Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக அரசின் மக்கள் நல திட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக சார்பு அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.

0

 

திருச்சி மாநகர், மாவட்ட அ.தி.மு.க.சார்பு அணி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர்,ஆவின் தலைவர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் திருச்சி மாநகர மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன் தலைமையில் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் பேசியதாவது: அதிமுகவில் உள்ள 99 சதவித தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலளராக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். இன்றைக்கு திமுக என்ற தீய சக்தியை எதிர்க்கிற ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். இனி அதிமுகவை இவர் வெற்றி பாதையில் அழைத்து செல்வார் என்று பேசினார்.

கூட்டத்தில் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த கட்சி மக்களுக்காக இயங்கி கொண்டு இருக்கும் என்று ஜெயலலிதா கூறிய வாக்குக்கு இணங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வர ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காலத்தின் கட்டாயம், கட்சியில் ஒற்றை தலைமை தேவை, எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக கட்சியை வழிநடத்த வேண்டும். வருகிற 11ந் தேதி நடைபெறும் பொது குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுப்போம்.

கட்சியை காட்டிக் கொடுப்பவர்களுக்கு ஸ்டாலின் அரசு துணை போகிறது. மிரட்டி பணிய வைக்கும் திமுக அரசை இந்தக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசையும், சட்ட ஒழுங்கை பேணிக்காக தவறிய திமுக அரசுசை கண்டிக்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஜாக்குலின்,கே.சி. பரமசிவம் , இலியாஸ்,
தொழிற்சங்கம் ராஜேந்திரன், நடராஜன், சகாபுதீன், அழகரசன் விஜய், அப்பாஸ்,
வெல்லமண்டி சண்முகம், சுரேஷ்குப்தா, முஸ்தபா,நாகநாதர் பாண்டி,கலைவாணன்,ஏர்போர்ட் விஜி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, வெல்லமண்டி பெருமாள் மற்றும் நிர்வாகிகள்
வசந்தம் செல்வமணி, தலைமை கழக பேச்சாளர் ஆரி, பாலக்கரை சதர், மல்லிகா செல்வராஜ், சக்கரவர்த்தி, வக்கீல் கலியமூர்த்தி, ஒத்தக்கடை மகேந்திரன், ஒத்தக்கடை மணிகண்டன், எடத்தெருபாபு, குருமூர்த்தி, எ.புதூர் வசந்தகுமார், வண்ணார்பேட்டை ராஜன், சிந்தாமணி மகா, என்டி.மலையப்பன், நாட்டாமை சண்முகம், செல்லப்பன், எடத்தெருபாபு, நத்தர்ஷா, வரகனேரி சதீஷ், குமார், ஈஸ்வரன், அப்பாக்குட்டி, இளங்கோ, சீனிவாசன், காசிப்பாளையம் சுரேஷ்குமார், டைமன் தாமோதரன், ஆவின் குமார், கவுன்சிலர் அரவிந்தன், காஜாப்பேட்டை சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.