அக்குபஞ்சர் கவுன்சில் அமைக்க டாக்டர்.சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தமிழக அரசு
அக்குபஞ்சர்
கவுன்சில்
அமைக்க
வேண்டும்:
திருச்சி
கூட்டத்தில்
மருத்துவர்கள்
தீர்மானம்.
தமிழ்நாடு அரசு சார்பில்
அக்குபஞ்சர் கவுன்சில் அமைக்க
வேண்டும் என்று அக்குப்பஞ்சர்
மருத்துவர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு
கவுன்சில் சிறப்பு செயற்குழு
கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள்
தேர்தல் திருச்சியில்
நடைபெற்றது.
திருச்சி உறையூர் தியாகராய
நகர், நக்கீரன் தெருவிலுள்ள
தமிழ் ஹெர்பல்ஸ் அக்குபஞ்சர்
மையத்தில் நடைபெற்ற இந்த
கூட்டத்திற்கு தமிழ்நாடு
அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில்
தலைவர் டாக்டர்’
சுப்பையா பாண்டியன் தலைமை
வகித்தார்.
அகத்தியர்
டாக்டர் மகேஷ், டாக்டர்
அறிவழகன், டாக்டர் ஜான்
ராஜ்குமார், ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திருச்சி
மருத்துவர்கள் முனவர், ஹமீது
சுல்தான், கார்த்திக்,
சந்தானகிருஷ்ணன்,
சத்தியபாமா, சரவணகுமார்,
ரபீ
அகமது, ஆனந்தஜோதி, கல்பன
சீனிவாசன், விஜயகுமாரி,
சுமித்ரா, கணேசன், வையம்பட்டி
மருத்துவர்கள் பிரபு கிருஷ்ணா,
பழனியப்பன், கும்பகோணம்
மருத்துவர்கள் முகமது அலி,
உத்தமன், ஸ்ரீரங்கம் மருத்துவர்
சாய்ராம், தேனி மருத்துவர்
பாலசரஸ்வதி உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்:-
தமிழகம் முழுவதும் உள்ள 5
லட்சம் அக்குபஞ்சர்
மருத்துவர்களுக்கு தகுதி
அடிப்படையில் அங்கீகாரம்
வழங்க வேண்டும்,
தமிழக அரசு,
தமிழ்நாடு அக்குபஞ்சர் கவுன்சில்
அமைத்திடவேண்டும்.
தகுதியான அக்குப்பஞ்சர்
மருத்துவர்கள் அரசுமருத்துவமனையில் பணியில்
அமர்த்த வேண்டும் உள்ளிட்ட
தீர்மானங்கள் ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டன.