப்பெண்களை பெற்று அகில இந்திய அளவில் 1039 வது இடத்தையும், ஜோனஸ் ஜே 700 மதிப்பெண்களை பெற்று அகில இந்திய அளவில் 2054 வது இடத்தையும், காயத்ரி 700 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 1813 வது இடத்தையும் பெற்றுள்ளனர். இதே போல 675 மதிப்பெண்களுக்கு மேல் மூன்று மாணவர்கள் பெற்றுள்ளனர். இந்த சாதனை படைத்த மாணவர்களுக்கு திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் நிறுவனத்தின் தலைமை கல்வி மற்றும் வனிகப்பிரிவு தலைவர் தீரஜ் குமார் மிஷ்ரா கலந்து கொண்டு மாணவர்களின் சாதனையை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாணவர்கள் கூறுகையில்,..

ஆகாஷ் நிறுவனம் தரும் பயிற்சிக்காக குறுகிய காலத்தில் வெவ்வேறு பாடங்களில் பல கருத்துக்களை தங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகாஷ் பயிற்சி மையம் உதவியதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என பெருமிதத்தோடு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆகாஷ் நிறுவனத்தின் தலைமை கல்வி மற்றும் வனிகப்பிரிவு தலைவர் தீரஜ் குமார் மிஷ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

இந்த குறிப்பிட்ட சாதனை ஒவ்வொரு மாணவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஆகாஷ் ஏஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் பயிற்சி நிறுவனம் வழங்கிய உயர்தர பயிற்சிக்கு கிடைத்த சான்றாகும். உலக அளவில் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராக ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் நடத்தும் பயிற்சி வகுப்பு திட்டத்தில் மாணவர்கள் சேர்ந்தனர். கருத்தாக்கங்களை பற்றிய அவர்களின் கடுமையான புரிதல் மற்றும் முறையான பயிற்சி அட்டவணையை ஒவ்வொரு மாணவர்களும் கண்டிப்பாக கடைபிடிப்பதே அவர்களின் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு காரணம். மாணவர்களின் இதுபோன்ற முன்மாதிரியான சாதனைகளை தங்கள் நிறுவனம் மனதார மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறது. 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதிக்கான தேர்வு எழுதினர்.

மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, பெற்றோர்களின் ஆதரவு ஆகியவை ஒவ்வொரு மாணவர்களின் சாதனைக்கு பறைசாற்றுகிறது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.