Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வணிக சொந்தங்கள் அணியணியாய் பங்கேற்க வேண்டும்.திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு தலைவர் கந்தன்.

0

வணிக சொந்தங்கள் அணி, அணியாய் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் .
திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்புத் தலைவர் எஸ் கந்தன் அழைப்பு.

திருச்சியில் 39 -வது வணிகர் தினத்தையொட்டி நாளை (மே 5-ந் தேதி) தமிழக வணிகர் விடியல் மாநாடு சமயபுரம் டோல்கேட் அருகில் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள். முக்கால் நூற்றாண்டை எட்டிய முன்னாள் ராணுவ வீரன் நான். நாட்டை காக்கும் பெரும் பொறுப்பை இன்முகத்தோடு இளம் வயதில் ஏற்றுக்கொண்டு பணியாற்றிய நான், ஓய்வுக்குப் பின் நாட்டு நலன் காக்கும் நற்பணியில் இன்றளவும் ஈடுபட்டு வருகிறேன் .தமிழக வணிகர்கள் மத்தியில் இன்று தழைத்தோங்கி நிற்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை (5-ந் தேதி) 39 -வது வணிகர் தின மாநில மாநாடு திருச்சியில் நடைபெற இருக்கிறது .முதல் மாநாடு தொடங்கி 39 -வது மாநாடு வரை பணியாற்றும் வாய்ப்பை பெற்ற வெகு சிலரில் நானும் ஒருவன். வணிகர் சங்கப் பணிகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கியது முதல் வணிகர் சங்கத்தின் கிளைகளை ஊர்கள்தோறும் உருவாக்கும் பொறுப்பை நானே எடுத்துக் கொண்டு ஏராளமான கிளை சங்கங்களை உருவாக்கி கொடுத்துள்ளேன் .இந்த கிளைச் சங்கங்கள் அனைத்தும் இன்றளவும் துடிப்புடன் இயங்கி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

திருச்சியில் வணிகர்களுக்கும், சுமைப்பணி தொழிலாளர் களுக்கும் இடையே சுமுகமான நல்லுறவு பேணி பாதுகாக்கப்படுவதோடு மட்டுமின்றி, தொழிலாளர்கள் மனநிறைவு கொள்ளும் வகையில் திருச்சி மாவட்ட சுமைதூக்கும் கூலித் தொழிலாளர்கள் சங்கம் உருவாக்கப்பட்டது .இதன் மூலம் ஊதியம், கடனுதவிகள் ,
சேமிப்பு திட்டங்கள், பண்டிகைக்கால ஊக்கப் பரிசுகள் என தொழிலாளர்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறார்கள். சுமைதூக்கும் பணியோடு நின்றுவிடாமல் அவரவர் தகுதிக்கும் ,திறமைக்கும் ஏற்ற வகையில் அவர்களின் விருப்பத்தின் பெயரில் மாற்று தொழில்களிலும் ஈடுபடுத்தப்பட்டு ,கூடுதல் வருமானத்திற்கு வழி வகை காணப்பட்டு வருவதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றி வருகின்றனர் .திருச்சி மாவட்டத்தில் ஏழை, எளிய,நடுத்தர மக்களின் அவசரகால உதவியாக கருதப்படும் நகை அடகு பிடிக்கும் தொழில் செய்வோர் பல்வேறு சங்கடங்களை சந்தித்து வந்தனர் .இதுமட்டுமன்றி சான்றிதழ் புதுப்பித்தல், காலம் கடந்தும் மீட்கப்படாத நகைகளை ஏலம் விடுவதற்கான நடைமுறைகளை பின்பற்றி மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி வந்தனர்.

இவர்களுக்கு உதவும் பொருட்டு நான் அமைப்பாளராக இருந்து உருவாக்கியுள்ள அமைப்பு தான் திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு. எந்தவித சிறு தவறுகளுக்கும் இடம் அளிக்காமல் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் அடகு பிடிக்கும் தொழிலை மேற்கொள்ள திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் சங்கம் அயராது பாடுபட்டு வருகிறது. திருச்சி மாவட்ட சங்கத்தின் செயல்பாடுகளை அறிந்து அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தோர் திருச்சி மாவட்ட அமைப்போடு இணைந்து பயணிக்க முன்வந்துள்ளனர். விரைவில் மாநில சங்கமாக உருவாகும் வண்ணம் செயல்பாட்டு எல்லைகளை விரிவுபடுத்தி வருகிறோம்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோரது தலைமையில் பேரமைப்பின் திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர்,திருச்சி வெங்காயம் தரகு மண்டி வர்த்தக சங்கத் தலைவர் வெள்ளையன், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் நல்லுச்சாமி ஆகியோரது வழிகாட்டுதலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு,திருச்சி மாவட்ட சுமைதூக்கும் கூலித் தொழிலாளர்கள் சங்கம்,திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு ஆகியவற்றின் வெற்றி பயணம் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.கந்தன் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.