வேட்டைக்கு சென்ற வாலிபர் கிணற்றில் விழுந்து பலி.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கஸ்பா பொய்கைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் பிரகாஷ் (வயது 23) நேற்று இரவு நாகம்மாள் கோவில் அருகே வேட்டைக்கு சென்ற நிலையில் இருட்டில் கிணறு இருப்பது தெரியாமல் கிணற்றில் தவறி விழுந்தார்.
பலத்த காயத்துடன் பிரகாஷ் உறவினர்களால் மீட்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி இன்று காலை பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.