Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக முதல்வரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள், பகுதி செயலாளர், மற்றும் மாவட்ட பிரதிநிதி. நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்?

0

 

அடையாள அட்டை வழங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக தரைக்கடை நடத்தும் தரைக் கடைகளை மாநகராட்சி அகற்றக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருப்பினும் திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள தரைக் கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.

சி.ஐ.டி.யு. தள்ளுவண்டி, தரைக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தரைக் கடைகளை அகற்றுவதை கைவிட வேண்டும்.

அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

கடை நடக்கும் இடத்தை குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் செல்வி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் ராமர், தரைக்கடை வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ், மணிகண்டன், ஷேக் மொய்தீன், அப்துல்லா, ரத்தினம், புஷ்பாகரன், நத்தர், கோவிந்தன் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிலர் நம்மிடம் கூறும்போது:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் சுற்றி உள்ள கடைகள், தரை கடைகள் ஆகியவற்றுக்கு கடைக்கு மாத மாமுலாக தினமும் ரூ.100 அல்லது ரூ.200 விதம் தரவேண்டும் என நிர்பந்தரிக்கப்படுகிறது.

மத்திய பேருந்து நிலையம் வஉசி சாலையில் அமைந்துள்ள 26 கடைகளுக்கு தினமும் ரூ.100 என மாதம் ரூ.3000 விதம் வசூல் செய்து மொத்தமாக ரூ.80 ஆயிரம் தர வேண்டும் என 54வது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் அப்பகுதி செயலாளர் மோகன்தாஸ் மாவட்ட பிரதிநிதி மூவேந்தரன் ஆகியோர் பெற்று வருகின்றனர்.

மத்திய பேருந்து நிலையம் உள்ளே மற்றும் முன்புறம் உள்ள 26 கடைகளுக்கு தினம் கடைக்கு ரூ.200 விகிதம் மாதம் ஒன்றாரை லட்ச ரூபாய் தரவேண்டும் என 53 வது வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி தரைக்கடை வியாபாரிகளை மிரட்டி வருகிறார்.

அவ்வாறு தராத அவர்களின் கடைகளை காலி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் முலம் கடை போடக்கூடாது என தினமும் தொந்தரவு அளித்து வருகிறாராம்.

கலைச்செல்வியிடம் புஷ்பராஜ், மோகன்தாஸ், மூவேந்தரன் ஆகியோர் இணைந்து வாங்கி கொள்வது போல் நீங்களும் மாதம் ரூ.80 ஆயிரம் வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியதை கேட்காதால் தான் இந்த ஆர்ப்பாட்டம் என கூறினார்கள்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்ற உடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கேயாவது மாநகராட்சி கவுன்சிலர்கள் புதிய கட்டிட அனுமதி, தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ்,
தரைக்கடை,பெட்டிக்கடை ஆகியவற்றை வாங்க மாமுல் என தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

ஆனால் திருச்சி மாநகரத்தில் கவுன்சிலர்கள், பகுதி செயலாளர், வட்ட செயலாளர், மாவட்ட பிரதிநிதி ஆகியோர் இது போன்ற செயலில் ஈடுபட்டு உள்ளதால் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பெரும் இழுக்கு ஏற்பட்டு உள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக தமிழக முதல்வர் விசாரணை மேற்கொண்டு தரைக்கடை அமைத்து வியாபாரம் பார்த்தால் மட்டுமே அன்றாட வாழ்க்கையே ஓட்ட முடியும் என இருப்பவர்களிடம் மிரட்டி பணம் வாங்கும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் மீது உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 54வது மற்றும் 53 வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

இவர்களை விட  நான் தான் ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் எனக்கூறி ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார் அடாவடி வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் அவரை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.