Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேசிய அளவிலான எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவர்களுக்கு திருச்சியில் சிறப்பான வரவேற்பு,

0

தேசிய அளவிலான எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் தங்கபதக்கம் வென்றனர்.

தேசிய அளவிலான எட்டாவது
எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் ,
கல்யாண் பகுதியில் மே மாதம்,6தேதி முதல் 8தேதி வரை நடைபெற்றது.

இப்போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து விளையாட்டு வீரர்கள் கலந்துக்கொண்டு
விளையாடினர்.

தமிழ்நாடு எரோஸ்கேட்டோ பால்
சங்க தலைவர் ராகேஷ் சுப்பிரமணியன்
தலைமையில்,சங்க செயலாளர் பிரவீன் ஜான்சன் மேற்பார்வையில்,
தமிழ்நாட்டு அணியின் தலைமை பயிற்சியாளர் அபுதாஹிர் வழிகாட்டுதலின்படி,12 வயதிற்கு உட்பட்ட அணிக்கு தமிழ்நாட்டில் சிறந்த
முறையில் விளையாடக்கூடிய 9 விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து சிறப்பாக பயிற்சி அளித்து,
தேசிய அளவிலான போட்டியில்
மகாராஷ்டிரா மாநிலம் சென்று
பங்குபெற்று, திறம்பட விளையாடி
தேசிய அளவில்
முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்,

வெற்றி பெற்ற மாணவர்கள் தமிழகத்தின் சார்பாக ஆசிய அளவில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வெற்றி பெற்று திருச்சி திரும்பிய மாணவர்களுக்கு எரோஸ் கேட்டோ பால் பெடரேஷன் ஆப் இந்தியா தமிழ்நாட்டு அணியின் தலைவர் , செயலாளர் , பயிற்சியாளர் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டி இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்று
பரிசளித்து வாழ்த்தினர்.

பின்னர் தமிழ்நாடு எரோஸ்கேட்டோ பால் சங்க தலைவர் ராகேஷ் சுப்பிரமணியன் கூறுகையில்
எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டி கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற போது தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து வீரர்களும் அனைத்து பிரிவிலும் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்று வந்தோம், அதுபோன்று இப்பொழுது மே மாதம் 6 முதல் 8ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 12 வயதுக்குட்பட்ட அணி தமிழகத்திலிருந்து சென்ற சிறப்பாக விளையாடி முதலிடத்தை வென்று தங்கப்பதக்கத்தை பெற்று மீண்டும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர்.

வெற்றிக்கு பெரிதும் துணையாக இருந்த தமிழ்நாடு எரோஸ்கேட்டோ பால் சங்கத்தின் செயலாளர் , பயிற்சியாளர் மாணவர்களை சிறப்பாக பயிற்சி அளித்து சிறப்பாக விளையாட செய்துள்ளனர்,

தமிழ்நாடு அணியின் தலைமை பயிற்சியாளர் அபுதாஹீர் பெரிதும் துணை புரிந்துள்ளனர் என்பதை இந்த தருணத்தில் பதிவு செய்கிறேன்.

நம் விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களின் கோட்பாடு கிணங்க பயிற்சி பெற்று சிறப்பாக விளையாடி பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள் பங்கு பெற்ற தேசிய அளவிலான எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை படித்து வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விரைவில் கல்வித்துறை அமைச்சர் மற்றும் நம் விளையாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து நம் மாணவர்களின் வெற்றியை அவர்களிடம் தெரிவித்து அவர்களுக்கு தகுந்த அங்கீகாரத்தை பெற்றுத் தர இருக்கிறோம்.

மேலும் தற்போது வெற்றி பெற்றுள்ள விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டில் விளையாடுவதற்காக தமிழக அணியில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்பதையும் பெருமையுடன் இத்தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்,

இவர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட தமிழ்நாடு அரசு தகுந்த உதவிகளையும் எங்களுக்கு ஊக்கத்தையும் அளித்து மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டுவெற்றி பெற உறுதுணையாக இருந்து உதவி செய்திட வேண்டும், மேலும்
ஸ்கேட்டிங் அணிந்துகொண்டு விளையாடக்கூடிய இந்த எரோஸ்கேட்டோ பால் விளையாட்டை தமிழ்நாடு எஸ் டி, ஏ டி பிரிவில் சேர்த்து அங்கீகரிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு துறையை தமிழ்நாடு எரோஸ்கேட்டோ பால் சங்கத் தலைவராக பணிவன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த தமிழ்நாடு அணியின் தலைமை பயிற்சியாளர் அபுதாஹிர் சங்கத்தின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக இத்தருணத்தில் அறிவித்து பெருமைப்படுகிறோம் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.