திருச்சி மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலராக சிவக்குமார் நியமனம்.

திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈரோட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய ர. பாலமுரளி. இவர் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு. சிவக்குமார் திருச்சி மாவட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் மொத்தம் 20க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.