Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சதர்ன் ரயில்வே பென்ஷனர்ஸ் சங்கம்-பொன்மலையின் 38 வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்.

0

 

சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்’ சங்கம்-பொன்மலையின் 38-ஆவது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு
கூட்டம் இன்று பொன்மலை டாக்டர் அம்பேத்கார் கல்யாண மண்டபத்தில்
சங்கத்தலைவர் கோபாலன் (IRSS, Retd. DCOS/TPJ, செயல்தலைவர் கணேஷ் (IRSS, Retd. Dy.CMM/GOC) தலைமையில்,

செயலாளர் பி.இராமசுவாமி, பொருளாளர் எம்.மகேந்திரன், துணைத் தலைவர்கள் எஸ்.சுந்தரேஷன், எம்.ரெங்கசாமி, இணைச் செயலாளர்கள் கே.கோபாலகிருஷ்ணன் , பழனிவேல்.உதவி செயலர்கள் எஸ்.ரவிச்சந்திரன், கே.சம்பந்தம் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.

பொன்மலை இரயில்வே பணிமனையின் முதன்மைப் பணிமனை மேலாளர் ஷ்யாமாதார் ராம். IRSME, சிறப்புரையாற்றினார்.

பொன்மலை ரயில்வே முதன்மை மருத்துவமனை அதிகாரி டாக்டர்.ஆர். சௌந்திரராஜன், M.S.(Ortho), CMS/RH/GOC , முன்னாள் பொன்மலை ரயில்வே முதன்மை பணிமனை மேலாளர் ராஜு , இந்தியன் வங்கி மேலாளர்கள், மற்றும் ரயில்வே அதிகாரிகள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, பொன்மலை இரயில்வே காலனியில் உள்ள டாக்டர். அம்பேத்கார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ் சங்கம்-பொன்மலையின் 38-ஆவது ஆண்டுவிழா மற்றும் பொது மகாசபைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1) 7-ஆவது சம்பளக் கமிஷன் சிபாரிசின்படி வழங்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.18,000/-இல் இருந்து ரூ.26,000/-ஆகவும் குறைந்தபட்ச பென்ஷனை ரூ.13,000/- ஆகவும் திருத்தி அமைத்திட மத்திய அரசை வேண்டுகிறோம்.

2) Pre-2006 பென்ஷனர்களுக்கு Higher Replacement Scale அமல் செய்ததுபோல் 01-01-1996-க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு Higher Replacement Scale அமல் செய்ய வேண்டுகிறோம்.

3) AIFPA-சென்னை பெடரேஷனை SCOVA மெம்பராக நிரந்தரமாக நியமிக்க வேண்டுகிறோம்.

4) 7-ஆவது சம்பளக் கமிஷன்படி FMA-வை பரிசீலிக்க அமைக்கப்பட்ட கமிட்டியில். இரயில்வே பென்ஷனர்களுக்கு FMA-வை ரூ.3000/- ஆக உயர்த்தவும் 22 கி.மீ. அப்பால் குடியிருக்கும் அனைத்து பென்ஷனர்களுக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி FMA வழங்க சிபாரிசு செய்யும்படியும் வேண்டுகிறோம். RELHS-இல் OPD வேண்டுமா? FMA வேண்டுமா? என்று விருப்பத்தைத் தெரிவிக்க எந்த நிபந்தனையுமின்றி விருப்பத்தை மாற்றி தெரிவிக்க அனுமதிக்க வேண்டுகிறோம்.

5 வீட்டு வாடகை அலவன்ஸாக அடிப்படை பென்ஷனில் 40% தொகையை பென்ஷனர்களுக்கு வழங்க வேண்டுகிறோம்.

6) பென்ஷனர்கள் இறந்துவிட்டால் அவர்களின் ஈமச்சடங்கிற்காக ஒரு மாத பென்ஷனுக்கு இணையானத் தொகையினை வழங்க வேண்டுகிறோம்.

7) இரயில்வே பென்ஷன் பெறும் முதியோர்களுக்கு ‘தங்கும் விடுதிகளை’ ஒவ்வொரு மாவட்டத்திலும்

அரசே நிறுவி அதனை நடத்திட மத்திய அரசை வேண்டுகிறோம்.

8) இரயில்வே பென்ஷனர்களுக்கும் ‘Festival Advance’ வழங்க வேண்டுகிறோம்.

9 தமிழக அரசு வழங்கிவரும் ‘சமூக பாதுகாப்புத் திட்டம்’ போல் மத்திய அரசு பென்ஷனர்களுக்கும் இதுபோன்ற ஓர் உதவித்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வேண்டுகிறோம்.

10) மனைவியின் ஓய்வூதிய விண்ணப்பம் மற்றும் அவர்களின் மறைவிற்குப் பின்பு திருமணமாகாத மகள்கள் ஓய்வூதிய விண்ணப்பங்கள் A/C அலுவலகத்தின் பரிசீலனையில் மிகவும் காலதாமதமாகிறது என்று பலர் புகார் கூறுகிறார்கள். டிபார்ட்மெண்டை வேண்டிக்கொள்கிறோம்.

கூட்டத்திற்கு ஈரோடு, திண்டுக்கல், சென்னை. தஞ்சாவூர். மயிலாடுதுறை, திருச்சி ஆகிய இடங்களிலிருந்து வந்துள்ள சங்கங்களின் நிர்வாகிகள், வங்கி மேலாளர்கள், ஓய்வூதிய சங்க உறுப்பினர்கள், பெரியோர்கள் மற்றும் தாய்மார்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

வந்தவர்களை சங்க செயலாளர் பி.இராமசுவாமி வரவேற்றார்.

முடிவில் செயல் தலைவர் டி.எஸ்.கணேஷ் நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.