Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காந்தி மார்க்கெட் ரூ.50 கோடியில் தரம் உயர்த்தப்படும். அமைச்சர் கே என் நேரு பாலக்கரை கூட்டத்தில் பேச்சு.

0

திருச்சி காந்தி மார்க்கெட் ரூ.50 கோடியில் தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கே.என்.நேரு பாலக்கரை சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசினார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், திருச்சி கிழக்குத் தொகுதியான எடத்தெரு அண்ணா சிலை அருகில் பாலக்கரை பகுதி செயலாளர் டி.பி.எஸ்.எஸ். ராஜா முகமது தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் தலைமை கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக அமைச்சருமான கே.என் நேரு பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாநகரம் மிகப்பெரிய வளர்ச்சியை காண இருக்கிறது. சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய் வசதி, உய்யகொண்டான் கால்வாயை சீரமைத்து 20 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் எவ்வாறு அதில் குளித்து மகிழ்ந்தார்களோ, அதேபோல மீண்டும் உருவாக்கப்படும்.

மேலும் திருச்சி காந்தி மார்க்கெட் தரம் உயர்த்த ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் திருச்சியில் டிரேட் சென்டர் மற்றும் மிகப்பெரிய ஸ்டேடியம் அமைய உள்ளது. அதுபோல் திருச்சி பழைய பால் பண்ணையில் இருந்து துவாக்குடி வரை சர்வீஸ் சாலையோ அல்லது மேம்பாலமோ போக்குவரத்து வசதிக்காக இன்னும் 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்.

தற்போது தி.மு.க. தலைமையிலான மு.க. ஸ்டாலின் ஆட்சியில் மழை மும்மாரி பொழிந்து வருகிறது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் 12-ந் தேதி தான் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது மழை பொழிந்து அதிக அளவில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. எனவே, ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவே அணையை திறக்க வாய்ப்பு உள்ளது.

திருச்சி மாநகரம் வளர்ச்சிப்பெற மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை கேட்டுப் பெறுவோம்.
இவ்வாறு கே.என்.நேரு பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில்,

‘‘திராவிட மாடல் என்றால் சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி, சுயாட்சி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை. இந்த அடிப்படையில் தான் முதலமைச்சர் ஆட்சி செய்கிறார்.

ஏப்ரல் மாதம் டெல்லிக்கு சென்றிருந்த போது, அங்குள்ள பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து டெல்லி முதலமைச்சரும், டெல்லி பள்ளி கல்வி துறை அமைச்சரும் விளக்கினார்கள்.

அப்போது தமிழ்நாட்டின் கல்வி துறை செயல்பாடுகள் குறித்து நம் முதலமைச்சர் என்னிடம் அவர்களிடம் விளக்கி கூற சொன்னார். நான் சொன்ன போது இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து மிகுந்த ஆச்சர்யமாக பார்த்து பாராட்டினார்கள். இது நம் ஆட்சியின் ஒரு படி சோறுக்கு ஒரு சோறு பதம் போல தான்‘ என்றார்.

கூட்டத்தில் டாக்டர மா.எழிலன் எம்.எல்.ஏ., தலைமைக் கழகப் பேச்சாளர்கள் தமிழன் பிரசன்னா, தமிழ்தாசன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் கோட்ட தலைவர் மதிவாணன்,பகுதி செயலாளர் இ.எம். தர்மராஜ்,நீலமேகம், மணிவேல், இப்ராகிம், தினகரன், பி.சி.எடிங்டன் மற்றும்

இக்கூட்டத்தில்
திரளான தி.மு.க.வினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.