Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. முன்னாள் எம்பி ரத்னவேல் பேச்சு.

0

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது திருச்சி முன்னாள் எம்பி ரத்தினவேல் பேச்சு.

 

திருச்சி
மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஜங்ஷன் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவை தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ரத்னவேல் பேசியதாவது;-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா காலத்தில் பீடு நடை போட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் இந்த இயக்கம் நிற்குமா? நிலைக்குமா? என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அத்தனை ஆருடங்களையும் தாண்டி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வெற்றிடம் ஏற்பட்டதாக கூறி ரஜினிகாந்த் ,
கமலஹாசன், சீமான் உள்ளிட்ட நடிகர்கள் அரசியலுக்கு வந்தனர்.
ஆனால் அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை.

13 வது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற போது காமராஜர்,
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருந்த வரிசையில் இவரெல்லாம் ஒரு முதல்வரா? என கேலி பேசினார்கள்.
ஆனால் தனது அரசியல் அறிவால் சாதுரியத்தால் முதல்வர் பதவிக்கு தான் தகுதியானவர் என்பதை நிரூபித்து காட்டினார்.

வெற்றிடத்தை வெற்றியின் இடமாக மாற்றி கட்டிய பெருமை எடப்பாடி பழனிச்சாமியை சேரும்.
சிறந்த ஆட்சியின் அடையாளமாக சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்துதல் போன்றவை இருக்க வேண்டும். இதில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டதோடு மக்களிடம் நல்ல பெயரினை பெற்றார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மூடு விழா நடத்தினார். மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்தி டெல்டா விவசாயிகளை பாதுகாக்க பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. மற்றும் தி. மு.கவின் வாக்கு வித்தியாசம் 3% மட்டுமே.
இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மீண்டும் 2026 அதிமுக ஆட்சி அமைக்கும் என்றார்.

இக்கூட்டத்தில் நிர்வாகிகள் முஸ்தபா, வசந்தம் செல்வமணி,
இன்ஜினியர் ராஜா என்கிற சிவசங்கர ராஜா,ஒத்தக்கடை மகேந்திரன், ஒத்தக்கடை மணிகண்டன், குருமூர்த்தி ஏ.புதூர் வசந்தகுமார்,
வண்ணாரப்பேட்டை ராஜன், என்.டி. மலையப்பன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.