Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறை அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஆசாமி உள்ளிட்ட 3 பேருக்கு வலை.ஜேசிபி எந்திரம் பறிமுதல்.

0

மணப்பாறை அருகே
அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஆசாமி உள்ளிட்ட 3 பேருக்கு போலீசார் வலை.

ஜே.சி.பி. இயந்திரம் பறிமுதல்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் பொன்னுச்சாமி (வயது 67) .
இதே பகுதி மலையில் முருகன் கோவில் உள்ள நிலையில் மலையடிவாரத்தில் அரசுக்கு சொந்தமான கல்லாங்கொத்து புறம்போக்கு நிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 15 சென்ட் மதிப்பிலான ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தை சுற்றி கற்கலால் வேலி அமைத்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முருகன் கோவில் செல்லும் பாதை அருகில் உள்ள இடத்தில் சுமார் 5 அடிக்கு மேல் மலையின் கரையை உடைத்து அந்த இடத்தை சம படுத்தும் பணியில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வந்துள்ளார்.

பின்னர் இது பற்றி அருகில் இருந்தவர்கள் செவலூர் கிராம உதவியாளர் காதர்மைதீன் என்பவரிடம் அரசு நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து அந்த இடத்தில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சமம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் கொடுத்துள்ளனர்..

தகவலின்பேரில் கிராம உதவியாளர் காதர்மைதீன் சம்மந்தபட்ட இடத்தை பார்வையிட்டு பின்னர் இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமிக்கும் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் வருவதை அறிந்த ஜே.சி.பி. ஓட்டுனர் அங்கிருந்து ஜே.சி.பி. வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இந்நிலையில் இது பற்றி வருவாய்துறையினர் மணப்பாறை காவல் ஆய்வாளர் கருணாகரனுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக நிலத்தை சம படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி. இயந்திரத்தை பறிமுதல் செய்து மணப்பாறை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரனை நடத்தியதில் ஜே.சி.பி. இயந்திரம் சீகம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

பின்னர் இது குறித்து வழக்குபதிவு செய்த மணப்பாறை காவல்துறையினர் தப்பியோடிய ஜே.சி.பி.ஒட்டுனர், உரிமையாளர், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட பொன்னுச்சாமி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.