மறைந்த டாக்டர் ஜெயபால் பிறந்த நாளையொட்டி உலக சிலம்ப இளையோர் சம்மேளனத்தின் சார்பில் இலவச கோடைகால சிலம்ப பயிற்சி முகாம்.
உலக சிலம்ப இளையோர் சம்மேளனத்தின் புரவலரும் மருத்துவ வள்ளல் நினைவில் வாழும் டாக்டர்.வி.ஜெயபால் அவர்களின் 88 வது பிறந்தநாளையொட்டி இன்று மாணவ மாணவிகளுக்கு இலவச கோடைகால சிலம்ப பயிற்சியை திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.
மேல்நிலைப்பள்ளியில் உலக சிலம்ப இளையோர் சம்மேளன தலைவர். டாக்டர். வி.ஜெ. செந்தில் வழிகாட்டுதலுடன் முனைவர்.
என்.மாணிக்கம், ஆர்.மோகன், வரகனேரி. என்.கே.ரவிச்சந்திரன் துவங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கி.ஆ.பெ.மேல்நிலைபள்ளி இயக்குனர் திருநாவுக்கரசு, தலைமை ஆசிரியர். சந்துரு, உடற்கல்வி இயக்குனர் சுந்தரேசன், ஊட்டத்தூர் அன்பு, T. முத்துக்குமரன், ஆமூர். கண்ணன், கு.ம.ரவி, துறையூர் செந்தில், முத்துகுமார், மற்றும் சிலம்ப ஆசான் கிருஷ்ணன்,
கலை இளமணி சுகித்தா, சிலம்ப. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் மறைந்த டாக்டர் வி.ஜெயபால் அவர்கள் திருஉருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி ஆதரவற்ற சாலையோர ஏழை எளியோருக்கு அன்னதானம் கொடுத்து
இலவச கோடைகால பயிற்சி முகாமை துவங்கி வைத்தனர்.