Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

என் கடமை என்ற உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு.

0

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இரண்டு நாள் உணவு திருவிழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியின் நிறைவு நாளில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப்குமார் கலந்து கொண்டு உணவு திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சு போட்டி, ஓவிய போட்டி, கவிதை போட்டி. குறும்பட போட்டி என பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது .

இப்போட்டியில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சார்பில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் கலந்து கொண்ட குறும்பட போட்டியில் திருப்பூர் இஷா மீடியா திருச்சி மாற்றம் அமைப்பு சார்பில் இயக்குனர் குமார் தங்கவேல் இயக்கத்தில் உருவான என் கடமை என்னும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் சிறந்த படமாக முதல் பரிசை பெற்றது.

இப்படத்திற்கான பாராட்டு சான்றிதழை படக்குழுவினருக்கு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் வழங்கினார்.

இந்நிகழ்வு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் என் கடமை விழிப்புணர்வு படத்தின் இயக்குனர் குமார் தங்கவேல் படத்தில் நடித்த மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் முத்துபாண்டி விஜய் பார்த்திபன் வின்சென்ட் மோகன் ராஜா பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழை ஆட்சித்தலைவரிடம் இருந்து பெற்று கொண்டனர்.

என் கடமை விழிப்புணர்வு குறும்படம் நிகழ்ச்சியில் பொதுமக்கள் காணும் வகையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது, படத்தை பார்த்த திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் படகுழுவினரை வெகுவாக பாராட்டினார்.

படத்தில் இயக்குனர் நடிகர்கள் மற்றும் செய்தி உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக இருப்பதாகவும் விரைவில் பெரிய திரையில் திரைப்படத்தை இயக்கவும் வாழ்த்துக்களை தெரிவித்தார் மேலும் இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் மோகன் டிரம்ப், உலக சாதனை புத்தக குழுவின் நிர்வாக இயக்குநர் எஸ்.கிருஷ்ணகுமார் ஆகியோர் குறும்படத்தை பார்த்து படகுழுவினரை பாராட்டினார். சிறப்பு விருந்தினர்களிடம் வாழ்த்துக்களை பெற்று கொண்ட படகுழுவினர் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமாருக்கும் இந்த வாய்ப்பை வழங்கி திருச்சி மாவட்டத்தில் இந்த உணவு பாதுகாப்பு திருவிழாவை சிறப்பாக நடைபெற அனைத்து பணிகளையும் மிக சிறப்பாக செய்த திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபுக்கும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் படகுழுவின் சார்பில் நன்றியினை தெரிவித்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.