Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி. மேற்கிந்தியதீவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

0

 

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.

நியூசிலாந்தில் நடந்து வருகிறது.

ஹாமில்டனில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசுடன் விளையாடி வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கவீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவருக்கு பக்கபலமாக நின்ற ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக விளையாடி 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இது உலக கோப்பை தொடரில் அவருடைய 4-வது சதமாகும்.

அவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 184 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். இதனால் இந்திய அணி 300 ரன்களை கடந்து சிறப்பான ஸ்கோரை எட்டியது.

இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்தது.

பின்னர் 318 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 40.3 ஓவரில் 162 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனைகள் டியான்ட்ரா டாட்டின் 62 ரன்களும் ஹெய்லி மேத்யூஸ் 43 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் ஸ்நேஹ் ராணா 3 விக்கெட்டுகளையும், மேக்னா சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கோஸ்வாமி, ராஜேஷ்வரி கெய்க்வாட் மற்றும் பூஜா வஸ்திராகர் தல 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிரிதி மந்தனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய பெண்கள் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.