திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் .
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள 77 மாத அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் மறுநிர்ணயம் செய்ய வேண்டும். மாநில அரசு ஓய்வூதியர் உள்ளிட்ட அனைவருக்கும் 1.1.2022 முதல் 3 சதவிகித அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி ஒன்றிய ஓய்வூதியர்களுக்கு 18 மாதமும், மாநில ஓய்வூதியர்களுக்கு 24 மாதமும் உடனடியாக வழங்க வேண்டும்.
மின்வாரியம், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவக்காப்பீடு திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை தேர்தல் வாக்குறுதிகளின் படி அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி மத்திய, மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் தமிழ்மாநில ஒருங்கிணைப்புக்குழு திருச்சி மாவட்ட மையம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தீரன் சின்னமலை போக்குவரத்து அலுவலம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிராஜூதீன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலஅமைப்பு மாநில துணைப்பொதுச்செயலாளர் சண்முகம், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியம் சங்க மாவட்ட தலைவர் செந்தமிழ்செல்வன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூபெற்றோர் நலஅமைப்பு மாநில துணைத்தலைவர் பஷீர்,
ஓய்வுப்பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலசங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், அகில இந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்க மாநில உதவி பொதுச்செயலாளர் செல்வன், அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் தேவராஜ் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலஅமைப்பு மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.