எடமலைப்பட்டி புதூரில் தங்க நகைக்கு பாலிஷ் போட்டு தருவதாக கோரி 3 பவுன் நகையை திருடிய 2 பீகார் வாலிபர்களுக்கு வலை .
எடமலைப்பட்டி புதூரில் தங்க நகைக்கு பாலிஷ் போட்டு தருவதாக கோரி 3 பவுன் நகையை திருடிய 2 பீகார் வாலிபர்களுக்கு வலை .
திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருபாகரன். இவரது மனைவி மீனாட்சி (வயது 42. )சம்பவத்தன்று வீட்டில் மீனாட்சி மட்டும் தனியாக இருந்தபோது அவரது வீட்டுக்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் அங்கு வந்தனர். வீட்டுக்குள் இருந்த மீனாட்சியிடம் தங்க வெள்ளி, நகைகளை பாலிஷ் போட்டு தருகிறோம். உங்களிடம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு மீனாட்சி அதையெல்லாம் இல்லை.நீங்கள் செல்லுங்கள். எனக்கு பல வேலை இருக்கிறது என்று கூறியுள்ளனர். அதற்கு அந்த இரண்டு பீகார் வாலிபர்களும் குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். அப்பொழுது மீனாட்சி சமையல் அறைக்கு சென்று குடிக்க செம்பில் தண்ணீரை எடுத்துக்கொண்டு கொடுக்க வந்தார். அப்பொழுது அறையில் இருந்த இரண்டு வாலிபர்களும் மாயமாகி விட்டார்கள். மேலும் வீட்டின் மேஜையில் இருந்த மூன்று பவுன் நகை காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த இரண்டு வாலிபர்கள் தான் நகையை திருடி சென்று உள்ளார்கள் என தெரியவந்தது.
இதையடுத்து மீனாட்சி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடியதாக கூறப்படும் இரண்டு பீகார் வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.