திருச்சியில் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகளால் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இன் நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் தனது அலுவலகம் முன்பு அமர்ந்து ஏதோ பொதுமக்களுக்காக போராடுவது போல் போராடி உடனடியாக சாலையை சரி செய்ய வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தி தனது அலுவலகத்துக்கு வரும் சாலையை மட்டும் உடனே மாநகராட்சி மூலமாக போட்டுக் கொண்டார்.
அடுத்த சில நாட்களில் மாநகராட்சி கூட்டத்தில் திருச்சி முழுவதும் உள்ள சாலைகள் சரி செய்ய நிதி ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது ஆனால் இன்னமும் பல பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாகத்தான் உள்ளது.
முதலில் பணிகள் முடிந்த ரோடுகளை சரி செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் கூறினார்.ஆனால் இதுவரை இந்த இடத்திலும் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. உதாரணமாக மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே உள்ள பணி முடிந்த சாலைகள் சீரமைக்காததால் தற்போது பெரிய பெரிய பள்ளமாக காணப்படுகிறது இதனால் பெரும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பெறும் விபத்துக்கள் ஏற்படும் முன் இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
திருச்சி காந்தி மார்க்கெட், மரக்கடை பகுதிகளும் கிழக்கு தொகுதியில் தான் உள்ளது. இது கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜிக்கு தெரியவில்லையா ?
தனது எம்எல்ஏ அலுவலக வாசலில் மட்டும் சாலையை போட போராடிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மற்ற சாலைகளை பராமரிக்க போராடுவது ஏன் ?
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரனிடம் இது குறித்து கேட்டபோது தனது அலுவலகம் அருகே உள்ள சாலையை சீரமைக்க எம்எல்ஏ வை கண்டா வர சொல்லுங்க – கையோடு கூட்டி வாருங்கள் என கூறினார்.