திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா நடுநிலைப்பள்ளியில் ஊர்கூடி கல்வித் திருவிழா, மாணவர் சேர்க்கை தொடக்கவிழா, பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
இவ் முப்பெரும் விழாவில், பள்ளியின் சுற்றுப்பகுதியில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களை சிறப்பு அழைப்பாளராக அழைத்து ஊர்கூடி கல்வித் திருவிழா நிகழ்ச்சியின் மூலமாக மாணவர்கள் சேர்க்கை குறித்து பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்,
அதனைத் தொடர்ந்து பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் நிகழ்ச்சி,பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் நிகழ்ச்சியாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்விமணி, பள்ளி மேலாண்மை குழு தலைவி அமுதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
- இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சைவராஜ் வரவேற்புரையாற்றினார். செயலர் கஸ்தூரிரங்கன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொருளாளர் கிரி முன்னிலையில் வட்டார கல்வி அலுவலர்கள் மருதநாயகம், ஸ்டான்லி ராஜசேகர், மேற்பார்வையாளர் மீனா ,ஜெயசுதா, ஹேமா,பெல்சிட்டா மேரி, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர். பசுமை காலம் அறக்கட்டளை ரம்யா மணிகண்டன்,
தேவி மற்றும் தன்னார்வலர்கள் சரண்யா, கௌசல்யா ,
பத்மாவதி ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தினி, கௌரி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
நிகழ்ச்சியின் இறுதியில் இடைநிலை ஆசிரியை ஸ்ரீவித்யா நன்றியுரையாற்றினார்.