Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி 33வது வார்டில் குப்பை மேட்டில் வாழும் துப்புரவு பணியாளர்கள் கண்டுகொள்ளாத துணை மேயர் திவ்யா.

0

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சி 33வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக பிரதிநிதி தனகோடியின் மனைவி திவ்யா .

தனக்கோடி மற்றும் திவ்யா இருவருக்கும் கட்சி நிர்வாகிகள் யார் என கூட தெரியாது.ஆனால் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவினால் துணை மேயர் ஆனார் திவ்யா.

சாதாரண கவுன்சிலர் கூட யாரிடம் பேசி துப்புரவு பணியாளர்களை வரவழைத்து தங்களது வார்டுகளில் குப்பைகளைஅள்ளி சாக்கடைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .

துணை மேயரான திவ்யா தனது வார்டு தூய்மை பணியாளர்கள் அதிகம் குடியிருக்கும் பாலக்கரை செங்குளம் காலனி பகுதியில் குப்பை மேடாக காட்சி அளிக்கும் பகுதியில் ஒருநாள் கூட தூய்மை பணி மேற்கொள்ள வில்லை.

கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 4ஆம் தேதி துணை மேயராக பொறுப்பேற்ற பின்பும் கூட இதுவரை ஒருநாள் கூட தனது வீட்டில் இருந்து வெளியே வந்து பொதுமக்களின் குறைகள் பற்றி கண்டுகொள்ளவே இல்லை.

நமது வார்டுக்கு துணைமேயர் வந்துவிட்டார் நமது குறைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என எதிர்பார்த்த பொதுமக்களின் கனவுகள் பொய்த்துவிட்டது.

துணை மேயர் வீட்டில் தூங்கி கொண்டு இருக்கிறார் எப்போது விழித்து பொதுமக்களின் குறைகளை தீர்ப்பார் என்பது அப்பகுதி பொது மக்களின் எதிர்பார்ப்பு.

தனது வார்டு பொதுமக்களின் அடிப்படை குறைகளையே தீர்க்காத துணைமேயர் மாநகர் பொதுமக்களின் குறைகளை எப்படி தீர்த்து வைப்பார் ?

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு,மேயர் அன்பழகன் ஆகியோர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு.

Leave A Reply

Your email address will not be published.