Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி என்.ஐ.டி.யில் தலைசிறந்த முன்னாள் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி.

0

தேசிய தொழில் நுட்ப கல்லூரி மகத்தான பணி திருச்சியின் பெருமைமிக்க தலைசிறந்த பொறியாளர்களை
உருவாக்குவதாகும்.

ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய
தலைசிறந்த மாணவர்களை முதுகலைப் பட்டம் பெற்று 20 வருடம் அல்லது இளநிலை
பட்டம் பெற்று 25 ஆண்டுகள் நிறைவு பெற்ற முன்னாள் மாணவர்களை கல்லூரி
கௌரவிக்கும்.

அதேபோல், இளைய சாதனையாளர் விருது (Young Achiever Award) 40
வயதுக்கு மிகாமல் சாதனை படைத்த மாணவர்களையும் கௌரவிக்கும்.

இந்த கௌரவ பரிசு 5 பிரிவுகளில் வழங்கப்படுவது வழக்கம்
கல்வி / ஆய்வு / புதுமை / கண்டுபிடிப்பு பிரிவு
பெருநிறுவனம் மற்றும் தொழிற்சாலை பிரிவு
தொழில் முனைவோர் முயற்சி பிரிவு
பொது நிர்வாகத்தில் மேன்மை பிரிவு
சமூக சேவை பிரிவு

இந்த விருதுகள் செப்டம்பர் 27 ஆம் தேதி செவ்வாய் கிழமை கல்லூரி
வளாகத்தில், நிர்வாகக் குழுவின் தலைவர், ஸ்ரீ பாஸ்கர் பட் அவர்கள்
முன்னிலையில், இந்திய மேலாண்மை கல்லூரி திருச்சியின் இயக்குனர் முனைவர்,
பவன் குமார் சிங் அவர்கள் தலைமையில், NIT திருச்சியின் இயக்குனர்
முனைவர், அகிலா அவர்களால் வழங்கப்பட்டது.

மஹாலிங்கம் முன்னாள்
மாணவர்கள் சங்கத்தலைவர், முன்னாள் மாணவர்கள் சார்பாக வாழ்த்தி பேசினார்.

ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி தன்னுடைய மாணவர்களில் மேன்மையானவர்களையும்,
பெரும் சாதனை புரிந்தவர்களையும் கௌரவிக்கும் விதமாக 2 விருதுகளை வழங்கி
வருகிறது. ஒன்று புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருது மற்றொன்று இளம்
சாதனையாளர் விருது.

இளங்கலை பட்டம் பெற்று 25 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் அல்லது முதுகலை
பட்டம் பெற்று 20 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள், தலைசிறந்த முன்னாள்
மாணவர்களுக்கு விருது.

40 வயதுக்கு மிகாமல் சாதனைகள் புரிந்திருக்கும் முன்னாள் மாணவர்கள் இளம்
சாதனையாளர் விருதுக்கு தகுதி பெறுகிறார்கள். இவ்விரு விருதுகள் 5
வெவ்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டது.

இவ்வாண்டு 16 தலைமை முன்னாள் மாணவர் விருது, இளம் சாதனையாளர் விருது
ஒருவருக்கும் வழங்கப்பட உள்ளது.

தலைமை முன்னாள் மாணவர் விருது ஐம்பெரும் பிரிவுகள் மற்றும் விருது
பெருவோர்களின் விவரம்

1. பொது நிர்வாகத்தில் மேன்மை பிரிவு:
முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின்
நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சர்.
அமெரிக்க ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரி, முனைவர். ராஜ் அய்யர்.

2. கல்விசார் / ஆய்வு / புதுமை / கண்டுபிடுப்பு பிரிவு :
பிரபல மருந்து மற்றும் தடுப்பூசி நிறுவனமான “Pfizer” யின் உயிர்
செயல்முறை துறையின் தலைமை அதிகாரி முனைவர். ரங்கநாதன் தோதாவர்தி.
Adobe நிறுவனத்தின் முன்னான் மூத்த முதன்மை விஞ்ஞானி
சீதாராமன் நாராயணன்.

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (IOC) ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு
துறையின் மேலாளர் A. V கார்த்திகேயனி. அமெரிக்காவின் clemson
பல்கலைக்கழகத்தில் கணினித் துறை பேராசிரியர் முனைவர்.முரளிசீதாராமன்.

3.பெருநிறுவனம் மற்றும் தொழிற்சாலை பிரிவு :
NATRAX யின் மையத்தலைவர் முனைவர். கருப்பையயா முன்னாள் விண்வெளி
துறையின் பொது மேலாளர் முனைவர். ஜெயக்கர் வேதமாணிக்கம். (HAL)
Egon Zehnder யின் ஆலோசகர் மற்றும் பங்குதாரர் கோபிநாத் அய்யர்.
Google நிறுவனத்தின் Chief Evangelist, Digital Transformation and
Strategy கோபிநாத் கல்லாயில்.
RITES நிறுவனத்தின் (RITES India) முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர்
கோபி சுரேஷ் குமார்.
India 1 Payment நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். ஸ்ரீனிவாஸ்,
Titan நிறுவத்தின் கண் பராமரிப்பு பிரிவின் தலைமை நிர்வாக இயக்குனர்
சௌமன் பௌமிக்.

4.தொழில் முனைவோர் முயற்சி பிரிவு :
அமெரிக்காவின் Acacia தொடர்புகளின் தலைமை நிர்வாக இயக்குனர்
சண்முகராஜ்.
குஜராத்தின் மிகப்பெரிய சுபஸ்ரீ பிக்மெண்டஸ் நிறுவத்தின் இயக்குனர்
ஸ்ரீவட்சன்,
K Ventures நிறுவனத்தின் ஆதரவாளர் கார்த்திகேயன் திருஷ்ணசாமி.

இளம் சாதனையாளர் விருது:

முனைவர். ஸ்ரீனிவாசன், நிலையான தொழிற்நுட்பத்திற்கான மையம் உதவி
பேராசிரியர், இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூர்.

Leave A Reply

Your email address will not be published.