44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பாக பணிபுரிந்த திருச்சி காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் 71 நபர்களுக்கு பாராட்டு.
உலக சதுரங்க விளையாட்டு போட்டியான 44வது “செஸ் ஒலிம்பியாட்” போட்டி கடந்த 2022-ம் ஆண்டு ஜீலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ந்தேதி வரை வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
இவ்விளையாட்டு போட்டியில் உலக முழுவதுமிலிருந்து 187 நாடுகளை சேர்ந்த 2000 செஸ் விளையாட்டு வீரர்களும் 200 குழு மேலாளர்களும், 200 நடுவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த விளையாட்டு விழாவிற்கு தமிழ்நாடு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலிருந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
இதன்படி திருச்சி மாநகர காவல்துறை சார்பாக 1 காவல் ஆய்வாளர், 1 போக்குவரத்து காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள், 17 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 50 காவல் ஆளிநர்கள் உட்பட 71 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணிக்கு சென்று 28.07.22-ந்தேதி முதல் 10.08.22-ந்தேதி வரை சிறப்பாக பணிபுரிந்து வந்தனர்.
இந்த பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அனைவரையும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் காவல்படை தலைவர் சைலேந்திரபாபு பாராட்டி சான்றிதழ்கள் வழங்கியுள்ளார்கள்.
இச்சான்றிதழ்கள் மேற்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருச்சி மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (26.04.23) நேரில் அழைத்து திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள். மேலும் அவர்களது பணி மென்மேலும் சிறக்க பாரட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்கள்.