Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உருகுலைந்த காமராஜர் சிலையை மாற்றி வெண்கல சிலை அமைக்கக்கோரி இந்திய நாடார்கள் பேரமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

0

 

திருச்சியில் உருகுலைந்த நிலையில் பெருந்தலைவர் காமராஜர் சிலையை சீரமைக்க இந்திய நாடார்கள் பேரமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு .

திருச்சியில் சேதம் அடைந்த பெருந்தலைவர் காமராஜர் சிலையை சீரமைக்க கோரி இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மாநில துணை தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் மனு அளித்தார்.

அந்த மனுவில் குடியிருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சி 47 வது வார்டில் உள்ள (சுப்பிரமணியபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில்) பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய முழு திருஉருவ சிலை முற்றிலும் சேதம் அடைத்து கீழே விழுகின்ற அபாய நிலையில் இருக்கிறது.1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இச்சிலையை கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா நாடார்கள் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் சௌந்தர பாண்டியன் நாடார் அவர்களுடைய ஆலோசனையின் பெயரில், மாநில துணைத்தலைவர் அக்கரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கைகள் இல்லாமல் உடல் முழுவதும் கீறிய நிலையில் சேதமடைந்த சிலையை பார்வையிட்டோம்.

‘எங்கள் மனது மிகவும் வேதனை அடைந்தது. இதே போல் வேறு ஏதேனும் தலைவர்கள் சிலை சேதம் அடைந்திருந்தால் தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடந்திருக்கும்.

பெருந்தலைவர் காமராஜர் திருச்சி மாவட்டத்திற்கு பிஹெச்எல் என்ற தொழிற்சாலை கொண்டு வந்து திருச்சி மாவட்டத்திற்கு பெருமை தேடி தந்தவர்.சுதந்திர போராட்ட வீரர்,தமிழக முன்னாள் முதல்வர், கல்விக்கண் திறந்தவர்,சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் அப்பேர்பட்ட பெருந்தலைவரின் சிலை சேதம் அடைந்ததை கண்டு மிகவும் மனம் வருந்துகிறது.

காமராஜரின் திருவுருவ சிலையை திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியும்,மாநகராட்சி, மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை.

எனவே இப்படிப்பட்ட மாமனிதர் உடைய திருஉருவ சிலையை வெண்கல சிலையாக மாற்றி சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு தன்னுடைய மனுவில் இந்திய நாடார்கள் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தெரிவித்துள்ளார்.

அப்போது மாநில அமைப்புச் செயலாளர் மூர்த்தி, மாவட்டத் தலைவர் சண்முகம், சுப்பிரமணியபுரம் சாமுவேல் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.