திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் பிரசித்தி பெற்ற ஒண்டி கருப்பண்ண சுவாமி, ராஜகாளியம்மன் கோவில் அமைந்து.உள்ளது.
இந்த கோவிலில் பாலஸ்தாபனம் மற்றும் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.
இதனையொட்டி நேற்று முன்தினம் காலையில் கோவிலில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து ஹோமம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சனம் எடுத்து வரப்பட்டது. மாலையில் முதல்கால யாக பூஜை நடந்தது.
இந்நிலையில் நேற்று காலை 2-ம் கால யாக பூஜையும், அதனைத் தொடர்ந்து பாலஸ்தாபனம் மற்றும் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.
ஒண்டிக்கருப்பண்ண சுவாமி மற்றும் ராஜகாளியம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி அனைத்தையும் கோயில் நிர்வாக குழு மற்றும் விழாகுழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர்.