Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பாரம்பரியம் காப்போம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

0

திருச்சியில் ஜூன் 26 பாரம்பரியம் காப்போம் நிகழ்வு.

பாரம்பரிய உணவுகள், பழங்கால சிறார் விளையாட்டுகள், பாரம்பரியக் கலைகள், பழங்கால பொருள்கள் ஆகி யவற்றின் பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் திருச்சியில் ஜூன் 26-இல் பாரம் பரியம் காப்போம் நிகழ்வு நடைபெறவுள்ளது.

திருச்சி மரங்கள் அறக்கட்டளை, மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு, பசுமை சிகரம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய் கின்றன.

இந்நிகழ்வுகளில் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய சமையல், காய்கனிகள், கீரை, மரம் மற்றும் நெல் ஆகியவற்றின் பாரம்பரிய விதைகள், சிலம்பம், கில்லி, நுங்கு வண்டி, பாண்டி, தாயம், பல்லாங்குழி, பச்சைக் குதிரை, கும்மியாட்டம், ஒயிலாட்டம், கரகம், பொய்க்கால் குதிரை, தப்பு,பறை, கொம்பு,ஆர்மோனியம்,வீணா,களரி,
சுருள்வாள்,பூமராங், கத்திச்சண்டை, ஈட்டி, வேல்கம்பு, மண்பானை, செம்பு, பித்தளை, வெண்கலம், பழங்கால நாணயங்கள், தபால் தலைகள், வானொலி பெட்டிகள், பதநீர், இளநீர், பானகம், மோர் உள்ளிட் டவற்றைக் காட்சிப் படுத்தவும், விற்பனை செய்யவும், கற்றுத்தரவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வரும் ஜுன் 26ஆம் தேதி திருச்சி கிருஷ்ண மூர்த்தி நகரிலுள்ள ஜெகன் மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்த நிகழ்வு நடை பெறுகிறது.

இதேபோல, ஜூலை 10ஆம் தேதி திருவானைக்காவல் தெப்பக்குளம்
அருகேயுள்ள கணேஷ் டிராவல்ஸ் வளாகத்திலும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடு களை ஒருங்கிணைப்பாளர்களான மரம் பி. தாமஸ், மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், விதைகள் எஸ். யோகநாதன், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி. ச தீஷ்குமார், தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு ஆர்.கே. ராஜா ஆகியோர் செய்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.