வாசிப்போர் களம் சார்பில் திருச்சியில் வரும் 29 ஆம் தேதி கருத்தரங்கம்.
தொல்.திருமாவளவன் பங்கேற்பு.
திருச்சி வாசிப்போர் களம் சார்பில் ஆணவ படுகொலைகளும், இந்துத்துவ கோட்பாடும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வருகிற 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள சீனிவாசா மகாலில் நடக்கிறது.
கருத்தரங்கத்திற்கு அகில இந்திய பி.எஸ்.என்.எல் ஓய்வுபெற்ற அதிகாரிகள் சங்கத்தின் மாநில செயலாளரும், வாசிப்போர் களத்தின் ஒருங்கிணைப்பாளருமான காமராஜ் தலைமை தாங்குகிறார்.
வழக்கறிஞர்கள் கார்த்திக் ,அருண், செல்வகுமார், மௌனிஷ்,
வாசிப்போர் களத்தின் நிர்வாகிகள் சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
வாசிப்போர் களத்தின் அமைப்பாளர் மதுரை கருப்பையா வரவேற்று பேசுகிறார்.
கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கலந்துகொண்டு கருத்துரை வழங்குகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு ஸ்ரீதர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு முன்னாள் உறுப்பினர் செல்வராஜ்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.
ஆணவ படுகொலைக்கு எதிராக வழக்கு நடத்தி வென்றதற்காக வழக்கறிஞர் மோகன் பாராட்டு பெறுகிறார். தொடர்ந்து கவிஞர் துரை. சண்முகத்தின் யாதும் ஊரே யாவரும் கூலி என்ற கவிதை நூல் வெளியிடப்படுகிறது. முடிவில் அகில இந்திய பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் அசோக் குமார் நன்றி கூறுகிறார்.