Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய (23-04-2022) ராசி பலன்கள்

0

இன்றைய (23-04-2022) ராசி பலன்கள்

மேஷம்
ஏப்ரல் 23, 2022

பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். தந்தைவழி உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். உத்தியோக பணிகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். பயணங்கள் கைகூடும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

அஸ்வினி : லாபம் உண்டாகும்.

பரணி : முன்னேற்றம் ஏற்படும்.

கிருத்திகை : உதவி கிடைக்கும்.
—————————————

 

ரிஷபம்
ஏப்ரல் 23, 2022

சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கற்றலில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். பயணங்களின் மூலம் ஆதாயமும், லாபமும் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

கிருத்திகை : செல்வாக்கு மேம்படும்.

ரோகிணி : மாற்றம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
—————————————

 

மிதுனம்
ஏப்ரல் 23, 2022

பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். வியாபார பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

மிருகசீரிஷம் : காலதாமதம் உண்டாகும்.

திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

புனர்பூசம் : பொறுப்புகள் மேம்படும்.
—————————————

 

கடகம்
ஏப்ரல் 23, 2022

கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். கூட்டாளிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் அமைதியும், நிம்மதியும் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

பூசம் : ஒத்துழைப்பான நாள்.

ஆயில்யம் : நிம்மதி உண்டாகும்.
—————————————

 

சிம்மம்
ஏப்ரல் 23, 2022

மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் நன்மை ஏற்படும். புதிய நபர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

மகம் : தெளிவு கிடைக்கும்.

பூரம் : நன்மை ஏற்படும்.

உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
—————————————

 

கன்னி
ஏப்ரல் 23, 2022

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பை மேம்படுத்த முடியும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உழைப்பு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

உத்திரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

அஸ்தம் : சேமிப்பு மேம்படும்.

சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
—————————————

 

துலாம்
ஏப்ரல் 23, 2022

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உதவி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

சித்திரை : அனுபவம் கிடைக்கும்.

சுவாதி : முடிவு ஏற்படும்.

விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
—————————————

 

விருச்சிகம்
ஏப்ரல் 23, 2022

புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தனவரவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். நன்மை நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

விசாகம் : வெற்றிகரமான நாள்.

அனுஷம் : முயற்சிகள் சாதகமாகும்.

கேட்டை : போட்டிகள் விலகும்.
—————————————

 

தனுசு
ஏப்ரல் 23, 2022

பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வாக்கு சாதுர்யத்தின் மூலம் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கல்கள் அகலும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

 

மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூராடம் : நம்பிக்கை ஏற்படும்.

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————

 

மகரம்
ஏப்ரல் 23, 2022

உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக செயல்படவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபார பணிகளில் மந்தத்தன்மையும், அலைச்சலும் ஏற்படும். காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். சுகமான நாள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.

திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.

அவிட்டம் : புரிதல் ஏற்படும்.
—————————————

 

கும்பம்
ஏப்ரல் 23, 2022

உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் லாபம் மேம்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

அவிட்டம் : கவனம் வேண்டும்.

சதயம் : லாபம் மேம்படும்.

பூரட்டாதி : சாதகமான நாள்.
—————————————

 

மீனம்
ஏப்ரல் 23, 2022

மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். தெளிவு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

உத்திரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.

ரேவதி : மாற்றம் உண்டாகும்.
—————————————

Leave A Reply

Your email address will not be published.