திருச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வராஜின் 3ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்.
முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி தில்லைநகரில் உள்ள ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இரண்டு நாள் இலவச மருத்துவ முகாம் டாக்டர்.ராஜரத்தினம் டாக்டர். கலைச்செல்வி ராஜரத்தினம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
டாக்டர்கள் ராஜேஷ், அருண்பிரசாத், ராஜேஷ்குமார், மணிவேலன் ஆகியோர் பயனாளிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இம்முகாமில் கல்லீரல் சிகிச்சை, குழந்தையின்மைக்கான சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, இருதய சிகிச்சை மற்றும் நரம்பு எலும்பு நோய் சிகிச்சை பற்றி ஆலோசனைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் திரு உருவ படத்திற்கு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.