Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் கழுதையிடம் மனு அளிக்க வந்து மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

0

 

சாலைகளை சீரமைக்க தவறிய
மாநகராட்சி ஆணையரை கண்டித்து மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பா.ஜ.க. வினர் முற்றுகைப் போராட்டம்.

திருச்சி
மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சியின் பிரதான சாலைகளில் உள்ள குண்டும் குழியுமாக மற்றும் மோசமான நிலையை பலமுறை சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி ஆணையரை கண்டித்து இன்று மாநகராட்சி முன்பு கழுதையிடம் மனு அளிக்கும் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் காவல்துறை அனுமதி அளிக்காத காரணத்தினால் மாநகராட்சி முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது .

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.
மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.பி. முரளிதரன், கௌதம் நாகராஜன்,
மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஒண்டிமுத்து, தண்டபாணி, காளீஸ்வரன் பொருளாளர் செல்லத்துரை, மாவட்ட துணைத்தலைவர் இந்திரன், நாகேந்திரன், பார்த்திபன், யசோதன்,சங்கீதா , மண்டல் தலைவர் சதீஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில பொறுப்பாளர்கள் கிரிஜா மனோகரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் ஏ.ஆர். பாட்ஷா, செந்தில் ,ராஜ் திலக் ,ஜீ.டி தினகர் , ஊடகப்பிரிவு வாசன் வேலி சிவகுமார் , லீமா சிவக்குமார்,
அழகேசன், ஜெயகர்ணா, வேளாங்கண்ணி, மணிமொழி தங்கராஜ், கார்த்திகேயன், அரசு நேதாஜி, பார்த்தசாரதி மண்டல தலைவர்கள் அழகர்சாமி, ஈஸ்வரன், தர்மராஜ், மகேந்திரன் ,
பரஞ்சோதி பரமசிவம் ,
சிவகுமார், மல்லி செல்வம், சந்தோஷ் குமார் மற்றும் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.

கழுதையிடம் மனு அளிக்கும் போராட்டம் என்ற அறிவித்த கழுதை அங்கு கொண்டுவரப்படவில்லை. கழுதையிடம் மனு அளிக்கும் போராட்டம் என அறிவித்த காரணத்தினால் மாநகராட்சி முன்பு உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தின்போது மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
முடிவில் புருசோத்தமன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.