திருச்சி: போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2 பேர் சிக்கினார்.
சிவகங்கை இளையான்குடி சாலை கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் அப்துல் ஜாஃபர். இவரது மகன் ஜபருல்லா (வயது 48). இவர் ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை இமிகிரேஷன் அதிகாரி லோகநாதன் தலைமையிலான அதிகாரிகள் சோதனையட்டனர். அப்போது போலி ஆவணங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் அவர் வெளிநாடு செல்ல முயன்றது தெரியவந்தது. உடனே அவரை இமிக்கிரேஷன் அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் சிவகங்கை சோலை நகரை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரும் போலி ஆவணங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியா செல்ல செல்ல முயன்ற போது இமிக்கிரேஷன் அதிகாரிகளிடம் சிக்கினார். அவர்கள் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் சுப்பிரமணியனை ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் சுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.