Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறையில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா.பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெகு விமர்சியாக நடைபெற்றது.

0

மணப்பாறையில் வடமாடுமஞ்சுவிரட்டு விழா
பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை காட்டுப்பட்டியல் தொடர்ந்து பல ஆண்டுகலாக நடைபெற்று வரும் வடமாடு மஞ்சுவிரட்டு விழா மிக விமர்சியாக நடைபெற்றது.

விழாவிற்கு அதிமுக திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மணப்பாறை வட்டாட்சியர் சேக்கிழார், முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.சந்திரசேகர், செ.சின்னச்சாமி, மணப்பாறை நகர்மன்ற தலைவர் பா.சுதா பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை. உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 காளைகள் களம் இறக்கப்பட்டு பல்வேறு ஊர்களில் இருந்து காளைகளை அடக்க மாடுபிடிவீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர்.

14 காளைகள் களம் கண்ட வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் ஒவ்வொரு காளைகளையும் 9 பேர் கொண்ட குழுவினர் காளைகளை அடக்கினர் இதில் ஒரு சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்கமால் வெற்றிபெற்றது. ஒரு சில காளைகளை அடக்கிய மாடு பிடிவீரர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி கெளரவித்தனர்.

காளைகள் முட்டியதில் 12 பேர் காயம்பட்ட நிலையில் இதில் சிங்கம்புனரி பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர் பாண்டி (25) என்ற இளைஞர் மாடு முட்டி வீசியதில் குடல் சரிந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பறிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இது பற்றி மணப்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்

விழாவிற்கான ஏற்பாடுகளை அதிமுக நகர செயலாளர் பவுன்.ராமமூர்த்தி, மணப்பாறை நகர்மன்ற உறுப்பினர்கள், எத்திராஜ், கௌசிக், ஆர்பர் சாய் சுரேஷ், மற்றும் சாய்பாபா கோவில் விழா குழுவினர், அதிமுக.நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

விழாவில் மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ஜனனி பிரியா , காவல் ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.