Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மர ஆர்வலர்களின் மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு.

0

மரம்-மழை-மகிழ்ச்சி மர ஆர்வலர்களின் மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு.

Trees Trust, தாமஸ்,
விதைகள் யோகநாதன் ,
தண்ணீர் அமைப்பு கே.சி. நீலமேகம், ஆகியோர் முவரும் இணைந்து திருச்சி பிரஸ் கிளப்பில் அளித்த போட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தை பசுமை பூமியாக மாற்றுவதற்கு எந்த பிரதிபலனும் பாராது உண்மையாக உழைத்து, அதிக மரங்களை நட்டு புனிதமான சேவை செய்து வரும் மர ஆர்வலர்களின் மதிப்பு உயர்ந்ததாகும். இச்சேவை செய்ய பொருள், பணம் அவர்களிடத்தில் இல்லை என்றாலும் இவர்களின் சொந்த முயற்சியால் மரங்களை வளர்ப்பது பாராட்டுகள் மற்றும் பரிசுகளுக்கு அப்பாற்பட்டவை.

ஆனாலும் இவர்களை பாராட்டுவதும், மதிப்பளிப்பதும் நமது கடமையாகும். எனவே இவர்களை ஒன்றிணைத்து ஓர் அமைப்பாக உருவாக்கி, மர ஆர்வலர்களை ஊக்குவிப்பதற்கும், தமிழகத்தில் அழிந்து வரும் மர இனங்களை மீட்கவும், அதிக மரங்களை வளர்க்க திட்டமிடவும், மாநில அளவில் மரங்களை பாதுகாக்கவும், வெட்டுவதை தடுக்கவும் ,மாநில அளவில் மரங்களை பாதுகாப்போர் இயக்கம் தொடங்கவும் . மர ஆர்வலர்களுக்கான ஒரு கருத்தரங்கு நடத்துவது என முடிவெடுத்துள்ளோம்.

மரம் வளர்க்கும் நாம் மூன்று பிரிவுகளாக சேவை செய்து வருகின்றோம்

1.பலன்கள் தரம் மரங்கள் : (Commercial Plantation) நமது நிலத்தில் லாப நோக்கில் மரம் வளர்க்க அதற்கான வல்லுனர்களின் உதவியை பெற முயற்சி எடுத்தல்.

2.மரங்கள் தரும் பலன்கள்: (Social Forest) பல்வேறு பயன் தரும் மரங்களை தனியாக, குழுவாக நட்டு மனித சமுதாயம் பயனுற வேண்டும் என்ற தியாக உள்ளத்துடன் சொந்த பணத்தை செலவு செய்து வரும் மரம் வளர்ப்போர்களுக்கு தேவையான உதவிகளை செய்து ஊக்குவித்து ஒருங்கிணைப்பது.

3. அரியவகை மரங்கள் மீட்டெடுப்பு : (Endangered Tree Species)

அழிந்து போன, மறையும் நிலையில் இருக்கும்

அரியவகை மரங்களை தேடி கண்டுபிடித்து அடுத்த தலைமுறைக்கு அந்த மரங்களை கொண்டு செல்ல குழுவாக செயல்பட செய்வது.

ஆகவே மரம் வளர்க்கும் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி, உறுதியான இயக்கமாக மாற்ற மர ஆர்வலர்களின் மாநில மாநாடு வரும் 21-05-2022 சனிக்கிழமை மற்றும்
22-05-2022 ஞாயிற்றுகிழமை
இரு நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

ஸ்ரீ கிருஷ்ண மஹால்
204, கீழ உத்திர வீதி, ஸ்ரீரங்கம், திருச்சி-6.
(வெள்ளைக் கோபுரம் அருகில்)
நடத்த ஏற்பாடு செய்து உள்ளோம்.

மாநாட்டில் சிறப்புரையாற்ற இருக்கும் வல்லுநர்கள்:

பிரசன்னா, ஜஏஎஸ்.,
செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மருத்துவக் கல்வி மற்றும் ஆணையர் மருத்துவ சேவைகள். சத்தீஷ்கர் மாநிலம்

பிரவீன் பி. நாயர், ஜஏஎஸ், இயக்குனர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, சென்னை.

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐ.ஏ.எஸ், ஆட்சியர், தஞ்சாவூர் மாவட்டம்.

பிரதீப் குமார், ஐ.ஏ.எஸ்,
இணை மேலாண்மை இயக்குனர். தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சென்னை.

முனைவர், இரா.கிருஷ்ணசாமி
கண்காணிப்பு பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை, திருச்சி

முனைவர். நரசிம்மன் தாவரவியல் துறைத் தலைவர். ஓய்வு). சென்னை கிறிஸ்துவ கல்லூரி

முனைவர். இளங்கோவன் இயக்குனர். இன்னவோடெக்,

சிவராம் வனத்துக்குள் திருப்பூர்,
நாராயணசாமி
வேளாண் காடுகள் உழவர், உற்பத்தியாளர் சங்கம், ஓசை காளிதாஸ் சுற்றுச்சூழல் அமைப்பு, கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள் .

ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.

நிகழ்வில் தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு ஆர்.கே.ராஜா கலந்துக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.