ஐ.சி.எப் பேராயம் தலைவர் ப.ஜான்
ராஜ்குமாருக்கு டாக்டர் சுப்பையா
பாண்டியன் சேவை ரத்னா விருது
வழங்கினார்.
திருச்சி ஐசிஎப் பேராயம்,
ஜே.கே.சி நிறுவனம் சார்பில்
கடந்த மார்ச் 21ஆம் தேதி
கிறிஸ்தவ போதகர்கள் மாநில
மாநாடு நடைபெற்றது .
இந்த மாநாட்டுக்கு நன்றி
செலுத்தும் ஜெபக் கூட்டம் நேற்று
மாலை திருச்சியில்
நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு
ஜே.கே.சி நிறுவனம், ஐசிஎப்
பேராயத்தின் தலைவர் முனைவர்
பா.ஜான் ராஜ்குமார் தலைமை
தாங்கினார்.
மாவட்ட
ஒருங்கிணைப்பாளர்
பேராசிரியர் அருள்
வரவேற்புரையாற்றினார்

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக
அனைத்திந்திய சித்த மருத்துவ
சங்கத் தலைவர் டாக்டர்.
சுப்பையா பாண்டியன்
கலந்துகொண்டு ஜே.கே.சி
அறக்கட்டளை மற்றும் ஐ.சி.எப்
பேராயத்தின் சார்பில் மாநாட்டு
தீர்மானமாக பிரதம பேராயராக
தேர்வு செய்யப்பட்ட முனைவர் பா.ஜான் ராஜ்குமாருக்கு சேவா ரத்னா விருது வழங்கி
கவுரவித்தார்.
இதில் ஜே.கே.சி கவுரவத்
தலைவர் பேராசிரியர் ரவிசேகர்,
பேராசிரியர் சந்திரசேகரன்,
பாஸ்டர்
இருதயராஜ்,
ஜே.ஜே.பாஸ்கர்,
ஏ.ஜே. பாஸ்கர், திருநங்கை
கஜோல் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜோசப் கண்
மருத்துவமனை சிற்றாலய ஆயர்
டேவிட் பரமானந்தம் அருளுரை
வழங்கினார்.
இதில் ஆடிட்டர்
ரிச்சர்ட் உட்பட ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை கிறிஸ்தவ மிஷன்
மருத்துவமனை
ஒருங்கிணைப்பாளர்கள். சிறப்பாக
செய்திருந்தனர்.