Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி கண்டு திமுகவினர் நடுக்கம்.பொதுமக்கள் கருத்து.

0

 

திருச்சி பொன்னகர் பகுதியில் பா.ஜ.க.
கொடிக்கம்பம் நடுவதற்கு தி.மு.கவினர் எதிர்ப்பு. இருதரப்பினர் இடையே மோதல்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பொன்நகர்
வி.வி.வி.தியேட்டர் அருகே பாஜக கொடி கம்பம் ஒன்று ஊன்றப்பட்டது. இதனை சிலர் பிடுங்கி அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் மீண்டும் அந்த இடத்தில் கொடிமரம் ஊன்றி, அதில் பாஜக கொடி ஏற்ற இன்று திரண்டனர். மாவட்ட தலைவர் ராஜசேகரன், மண்டல் தலைவர் பரமசிவம் தலைமையில் கொடியேற்ற பாஜகவினர் கூடியிருந்தனர்.

அப்போது அங்கு வந்த திமுக கவுன்சிலர் ராமதாஸ் தலைமையிலான சில திமுகவினர் பாஜக கொடிமரம் ஊன்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு உருவாகும் சூழல் உருவானது.

இதையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு கொடியேற்றிய பாஜகவினர் அங்கிருந்து புறப்பட்டு செஷன்ஸ் கோர்ட் போலீஸ் ஸ்டேஷனில்  மனு அளித்தனர்.

கொடி கம்பம் அகற்றப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.

பாஜக கொடிமரத்தை சேதப்படுத்த முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் கவுன்சிலர் ராம்தாஸ் கண்டன்மெண்ட் போலீஸ் உதவி ஆணையர் அஜய் தங்கம் அவர்களிடம் உங்களால் முடியாவிட்டால் செல்லுங்கள் கொடிக்கம்பத்தை நாங்கள் பிடுங்கி எறிந்து விடுவோம் என கூறினார்.இதனால் கோபமடைந்த உதவி ஆணையர் பெரிய ஹீரோவாக ஆகலாம் என நினைத்து இது போல் செயல்படுகிறார்களா , சட்டம்-ஒழுங்கை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது முறைப்படி புகார் அளித்து விட்டுச் செல்லுங்கள் இதன் அருகில் உங்களது திமுக கொடிக்கம்பமும் உள்ளது இதற்கு முறைப்படி அனுமதி வாங்கி உள்ளீர்களா? என கேட்ட பின்பு திமுகவினர் அந்த இடத்திலிருந்து கலைந்து சென்றனர்.பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் அந்த கொடிக்கம்பத்தை அகற்றினர்.

இதனை அறிந்த பாஜகவினர் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் அதே  இடத்தில் பாஜக கொடி  ஏற்ற முறையாக அனுமதி வழங்க மனு அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் கூறுகையில்:-

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற முடியாது என கூறியவர்கள் இன்று அஞ்சி நடுங்கி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து திருச்சியிலும் பாஜகவின் வளர்ச்சி இன்று அபரிதமாக உள்ளது.

எங்களது ஆர்ப்பாட்டம் போராட்டம் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை கோரிக்கையாக வைத்து  தான் நடைபெறுகிறது. உதாரணமாக சாலை வசதிகள், சுகாதாரப்பணிகள் வேண்டி தான் எங்களது ஆர்ப்பாட்டங்கள்,போராட்டங்கள் நடைபெறுகின்றது.

(சிலர் விவசாயிகள் என்ற போர்வையில் விவசாயிகளுக்காக போராடுகிறேன் என்ற பெயரில் கோமணத்துடனும்,நிர்வாணமாகவும் சாலைகளில் நின்று போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் விளம்பரம் தேடி வருகின்றனர்).

திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் அனைத்தும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை வேண்டி தான் நடைபெறுகிறது உதாரணமாக சாலை வசதி,அடிப்படை சுகாதார வசதி, தண்ணீர் வசதி போன்றவற்றுக்காக நாங்கள் போராடுவதால் பாரதிய ஜனதா தொண்டர்கள் மட்டும் இல்லாமல் பொது மக்களும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க திரண்டு வருகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

இதுபோன்ற கட்சி கொடிக்கம்பம் நிகழ்ச்சிக்கு தடங்கள் ஏற்படுத்துவதால் எங்களின் வளர்ச்சி மேன்மேலும் உயருமே தவிர இறங்காது என கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் ஒருவர் கூறியபோது பாரதிய ஜனதா கட்சியினர் தற்போது பொது மக்களின் நலனுக்காக பல போராட்டங்களை கையில் எடுத்து செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழக அளவில் அண்ணாமலையும் திருச்சியில் ராஜசேகர் அவர்களும் பொதுமக்கள் நலனிற்காக மாநில அரசை எதிர்த்து பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்,இவர்களைக் கண்டு திமுகவினர் அஞ்சி நடுங்கி வருகின்றனர் இல்லை என்றால் சாதாரண இந்த கொடிக்கம்பம் ஏற்றும் நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய பிரச்சினை தேவையா ?மேலும் திமுகவினர் ஆபாசமாக பேசியும், நடந்தும் கொண்டும் பாஜகவினர் மிகவும் அமைதியாக இருந்தனர் எனவே இவர்களுக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு என கூறினார்.

திருச்சி பொன்னகரில் நடைபெற்ற இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.