Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 3 நாள் நடைபெறும் பிரக்யான் நிகழ்ச்சி.

0

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

என்.ஐ.டி. இயக்குனர்
அகிலா பேட்டியின் போது
கூறியதாவது:-

திருச்சி
மாவட்டம் துவாக்குடியில்
உள்ள தேசிய தொழில்நுட்பக்
கழகத்தில் என்.ஐ.ஆர்.எஃப்
2021 தரவரிசையில் , நாட்டின்
அனைத்து என்.ஐ.டிக்களிலும்
முதலிடத்தையும்,
பொறியியல் பிரிவில் 9ம்
இடத்தையும் ஒட்டுமொத்த
பிரிவில் 23ம் இடத்தையும்
பெற்றுள்ளது.

இந்த வியூகத்
திட்டமானது,
நெகிழ்வுத்தன்மைமிக்க
பாடத்திட்டத்தை
நடைமுறைப்படுத்தல்,
தொழிற்சாலைகளுடனான
கூட்டு முயற்சிக்கு வித்திட்டல்,
சிறந்த நிறுவனங்களில்
இருந்து
மதிப்பெண்
பரிமாற்றம்
மற்றும்
பலவற்றால் புதிய கல்வி
கொள்கை
2020வுடன்
ஏற்கனவே
ஒன்றியிருக்கிறது.

இதன்
ஒரு பகுதியாக திருச்சி
என்.ஐ.டி.யில்
மூன்று நாள் தொழில்நுட்ப
மேலாண்மை “பிரக்யான்”
நிகழ்வு நடைபெற உள்ளது .
“பிரக்யான்” கடந்த வருடம் முழுமையான
இணையவழி விழாவாக
மெட்டாவெர்ஸ் என்ற
National Institute of Technology, Trichy

கருப்பொருளில் நடத்தப்பட்டு,
முன்னுதாரணமாக
விளங்கியது. பிரக்யான்
டாக்ஸ் மற்றும் பேக் ஸ்டேஜ்
கேள்வி
பதில்
நிகழ்ச்சிகளில் புகழ்பெற்ற
பேச்சாளர்கள், அறிஞர்கள்,
ஆளுமைகள் பங்கேற்ற பல
ணைய வழி அமர்வுகளைக்
கொண்டிருந்தது. நெக்ஸஸ்
என்ற கருப்பொருளில், இந்த
ஆண்டின்
பிரக்யான்
ஹைபிரிட் முறையில் (நேரடி
மற்றும் இணையவழி
இரண்டிலும்) நடைபெற
உள்ளது.

இவ்விழாவின்
பிரக்யான்,
இவ்விரு
உலகங்களிடையே
ஒரு
நேர்மறையான
இணைப்பினை
ஏற்படுத்தவும்,
இரு
உலகங்களின்
நன்மைகளையும் எடுத்துக்
கொண்டு,
தொழில்நுட்பத்தைக்
கொண்டாட
விழைகின்றது.
இந்த
வகையில்
இந்த
ஆண்டிற்கான திருச்சி
பிரக்யான்
தொழில்நுட்ப மேலாண்மை
விழா  நாளை தொடங்கி மூன்று நாட்கள்
நடைபெற உள்ளது.

இதில்
பல்வேறு
மாநிலங்களைச் சேர்ந்த
மற்றும் வெளிநாடுகளைச்
சேர்ந்த மாணவ மாணவிகள்
ஆன்லைன் மூலமும்,
நேரடியாகவும் கலந்து
கொள்கின்றனர் என்று
இவ்வறு அவர் கூறினார்.

இச்சந்திப்பின் போதும் டீன்
குமரேசன், மாணவர் சங்க
தலைவர் மாதவ கலாவன்,
பேராசிரியர் பக்தவத்சலம்
ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.