திருச்சியில் இம்ப்காப்ஸ் மருத்துவமனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே இயங்கி வந்த இம்ப்காப்ஸ் கிளை விற்பனை நிலையம் தற்போது சத்திரம் பஸ் நிலையம் அருகே இ.ஆர். பள்ளி எதிரே இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனுடன் மருத்துவ ஆலோசனை மையமும் மற்றும் தொக்கண சிகிச்சை பிரிவும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு இம்ப்காப்ஸ் தலைவர்
கண்ணன் தலைமை தாங்கினார். விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றனார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஒருங்கி ணைந்த மாவட்டங்களின் மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் காமராஜ் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
விழாவில் இம்ப்காப்ஸ் துணை தலைவர் டாக்டர் சுரேஷ், இயக்குனர் டாக்டர் விஜயன், தமிழ்நாடு சித்த மருத்துவ அலுவலர்கள் சங்க
செயலாளர் (பொறுப்பு) காதர்முகைதீன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் இம்ப்காப்ஸ் இயக்குனர்கள், டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து செய் நிலையம் மற்றும் பண்டக சாலையான (பன்மாநில கூட்டுறவு சங்கம்) இம்ப்காப்ஸில் தயாரிக்கப்படும் தரமான சித்தா, ஆயுர் வேதா மற்றும் யுனானி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப் படுகிறது. தொக்கண சிகிச்சை நல்ல முறையில் அளிக்கப்படுகிறது.