
தகராறை விளக்கச் சென்ற கல்லூரி மாணவருக்கு அடி- உதை .
6 பேர் மீது வழக்கு.
திருச்சி உறையூர் மேலபாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் பிரகதீஸ்வரன் (வயது 21 ).இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள அரவானூர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தார். அங்கு இரு பிரிவுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதை பிரகதீஸ்வரன் சமாதானம் செய்துள்ளார் .
இதில் ஆத்திரமடைந்த ஆறு பேர் கொண்ட கும்பல் பிரகதீஸ்வரனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியது
.இது குறித்து பிரகதீஸ்வரன் உறையூர் போலீஸ் புகார் கொடுத்தார். சப் இன்ஸ்பெக்டர் கோப்பெருஞ்சோழன் 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

